செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஜியோஃப்ரி ச்சாசர்

                                     
                           
                                         ஜியோஃப்ரி ச்சாசர்
நவீன ஆங்கில காலம் ச்சாசருடன் தொடங்குகிறது.ஜியோஃப்ரி ச்சாசர்(Geoffrey Chaucer)1340ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் தந்தை ஒரு செழுமையான மது ஏற்றுமதியாளர்.1366ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்து இரு மகன்கள், ஒரு மகளும் பிறந்தனர்.நூறு வருட போரில் சிப்பாயாகவும் வின்சர் மன்னரிடம் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்தார்.1400ஆம் ஆண்டு இயற்கை எய்தி வெஸ்ட் மினிஸ்ட்டர் அபே(அ)பொயட்ஸ் கார்னர் என்ற இடத்தில் புதைக்கப்பட்டார்.
இவரது பணிகாலத்தை மூன்றாக பிரிக்கலாம்:
            1.ஃப்ரெஞ்ச் காலம்
            2.இத்தாலி காலம்
            3.ஆங்கில காலம்
ஃப்ரெஞ்ச் காலம்:
            ச்சாசரது ஆரம்பகால படைப்புகள் பெறும்பாலும் மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் பாடல்களாகவே அமைந்தது.அவை,
            1.ரொமன் டி லா ரோஸ்(தி ரொமான்ஸ் ஆப் தி ரோஸ்)
            2.தி புக் ஆப் டச்சசீ—இது பிலேன்ச் என்பவருக்கு எழுதப்பட்ட ஓர் இரங்கற்பாட்டு(elegy)
இத்தாலி காலம்:
இத்தாலியின் வருகயில் ஃப்ரெஞ்ச் தாக்கம் மறைந்தது.இக்கால தலைமை படைப்புகள்,
            1.lதி ஹவுஸ் ஆப் ஃஏம்     —முழுமையடையாத கற்பனை கதை
            2.ட்ராய்லஸ்அன்ட் க்கிரிசைட்—இது ச்சாசரது மிகச்சிறந்த இத்தாலி காலத்து படைப்பு.
ஆங்கில காலம்:

            இந்த காலத்தில் மிகச் சிறந்த இரு படைப்புகள் தந்திருக்கிறார். அவற்றுள்‘’க்கேன்ட்டர் பெரி ட்டேல்ஸ்’’(Canterbury tales)என்பது இவரது மிகச்சிறந்த படைப்பாகும்.இதில் ச்சாசருடன் 29பக்தர்கள் தாமஸ் பேக்கெட் என்பவரது கல்லரைக்கு பாதையாத்திரை சென்றனர்.மற்றும் ‘’தி நைட்ஸ் ட்டேல்ஸ்’’என்பதும் இவரது சாதனைப் படைப்புகளில் ஒன்றாகும்.

1 கருத்து: