தமிழ் எழுத்துக்கள்
முன்னுரை
தமிழ்
எழுத்துகளின் வகைகளையும் அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழ் எழுத்துக்களை உயிர்
எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என
இரண்டு வகையாக பிரிக்கலாம்.
உயிர் எழுத்துக்கள்
அ முதல் ஔ வரை
உள்ள 12 எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறோம். உயிர் இன்றி எந்த உயிரும்
உயிர் வாழ முடியாது, அதுபோல உயிர் எழுத்துக்கள் இன்றி எந்த எழுத்தையும் உச்சரிக்க முடியாது.
பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படையாக இருப்பதால் உயிர் எழுத்து எனப் பெயர் பெற்றது.
உயிர் எழுத்துக்களை தனியே ஒலிக்கலாம். உதாரணமாக அ-பசு, ஈ-உயிரினம்.
மெய் எழுத்துக்கள்
க் முதல் ன் வரை
உள்ள 18 எழுத்துக்கள் மெய் எழுத்துகள் எனப்படும். மெய் எழுத்துக்களை தனியே ஒலிக்க முடியாது.
தனியே ஒலித்தால் பொருள் தராது. க் தனியே ஒலித்தால் எந்த பொருளும் தராது. உயிர் இன்றி
மெய் இயங்காது.
க் என்ற மெய் எழுத்திற்கு
முன்னால் “இ” என்ற உயிரும் பின்னால் “உ” என்ற உயிரும் மென்மையாக சேரும் போது க் என்ற
மெய் எழுத்து தோன்றுகிறது.
உயிர்மெய்எழுத்துக்கள்
க முதல் ன வரை
உள்ள 216 எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எனப்படும். உயிரும் மெய்யும் சேர்ந்து
தோன்றுவது உயிர்மெய் எழுத்தாகும். க் என்ற மெய் எழுத்தோடு “அ” என்ற உயிர் சேர்ந்தால்
“க” என்ற உயிர்மெய் எழுத்து தோன்றுகிறது. இவ்வாறே பிற எழுத்துக்களும் தோன்றுகிறது.
மாத்திரை
உயிர் மெய் எழுத்தை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு மாத்திரை எனப்படும். ஒரு முறை கண்ணிமைக்கும்
நேரம் அல்லது ஒரு முறை கைநொடிக்கும் நேரம் ஒரு மாத்திரை எனப்படும். எழுத்துக்களுக்கு
ஏற்றார் போல் கால அளவு மாறுபாடுகிறது.
குறில் எழுத்துக்கள்
ஒரு எழுத்தை உச்சரிக்க
எடுத்துக் கொள்ளும் கால அளவு குறைவாக இருந்தால் அது குறில் எனப்படும். அ, இ, உ, எ, ஒ போன்ற எழுத்துக்கள் ஒலிக்க குறைந்த கால அளவு அதாவது ஒரு மாத்திரை கால அளவு
எடுத்துக் கொள்வதால் இது குறில் எனப்படுகிறது.
நெடில் எழுத்துக்கள்
ஒரு எழுத்தை உச்சரிக்க
எடுத்துக் கொள்ளும் கால அளவு அதிகமாக இருந்தால் அது நெடில் எனப்படும். ஆ, ஈ, ஊ, ஏ,
ஓ, ஔ போன்ற எழுத்துக்களை உச்சரிக்க அதிக கால அளவு அதாவது இருமாத்திரை கால அளவு எடுத்துக்
கொள்வதால் இது நெடில் எனப்படுகிறது.
மெய் எழுத்திற்குரிய
மாத்திரை
மெய் எழுத்துக்கள்
குறுகிய காலத்தில் மறைந்து விடும். மெய் எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால
அளவு அரை மாத்திரை ஆகும். உயிரும் மெய்யும் சேரும் போது உயிர் தெரியாது மெய் மட்டுமே
தெரியும். க் என்ற மெய் எழுத்தோடு அ என்ற உயிர் எழுத்து சேரும் போது க என்ற உயிர்மெய்
தோன்றும் க என்ற மெய்யே தெரியும். அ என்ற உயிர் எழுத்து தெரியாது.
ஆய்த எழுத்து
ஆய்த எழுத்து எப்போதும்
உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் தான் இருக்கும். அஃது என்ற சொல்லில் வருவது போல உயிர்மெய்
நடுவில் மட்டுமே ஆய்தம் இடம்பெறும். எனவே இது உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் வைக்கப்படுகிறது.
ஆய்த எழுத்து ஒலிக்க ஆகும் கால அளவு சில இடங்களில் ஒரு மாத்திரையாகவும் சில இடங்களில்
இரண்டு மாத்திரையாகவும் இருக்கும்.
முடிவுரை
இத்தகைய பாகுபாடு தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை எனலாம். தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இக்கட்டுரையில் தமிழ் எழுத்துக்களின் வகைகளையும் அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு பற்றியும் பார்த்தோம்.
பள்ளியில் படிக்கும் போது தமிழை [சரியாக] சொல்லிக் கொடுக்கவில்லை! உண்மையாக சொல்லவேண்டும் என்றால் மாத்திரைக்கு அர்த்தமே இப்போ தான் எனக்கு தெரியும்! தொடர்ந்து இப்படியே சிறு சிறு பகுதிகளாக எழுதுங்கள்.
பதிலளிநீக்குநன்றி!
நிச்சயமாக எழுதுகிறேன் ஐயா. தங்கள் மறுமொழிக்கு நன்றிகள் பல ஐயா.
நீக்குநல்ல தகவல் களஞ்சியம் சேமித்துக் கொண்டேன் சகோ நன்றி தொடர்கிறேன் - கில்லர்ஜி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு