திங்கள், 11 ஏப்ரல், 2016

ஏலாதி

                   Image result for ஏலாதி நூல்

முன்னுரை:

    பதிணெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் கணிமேதாவியர். இது 80 வெண்பாக்களைக் கொண்டது.ஏலம் முதலிய வாசனைப் பொருட்களை சேர்த்து தயாரிக்கும் மருந்தை ஏலாதிப்பொடி என்றும் ஏலாதிக் குளிகை என்றும் கூறுவர். இதை போன்று மனதிற்கு உகந்த நல்ஒழுக்கங்களை முதலாவதாக வைத்து புனையப்பட்ட பாடல்களை உடையதால் இது ஏலாதி எனப்பட்டது.

பெரியோர்க்கு உரிய தன்மைகள்:   
                   
தானே ஒருவனை கொலை செய்யாமல் இருத்தல். பிறர் கொலை செய்தலையும் விரும்பாதல், பொய் சொல்லாமல் இருப்பவர் பிறர் மனைவியை விரும்பாதவர். கீழ்மக்களுடன் சேர்தலை விரும்பாதவர். தீய சொற்களை பேசாமல் இருத்தல் ஆகிய இயல்புகள் பெருந்தன்மையில் பெரியவனுக்கு உரியனவாம்.

எளிது அரிது:

 சாவது எளிது, அரிது, சான்றாண்மை, நல்லது
 மேவல் எளிது, அரிது, மெய்போற்றல், ஆவதன் கண்
 சேறல் எளிது, நிலை அரிது, தெள்ளியர் ஆய்
 வேறல் எளிது, அரிது, சொல்.

விளக்கம்:

சாவது எளிது ஆனால் கல்வியில் சிறந்து விளங்குதல் அரிது திருமண வாழ்வை ஏற்பது எளிது ஆனால் பற்றற்ற ஒழுக்கத்தை காத்தல் அரிது. துறவறத்தின் கண் செல்லுதல் எறிது ஆனால் அதன் படு நடப்பது அரிது. எதனையும் சொல்லுதல் எளிது. ஆனால் தெளிந்து அதன்படி நடத்தல் அரிது.

நண்பர்களுக்கான ஆறு குணங்கள்:

 சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்
 நோதல், பிரிவில் கவறலே, ஓதலின்
 அன்புடையார்க்கு உள்ளன ஆறுகுணம் ஆக,
 மென் புடையார் வைத்தார் விரித்து
.
விளக்கம்:

 நண்பர்கள் இறந்தவிடத்து தாமும் துக்கம் தாங்காமல் இறத்தலும் அவர்களுக்கு பொருள்குடுத்து உதவி செய்தலும், இனசொல் கூறுதலும், அவர்களுடன் இருப்பதை விரும்புதலும், அவர்கள் வருந்தும்போது வருந்துதலும் , அவர்கள் பிரியும்போது, கலங்குதலும் ஆன ஆறு இயல்புகளும் நண்பர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும்.

மங்கையற்கு அறிவுரை:

 மையேர் தடங்கண் மயில் சாயலாய்!
 மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; பொய்யே
 குறளை, கடுஞ்சொல், பயன்இல் சொல்நான்கும்
 மறலையின் வாயினவாம் மற்று.

விளக்கம்:
 மைதீட்டிய அழகான பெரிய கண்கனையுடைய மயிலைப் போன்ற பெண்ணே! சான்றோர் மேன்மையான நற்சொற்களையும் மெய்யையும் மிகவும் பேசுவார்.பொய்யும் புறங்கூறலும் வன்சொல்லும் பயனில்லாத சொற்களும் ஆகிய இவை நான்கும் புல்லறிவு உடையான் வாயில் வருவனவாம்.

உதவ வேண்டியவர்கள்:
 தாய்இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி
 வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்
 கைத்தூண் பொருள் இழந்தார், கண்ணிலவாக்கு ஈந்தார்
 வைத்து வழங்கி வாழ்வார்

விளக்கம்:
தாயை இழந்த மகனுக்கும், தன் மணவனை இழந்த மனைவிக்கும், ஊமைக்கும், வாணிகத்தில் பொருள் இழந்தவர்க்கும், கண்ணில்லாத குருடர்களுக்கும் வேண்டுவன கொடுத்தவர்கள் பொருளை மிச்சமாய் வைக்காமல் தனக்கும், மற்றவர்க்கும் கொடுத்து உதவுவர்.


 முடிவுரை:

 இவ்வாறு வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை கணிமேதவியார் ஏலாதியில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக