பள்ளியின் நினைவுகளை ரோஜா மலராக
சூடியிருக்கும் உங்களுக்கு இந்த கல்லூரி
ரோஜா வனமாக அமைந்திட;
சுற்றி இருக்கும் அனைவரும் தோழியாக பழகிட;
வேப்பங்காயாய்
கசக்கும் தருணத்தையும்
வெல்லமாக இனிக்கும் தருணமாக மாற்றிட;
இந்த கல்லூரி வாழ்க்கையின்
ஒவ்வொரு நிமிடமும்
நீங்காத நினைவுகளாக மலர்ந்திட!
தாளம் பூவாய் மணந்திட!
இன்சுவை நல்கிட!
குயிலின் குரல் ஆரவாரத்தை கூட்ட
கைத்தட்டல்களையே
தாளமாக்கி! எங்கள் அன்பையே
மல்லிகை மலராகத் தூவி வரவேற்கிறோம்;
சகோதரியாக அல்ல
உங்கள் அன்பிற்குறிய தோழியாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக