ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

நா.முத்துகுமார்-க்கு சமர்பணம்...!!!


எங்கள் கல்லூரியில் வாரந்தோறும் நடைபெறும் சிந்தனை மன்றத்தில் இந்த வாரம் கவிஞர் நா.முத்துகுமாரின் கவிதைகள் கலந்துரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்றது.இதில் பல மாணவிகள் அவரின் கவிதைகளை பாடியும்,கலந்துரையாடியும் அவரை நினைவு கூர்ந்தனர்.அதில் ஒரு சிலர் அவரை குறித்த  தனது சொந்த படைப்பில் கவிதை ஒன்றை எழுதி வாசித்தனர்.அதில் ஒன்றே இக்கவிதைத் தொகுப்பு.மூன்றாம் ஆண்டு கணிதத் துறையில் பயின்று வரும் வ.கீர்த்தனா அவர்களால் எழுதப்பட்டது.சிறு வயதிலேயே தாயை இழந்த நீ
புத்தகத்தையே தாயாய் நேசித்தாய்..!!

வணிக சினிமா உன்காலடியில் கிடந்த போது
நீயோ இலக்கியத்தை நோக்கி ஓடினாய்..!!

தன்னடக்கத்தையே அடையாளமாய் கொண்டாய்..!!
புதிது புதிதாய் பாடலுக்கு வரிகளை சிந்தித்த நீ
உன் வாழ்க்கையை பற்றி சிந்திக்க தவறி விட்டாயோ..??

பட்டாம் பூச்சியாகவே மாறி பறந்துவிட்டாய்..!!
இது தான் உன் விருப்பமா..??

அன்று ஆனந்த யாழை மீட்ட சொன்னாய்-ஆனால்
இன்றோ அந்த யாழும் கூட உடைந்த
நரம்புகளுடன் ‘நா.முத்துகுமார்’ என்று
உன் பெயரையே மீட்டுகிறது..!!

எங்கும் அழகு எதிலும் அழகு என்று சொன்ன நீ
இறுதியில் மரணமும் அழகுதான் -என்று
சொல்லாமல் செய்து காட்டிவிட்டாய்..!!!

அந்த காலனும் கூட உன் வரிகளின்
காதலன் தான் போல - அதனால் தான்
உன்னை அவனுடனே வைத்து கொண்டான்.8 கருத்துகள்:

 1. மிகச் சிறந்த கவிஞன்...
  உயரம் தொட வேண்டியவனை இழந்து விட்டோம்...
  பாடல்களாய் வாழ்வார்....
  நல்ல கவிதை... வாழ்த்துக்கள் சகோதரி.

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு படைப்பு. மாணவிகளின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு அஞ்சலி. அவர் இழப்பு ஈடு செய்யமுடியாதது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா.தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

   நீக்கு