ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

தமிழ் உணவின் சிறப்பு 🌶️🍋🥘


பொதுவாக நம் தமிழ் உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல தான் நம் இலையில் ஓரத்தில் உள்ள ஊறுகாய்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஆம் நமது வயிற்றில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக நம் வாயில் எச்சில் நன்றாக சுரக்க வேண்டும். அதனால் தான் இந்த பண்டம் இலையில் வைக்கப்படுகிறது ஏனென்றால் இதில் தான் காரம், உப்பு, புளிப்பு என்ற மூன்று விஷயங்கள் சேர்ந்து உள்ளன. மேலும் இவை அந்த காலத்தில் சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் கலபடம் இல்லாத பொருளை கொண்டு செய்து ஜாடியில் அடைத்து வைத்தனர் அது நீண்ட காலத்திற்கு கெடாமல் இருந்தன. ஆனால் இப்போது செய்யப்படும் ஊறுகாய் சுத்தம் இல்லாத பொருள்கள் மற்றும் வினிகர் சேர்க்கபடுவதால்  உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே எந்த பொருளையும் அளவுக்கு மீறி சேர்த்து கொண்டால் ஆபத்து தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக