திங்கள், 6 ஜூன், 2016

சர் விஸ்வேஸ்வரய்யா

                                                           
Image result for விஸ்வேஸ்வரய்யா


ஆங்கிலேயர் ஆட்சியில் இவரின் பொது சேவையை பாராட்டி இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது.
     சுகந்திர இந்தியாவில் மிக உயர்ந்த ‘ பாரத ரத்னா ’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் தலைசிறந்த பொறியியலாளர் ஆவார். இவரது நினைவாகவே செப்டம்பர் 15 ஆம் நாள் இந்தியாவில் “பொறியாளர் தினம்” கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் அன்றைய தினம் விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
     மைசூருக்குச் செல்பவர்கள் கிருஷ்ணராஜ சாகர அணைக்கட்டுக்குச் செல்லாமல் திரும்பி வரமாட்டார்கள். அதை உருவாக்கியவர் சர் விஸ்வேஸ்வரய்யா தான்.
     சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் முதல்முதலில் மின்சார உற்பத்தியை தொடங்கியவர் இவர் தான். மைசூர் சாண்டல் சோப் பேக்டரி தொடங்க காரணமாக இருந்தவர் இவர் தான்.
     பத்ராவதி இரும்பு உற்பத்தி தொழிற்சாலை, பெங்களூர் விவசாய பல்கலைக் கழகம், மைசூர் சர்க்கரை ஆலை போன்ற இன்னும் பல தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஆதரவு அளித்தார். ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் தொடங்குவதற்கும் ஆதரவு அளித்தார்.
     திருமலை - திருப்பதி சாலை அமைப்பதற்கும் முன்னின்று ஆலோசனைகள் வழங்கினார். பெங்களூரில் பொறியியல் கல்லூரி நிறுவ ஆதரவு அளித்தார். மைசூர் பல்கலைக் கழகம் நிறுவ காரணமாக இருந்தவரும் இவரே.
தற்போது ‘ கர்நாடகா ’ என்று வழங்கப்படும் மாநிலம் அவரது காலக்கட்டத்தில் மைசூர் மாநிலம் என்றே கூறப்பட்டு வந்தது. மைசூர் மாநிலத்தின் தந்தை என்று சர் விஸ்வேஸ்வராய்யா ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
அவரது பெயரால் பல பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவரது நூற்றாண்டு விழாவின் போது பெங்களூரில் “ விஸ்வேஸ்வரய்யா இண்டஸ்ட்ரியல் அண்ட் டெக்னாலஜிகல் மியூசியம்” என்று ஒரு மியூசியம் ஆரம்பிக்கப்பட்டது. பெங்களூர் செல்பவர்கள் தவறாமல் சென்று பார்க்கும் மியூசுயம் இது. இவர் படித்து பொறியியல் பட்டம் பெற்ற பூனா பொறியியல் கல்லூரியில் இவரது உருவச்சிலை நிருவப்பட்டுள்ளது.
உண்மை, உழைப்பு, நேர்மை, தேசபக்தி என்று வாழ்ந்தவர். மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். 1860 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1962 ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது அவருக்கு வயது 102 ஆகும்.
                           ( படித்ததில் பிடித்தது )


     

1 கருத்து: