வியாழன், 6 ஏப்ரல், 2017

தலையணை...





தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் பற்றி தெரியுமா?

• கழுத்து!

தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும்.

• சீரமைப்பு!

தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

• முக சுருக்கங்கள்!

தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது.

• மெல்லிய தலையணை!


நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்
.
• அடர்த்தியான தலையணை!

ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.

• தட்டையான தலையணை!

குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணைகள் சிறந்தது.இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும். மேலும், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக