என்னமோ பட்டப்படிப்பு
படிப்பது போல
தேவையானதை
எல்லாம் தயார் செய்ததும்!
அ, ஆ போட்டு போட்டு
பழகியதும்!
போகும்
வழியில் அனைவரிடமும் பள்ளிக்குச்
செல்வதை தெரியமாய்
கையசைத்து கூறியதும்! ஆனால்
பள்ளியில்
நுழைந்ததும் பயம் தொற்றிக்கொண்ட நிமிடங்களும்!
காதிற்கு கை எட்டவில்லை
என்றாலும் எட்டி எட்டி
காதை தொட்டு ஏமாற்றியதும்!
அம்மாவின் கையை
பற்றி இருக்கும் வரை
இருந்த அந்த நம்பிக்கை – ஆசிரியர் என்
கையை பிடித்து
கூப்பிடும் போது கண்ணீராய் கரைந்ததுமாக
இப்படி,
கண்களில் கண்ணீர் வடித்த அந்த
“ பள்ளி முதல் நாள்
” இன்று நினைத்தால்
இதழ்களில் புன்னகை தவழ்கிறது!
மனதை நெகிழ வைத்த அருமையான பதிவு.. இந்த பதிவை படிக்கும் போது நான் பள்ளி சென்ற முதல் நாள் என் நினைவுக்கு வருகிறது நன்றி தோழி.
பதிலளிநீக்கு