ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 10
Image result for rama kaviyam
(தன்னம்பிக்கை தொடர்கிறது…)

உங்கள் உறவினர்களில் யாருடனாவது உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்குமெனில், சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். அதிகப்படியான பேச்சுதான் அதற்கு மூல காரணமாக இருந்திருக்கும்.

எவ்வளவு அதிகமாக வீண் வார்த்தைகளைப் பேசுகிறோமோ, அவ்வளவு அதிகமாகப் பாவம் செய்கிறோம் என்று பொருள். எவ்வளவு கண்ணியத்துடன் அமைதி காத்துக் கொள்கிறோமோ அவ்வளவு புண்ணியம் செய்கிறோம் என்று பொருள்.

நம்உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளைவிட, ‘வாய்க்கொழுப்பு’ ஏற்படுத்துகின்ற பிரச்சனைகள் மிகக் கொடியவை. எனவே நாம் எதை அடக்குகிறோமோ இல்லையோ நாவை அடக்குவது அவசியம்.

‘அவரை மாதிரி ஒரு ஆளை நீங்க பார்க்கவே முடியாது. வம்புதும்பு கிடையாது. அளவோட அருமையா பேசுவாரு. ரொம்ப அமைதியான மனுஷன்’ என்று ஒருவரைப் பற்றிச் சொல்லக் கேட்கும்போது, அந்த மனிதர் மீது தானாக ஏற்பட்டுவிடுகிறது.

எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருந்து பாருங்கள். அநீதியாகப் பேசுகிறவர்களும் அக்கிரமக்காரர்களும் உங்களை விட்டு விலகி ஓடிவிடுவார்கள்.

எனவே அளவோடு பேசி, உங்கள் மதிப்பையும் மகிழ்ச்சியையும் காத்துக் கொள்ளுங்கள்.

அதுதான் வாழ்வெனச் சொல்லுகிறேன்.
நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்திடச்  சொல்லுகிறேன்.
                     
                        நன்றி!!!2 கருத்துகள்:

  1. நம்உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளைவிட, ‘வாய்க்கொழுப்பு’ ஏற்படுத்துகின்ற பிரச்சனைகள் மிகக் கொடியவை.

    உண்மை தான். நாவை அடக்கினால் நல்லது.

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஐயா தங்களின் மறுமொழிக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு