புதன், 8 ஜூன், 2016

ப்பால் ஆப் ஸ்பேரோ

                                        
           
                                                ப்பால் ஆப் ஸ்பேரோ
                                         --நா.கல்யாணி
ந.கல்யாணி ஒரு சிதந்திரமான பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளருமாவார்.அவரது படைப்புகள் அனைத்தும் சுற்றுசூழல் மற்றும் வணத்தில் ஏற்படும் சிக்கள்களை பற்றி எழுதி நாளிதழ்களுக்கு கொடுப்பார். இந்த கட்டுரையில் மரக்குருவிகள்(அ)சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவு பற்றி கூறியுள்ளார்.இக்குருவிகளைக் காட்டி அம்மா ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு சோர் பருகுவார்.ஆனார்,மனிதனால் நவீனமயமாக்கப்பட்ட இவ்வுலகில் அவை வாழவே இப்பொழுது போராடுகின்றன.


            இச்சம்பவங்கள் எழுத்தாளர் மனதில் சொகத்தை ஏற்படுத்தியதால் அவற்றை காக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்கின்றார்.இயற்கை கண்காணிப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கலெல்லாம்,இந்த எண்ணிக்கை குறைவை கவணிக்கின்றனர்.எழுத்தாளர் கல்யாணி குருவிகளின் தில்லி ஆராய்சியாளரான முனைவர்.நீராஜை குறிப்பிடுகிறார். மனித மனித வாழ்கையை தன் வாழ்கையுடன் இணைத்துக்கொண்டவை இந்த குருவிகள் ஆதலால்,சிறிய மாற்றத்தயும் ஏற்க தகாதது.
            வளமான எண்ணிக்கை கொண்ட கருவிகளே ஆரோக்கியமான சமுதாயத்திற்கான சான்று.சுற்றுச்சூழல் நிபுனர்களான மொகமத் திலாவர் மற்றும் முனைவர்.சேயினுதின் படாலி குருவிகள் பாதுகாக்கப்படவேண்டும் மற்றும் பிலிகளைப்போல குருவிகளும் அழிந்துவரும் இனம்(endangered specis) என்ற பட்டியலில் சேர்க வேண்டும் என்று கூறுகின்றார்.திலாவர் இதற்கெல்லாம் முக்கிய காரனமாக கிரீன் டிசார்ட்(green desert)குறிப்பிடுகிறார். இதில் அதிக படியான நச்சு பொருட்களும்,ரசாயணங்களும் சிறிய பூச்சுகளைக் கொள்வதால் குருவிகள் உணவில்லாமல் இறந்து போகின்றன.புறாக்கள் குருவிகளை விட அதிக உணவு உண்ணும்.அதும் இவைகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.மேலும் நாம் அன்றாடம் பயண்படுத்தும்3ஜி,அலைபேசி முதலியன தாக்கத்தால் வெகு வேகமாக சிட்டு முதல் வளர்ந்த குருவிவரை அடியுடன் அளிந்துபோகின்றன.
திரிந்த புல்நிலக்களின் அழிவு
இயற்கை செடிகளின் அழிவு

நச்சு பொருட்களின் பயண்பாடு போன்றவையே அவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக