வியாழன், 22 செப்டம்பர், 2016

உலகத் தமிழர்களுக்கான இலவச மின் நூலகங்கள்...

நுட்பங்கள் நுவல நூலகம் செல்வோம்....

இன்றைய சூழலில் நூலகத்திற்கு சென்று நூல்களை இரவல் பெற்று படிக்கும் நேரம் குறைந்து ,பெரும்பாலானோர் நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர்.எனவே இந்த நேரத்தையும் நூலாக படிக்கலாமே என்ற நோக்கத்தில்  இன்றைய  எனது பதிவு அமைய உள்ளது.

தமிழகம் வலை, தமிழகம் ஊடக நிறுவனத்தின் இணைய தளமாகும்.கல்வெட்டு முதல் கணினி வரைத்தொடரும் தமிழின் ஓட்டத்தில், இணையதளத்தில் தமிழின் மேம்பாட்டிற்கும், உலக அளவிலுள்ள தமிழ் இணையங்களின் ஒருங்கிணைப்பிற்கும் பாலமாகத் இத்தளம் திகழும். இத்தளம் அறிவியல் விழிப்புணர்வு, சூழியல், இயற்கை வேளாண்மை, தமிழ் மருத்துவம், மாந்த உரிமைகள், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்கான குரலாக ஒலிக்கும்.

இத்தளத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களும் உள்ளன.இதனை யாவரும் இலவசமாக படிக்கலாம்,பகிரலாம் மற்றும் அதனை தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

இணைய முகவரி; தமிழகம் வலைநூலகம்

நூலகம் வலை இதில் உள்ள நூல்களை படிக்கலாம்,பகிரலாம் மற்றும் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இணைய முகவரி; நூலகம் 

இந்த இரண்டு முகவரிகளும் எனது வழிக்காட்டியான  முனைவர்.இரா.குணசீலன்  ஐயாவின் மூலமாக அறிந்துக் கொண்டேன்.இந்த தளங்களுக்கு  தாங்களும் சென்று படித்துப் பயன்  பெற்றிடவே  பகிர்ந்தேன்.
8 கருத்துகள்:

 1. இலவச மின் நூலகம் இன்னும் பெரிய பட்டியலே உண்டு. எனினும் இதனைத் தொடக்கமாகக் கொண்டு தொடரலாம்..நல்ல முயற்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 2. நானும் சென்று படித்துப் பயன் பெறுகிறேன் நன்றி வைசாலி

  பதிலளிநீக்கு
 3. நல்ல தள அறிமுகம். இன்னும் நிறைய இருக்கின்றனவே!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அறிந்துக் கொண்டு மீண்டும் பதிவிடுகிறேன் ஐயா.தங்களின் வருகைக்கு நன்றிகள் ஐயா.

   நீக்கு