புதன், 4 மே, 2016

நாட்டை விற்காதே,மயங்காதே..!!!

தேர்தல் நெருங்கிவிட்டது 240 தொகுதியிலும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு வாக்குகளை சேகரிக்க பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.ஒவ்வொரு கட்சியினரும் போட்டிப் போட்டு தங்களின் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை மக்களிடையே தெரிவித்து வருகிறார்கள்.அறிவிப்பது  அவர்களின் கடமை.சரி நாட்டை விற்காதே என்று கூறினேன் அல்லவா..!!அது என்னவென்றால் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை விற்க நினைக்கும் அனைவருக்குமே இந்த பதிவை சமர்பணம் செய்கிறேன்.

5*365=1825

1825/500=0.27397260

அப்படினா மொத்தமாக ஐந்து வருடத்திற்கு 0.27 பைசா  அதாவது இன்றைய காலக்கட்டத்தில் தொலைந்து போன பைசா மதிப்பு இதற்கு ஆசைப்பட்டு விலைமதிப்பில்லா நமது ஓட்டை தகுதியில்லாத ஒருவருக்கு விற்க நினைக்கிறோம்.இது தவறு.மேலும் அவர்கள் அறிவிக்கும் இலவசங்களை கண்டு மயங்காமல் அடுத்த ஐந்து வருடம் ஆட்சி செய்ய தகுதியுடையவரா..?? அவர் என்று யோசித்து வாக்களியுங்கள்.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.(கு.எ; 664)

செயல்திறன் பற்றிச் சொல்வது எல்லோருக்கும் எளிது.சொல்லியபடி செய்து முடிப்பது அரியதாம்,என்பது குறளின் பொருள்.இதனை அறிந்து வாக்களியுங்கள்.

மேலும் உங்கள் ஒட்டுதான் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவே சிந்தித்துச் செயல்படுவீர் நட்புக்களே.எனது கருத்தில் தவறுகள் இருந்தால் மன்னியுங்கள்.நாளைய விடியல் நமது விரல் நுனியில்…!!!நன்றி.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக