எங்கள் கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் வா.சுரேசு அவர்களால் எழுதப்பட்ட கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்.
என் அருமை மாணவர்களே
நீங்கள் கற்பனை மெத்தையில்
துயில் கொண்டது போதும்
இலட்சிய மெத்தையில்
விழித்து கொண்டு இருங்கள்
வானம் தொட்டு விடும் தூரம் தான்!
போதை உங்கள் பாதையில்
வர வேண்டாம்.
கனவுகளும் இலட்சியங்களும்
மட்டுமே உங்கள் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும் இருக்கட்டும்
வானம் தொட்டுவிடு தூரம்தான்!
அழகு என்பது நீங்கள் செய்யும்
ஒவ்வொரு செயலிலும் மிளரட்டும்
கனிவு என்பது நீங்கள் சந்திக்கும்
ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்கட்டும்
வானம் தொட்டுவிடும் தூரம்தான்!
தியாகம் என்பது உங்கள்
ஒவ்வொரு நாடி நரம்பிலும் இருக்கட்டும்.
துரோகம் என்பது உங்கள்
கனவிலும் வாராது இருக்கட்டும்
வானம் தொட்டுவிடும் தூரம்தான்!
சேமிக்க பழகுங்கள்
உங்கள் வாழ்க்கை வசந்தமாகும்
அறம் செய்ய பழங்குங்கள்
இந்த சமுதாயமே வசந்தமாகும்
வானம் தொட்டுவிடும் தூரம்தான்!
நீங்கள் சந்திக்கும்
ஒவ்வொரு மனிதரிடத்திலும்
மகிழ்ச்சியை விதையுங்கள்
ஊரே வசந்தமாகும்
வானம் தொட்டும்விடும் தூரம்தான்.!!
அருமையான கவிதை
பதிலளிநீக்குதங்களின் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.
நீக்குஅருமையான கவிதை....
பதிலளிநீக்குவானம் தொட்டு விடும் தூரம்தான் என்பதை நினைவில் கொண்டால் எதையும் சாதிக்கலாம்...
உண்மையே ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.
நீக்குஅருமையான கவிதை வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா
நீக்குவானம் தொட்டு விடும் தூரம் தான்...
பதிலளிநீக்குநல்லதொரு கவிதை. பாராட்டுகள்.
தங்கள், மறுமொழிக்கு நன்றிங்க ஐயா
நீக்கு