வியாழன், 9 ஜூன், 2016

எனது ஐயங்களுடன் மீரா.செல்வக்குமார் ஐயா..!!

இப்பதிவில் வலைப்பதிவர் மீரா.செல்வக்குமார் ஐயா அவர்களுடன் எனது ஐயங்களுக்கான விடையை காண உள்ளோம்..


1.பங்குச் சந்தையில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்..??எவ்வாறு அவர்கள் 
பங்கேற்பது..??

பான் கார்டும்,பேங்க் செக்கும் இருக்கும் யாரும் பங்குபெறலாம்...
ஊருக்குள் ஏகப்பட்ட பங்குவணிக தரகர்கள் இருக்கிறார்கள்..
ஒரு போன் செய்தால் போதும் வந்துவிடுவார்கள்.

2.பங்குகளுக்கும்,கடனீட்டுப் பத்திரங்களுக்கும் என்ன வேறுபாடுகள்..?? 

பங்கு நாம் பார்த்து லாபமோ நட்டமோ அடைவது...
கடனீட்டுப்பத்திரம் என்பது நமது பணத்தைக்கொண்டு அவர்களே வாங்கி விற்று நமக்கும் கொஞ்சம் தருவது..

3.பங்குகளுக்கு ஏற்ற இறக்கங்கள் என்பது எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது..?? 

பங்குகளின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும்..
சில பணமுதலைகள் தீர்மானிப்பதும்..
செம்மறியாட்டுக்கூட்டமாய் ஒருவர் வாங்கினாலும்,விற்றாலும் அதையே செய்வது, மற்றும் செய்திகளின் அடிப்படையில் நிகழ்வதும் உண்டு.

4.பங்குகள் வாங்குவதன் மூலமாகவும்  விற்பதன் மூலமாகவும் எவ்விதமான 
நட்டமும்,இலாபமும் பெற நேரிடும்..?? 

வாங்கக்கூடாத இடத்தில் வாங்குவதும்,விற்கக்கூடாத இடத்தில் விற்பதும் நட்டம் தானே தரும் எந்தத் தொழிலிலும்..அதுவே இதற்கும் பொருந்தும்.

5.பொதுவாக பங்குகள்  என்று குறிப்பிடுவது எவற்றை எல்லாம்..??சில 
உதாரணங்களும்,விளக்கமும்..?? 
இப்படி பொசுக்குன்னு கேட்டா எப்படிச் சொல்ல..
பங்கென்பது சில நிறுவனங்கள் தங்கள் விருத்திக்காக பொதுமக்களையும் சேர்த்துக்கொள்வது..
லாபத்தையும்,நட்டத்தையும் நமக்கும் தருவதாய் சொல்வது...
சரியாகச்சொல்வதெனில்...ஊரான் வீட்டு நெய்யே...என் பொண்டாட்டி கையே...போலத்தான்.

6. நெஃப்டி மற்றும் செபி இவற்றுகான வேறுபாடுகள்..??மும்பை பங்குச் சந்தை 
மற்றும் சென்னை பங்குச் சந்தைக்கான வேறுபாடுகள்  எதன் அடிப்படையில் 
வெளியிடப்படுகிறது..?? 
நிப்டி என்பது 50 கம்பெனி பங்குகளின் ஏற்ற இரக்கங்களைக்கொண்டு கணக்கிடப்படும் ஒரு புள்ளிக்கணக்கு.

செபி என்பது இந்திய பங்குச்சந்தையை கண்காணிக்கும்,கட்டுப்படுத்தும் ஒரு சுயேட்சையான அமைப்பு....

மும்பை,சென்னை சந்தை என்பதெல்லாம்
பெரிய வித்தியாசமில்லை.

7.பங்குச் சந்தையில் ஈடுபட நினைப்பவர்களுக்கு தங்கள் கருத்துகள்..?? 

பணமே பிரதானம்..
கப்பலில் மீன்பிடிக்கப்போனால் கப்பல் அளவுக்கு மீன் பிடிக்கலாம்.கட்டுமரம் எடுத்துப்போனால் அதன் அளவே பிடிக்க வேண்டும்...கட்டுமரம் அளவுக்கு பணம் கொண்டு கப்பல் அளவுக்கு மீன் பிடிக்க நினைத்தால்...
ஒருவேளை மீன் பிடிக்கலாம்...ஆனால் மீனும்,கட்டுமரமும் கரைசேர்வது உறுதியில்லை..

8.இன்றைய இளைய சமுதாயத்திற்கு தங்களின் அறிவுரையும் கருத்துகளும் என்ன..??

பங்கு வர்த்தகத்தைப்போல சிறந்த தொழில் வேறில்லை. சில அடிப்படை விதிகளைப்படித்தும்,தகுந்த முன்னெச்சரிக்கையோடும் செய்தால் அத்தனை ஆச்சர்யமான தொழில்..

ஆர்வம் மட்டுமே கொண்டு செய்து சுட்டுக்கொண்டு சந்தையை குறை சொல்தல்...ஆடத்தெரியாதவள் வீதி கோணலென்ற கதை தான்...

பங்கு வர்த்தகம்...
புரிந்து செய்தல் அவசியம்...


என்னுடைய ஐயங்களுக்கு பதிலளித்த  செல்வா ஐயாவுக்கு எனது அன்பு கலந்த  நன்றிகள்..

2 கருத்துகள்:

  1. கேள்விக்கேற்ற நல்ல கருத்துள்ள பதில்கள் அருமை.
    கவிஞருக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு