புதன், 1 ஜூன், 2016

வலைத்தளம் ’திறப்பதற்கு’ அதிக நேரமாகிறதா..??





உங்கள் வலைத்தளம் (ஓபன்) திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா..??அப்படியானால் நீங்கள் படிக்க வேண்டிய விஷயமாக  இப்பதிவு அமையவுள்ளது.


நம்முடைய தளத்தை வேகமாக வைத்துக் கொள்வது நமது முக்கியப் பொறுப்பாகும்.ஏனென்றால் நம் தளத்துக்கு வரும் வாசகர்கள்,தறம் மெதுவாக இயங்கினால் அதை விரும்ப மாட்டார்கள்.அதனால் நம்முடைய வாசகர்களை நாம் இழக்க நேரிடும்.இந்த குறையைத் தவிர்க்க பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்.

முதலில் உங்கள் தளத்தில் உள்ள படங்களின் அளவைக் குறைக்கவும்.வாசகர்கள் வேண்டுமென்றால் பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்வார்கள்.

உங்கள் தளத்தில் ஏதேனும் flash-ல் உருவான விட்ஜெட் இருந்தால் நீக்கிவிடவும்.அது லோடு(load) ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

முடிந்தவரை பிளாக்கரின் default விட்ஜெட்களை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

உங்களுடைய தளத்தில் உள்ள அனைத்து விளம்பரப் பல கைகளையும் நீக்கி விடுங்கள்.தேவையென்றால் புதிதாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

உங்கள் தளத்தில் தேவையற்ற, தற்போது உபயோகிக்காத விட்ஜெட்களை கண்டறிந்து நீக்கிவிடவும்.

உங்களுடைய முகப்புப் பக்கத்தில் முழுப் பதிவும் தெரிவதற்குப் பதில் ஒரு ’மேலும் வாசிக்க’ என்ற லிங்க் கொடுக்கலாம்.

மேலே சொன்ன மாற்றங்கள் செய்தபிறகும் உங்கள் தளம் மெதுவாகத்தான் இயங்குகிறதா..??எந்த விட்ஜெட் லோடு ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது என்று அறியமுடிவில்லையா..??கவலையை விடுங்கள் உங்களுக்கு ஒரு தளம் உள்ளது.


அந்த தளத்துக்குச் செல்வதற்கான லிங்க் http://www.pingdom.com

அதில் கொடுக்கப்பட்டிருக்கும் காலி கட்டத்தில் உங்களுடைய தளத்தின் URL-ஐ கொடுக்கவும்.பிறகு அதற்கு அருகே உள்ள TestNow என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுடைய தளம் ஸ்கேன்(Scan) ஆகும்.அதில் HTML லிங்கும் ஸ்கேன் ஆகி வரும்.ஒவ்வொரு லிங்குக்கும்  நேராக மஞ்சள்,பச்சை நிறங்கள் அடங்கிய ’பார்’(bar) வரும்.அதன் மீது நம் சுட்டெலியின் கர்சரை வைத்தால் அந்த விட்ஜெட் லோடு ஆக எவ்வளவு நேரம் ஆனது என்று வரும்.இதுபோல் எந்த லிங்க் லோடு ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்று கண்டறிந்து அதை நம் தளத்தில் இருந்து நீக்கி விடலாம்.


12 கருத்துகள்:

  1. வைசாலி கை கொடுங்கள் செம பதிவு! மிக மிக பயனுள்ள பதிவு! மிக்க மிக்க நன்றி பகிர்விற்கு. இதோ நாங்கள் செய்து பார்த்துவிடுகின்றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா.மிக்க மகிழ்ச்சி தங்களின் மறுமொழி குறித்து ஐயா.

      நீக்கு
  2. அந்த பிங்க்டொம் ல் சைன் அப் செய்ய வேண்டும் போல் உள்ளதே...சரி செய்து பார்த்து விடலாம். எப்படி என்பதையும் அந்த பிங்க்டொம் பற்றியும் தெரிந்தால் விளக்கமாகத் தர இயலுமா? நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா.அதனை சைன் அப் செய்ய வேண்டும்.இதனை பற்றி முழுமையாக தெரியாது தெரிந்துக் கொண்டு சொல்லுகிறேன் மீண்டும் நன்றி ஐயா.

      நீக்கு
  3. உங்கள் தளத்தில் மின் அஞ்சல் சப்ஸ்க்ரைப் செய்தும் எங்கள் பெட்டிக்கு உங்கள் பதிவுகள் வருவதில்லை ஏன் என்று தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  4. pngdom போய் பார்த்தோம். கட்டணச் சேவையாக உள்ளதே. ஃப்ரீ ட்ரையல் செய்ய ஏற்றுக் கொள்ள மறுக்கின்றதே. தயவாய் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று முழு விவரங்களையும் தர இயலுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. website speed test pingdom -ஐ உபயோகித்து பாருங்கள்.இதுவும் ஃப்ரீ ட்ரையல் தான் ஐயா.மின்னஞ்சல் உள்ளீடு செய்யுங்கள் இதனுடைய அப்டேஸ் மின்னஞ்சல் வழியாக பெறலாம்.மேலும் கட்டண பிங்டொம் மாதம் 15 டாலர் செலுத்த வேண்டியிருக்கும் ஐயா.நன்றி.

      நீக்கு
  5. பயனுள்ள தகவல்தான் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு