ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

பங்குச் சந்தைக்கு நேரமாச்சு.. (தொடர்ச்சி)

அன்புடையீருக்கு வணக்கம்,

பங்கு வர்த்தகம் என்றால் என்ன என்பது தெரியாமலும் தெரிந்தும் அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது அதில் இலாபம் அதிக அளவில் கிடைக்குமா..???அல்லது நஷ்டம் தான் அதிகளவில் கிடைக்குமா..???இல்லை அதில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு பயனை நம்மால் அடைய முடியுமா என்ற எண்ணத்தோடு குழம்பி தவிப்போருக்கான ஒரு சிறிய தெளிவை  ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளை மட்டும் பார்த்து வருகிறோம்.இந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு வகைக்களாக பிரிக்கலாம் என்பதை பற்றி  காணலாம்.

Image result for share market photo in tamil


பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
                          01.  முதலீட்டாளர் (Investor)
                           02.  நாள்வணிகம் செய்வோர் (Day Trader) 

முதல் வகை - முதலீட்டாளர்  :

இவர்கள் பங்குகளில் முதலீடு செய்து தக்க சமயத்தில், (அதாவது, பங்கின் விலை அவர்கள் எதிர்பார்க்கும் அளவு உயரும்பொழுதோ, அல்லது அவர்களுக்குப் பணம் தேவையான பொழுதோ) விற்பனை செய்வர். இத்தகைய முதலீடுகள் குறுகிய கால முதலீடாகவோ, நீண்ட கால முதலீடாகவோ  இருக்கலாம். 


இரண்டாம் வகை - நாள்வணிகம் செய்வோர் :

இவர்கள் பங்குகளை அன்றே வாங்கி அன்றே விற்று லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள். இப்பங்குகளின் விலை உயரும் அல்லது சரியும் என்று நினைத்து அதற்கேற்றவாறு வணிகத்தில் ஈடுபடுவர். இதில் லாபம் சம்பாதிப்பது எவ்வளவு சுலபமோ அதே அளவு, போட்ட முதலை இழக்கும் வாய்ப்பும் அதிகம். மிகவும் கவனமாக விளையாட வேண்டிய அபாயகரமான விளையாட்டு இது.

அடுத்த வாரம் பங்குச் சந்தையில் எப்படி ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பது பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.நன்றி.

4 கருத்துகள்:

  1. என்னைப் போன்ற பாமரனுக்கும் விளக்கமாக பயனுள்ள தகவல் தருபவமைக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வருக அம்மா.தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சியோடு நன்றிகளை தெரிவிக்கிறேன் அம்மா.

      நீக்கு