நாம் பார்த்திருப்போம்,சில
பள்ளி மாணவர்கள் தமிழ் பாடம் என்றாலே பிடிக்காது என்பார்கள்.காரணம் இலக்கணம் பகுதி
தான்.தமிழில் மிகவும் கடினமானது இலக்கணம் பகுதி தான் என்பது அவர்களின் கருத்து.அதற்கு
காரணம் அவர்களின் ஆர்வமின்மை மற்றும் ஆசிரியர்கள் கற்றுவித்தல் முறை ஆகியவை தான் இலக்கணம்
பகுதியை கடினமானது என்று கருதுக்கின்றனர்.இலக்கணத்தில் நான் புரிந்துக் கொண்டதை தங்களோடு பகிரவுள்ளேன்.
பதங்கள்;
பதம் என்றாலும்,மொழி
என்றாலும்,கிளவி என்றாலும்,சொல் என்றாலும் ஒன்று தான்.
பதங்களின் வகைகள்;
1.பகாப்பதம்
2.பகு பதம்
பகுத்தல்;
பகுத்தல் என்றால்
பிரித்தல் என்று பொருள்படும்.
1.பகாப்பதம்;
பிரிக்க முடியாதவை
பகாப்பதம் எனப்படும்.
சொல் வகைகள்;
1.பெயர்ச்சொல்
2.வினைச்சொல்
3.இடைச்சொல்
4.உரிச்சொல்
பகாப்பதம் வகைகள்;
1.பெயர் பகாப்பதம்.
2.வினை பகாப்பதம்.
3.இடை பகாப்பதம்.
4.உரி பகாப்பதம்.
பெயர் பகாப்பதம்;
(எ-கா) நீர்,அம்மா,மான்,மலர்.
இவைகளை பிரித்தால்
பொருள் இருக்காது.
வினை பகாப்பதம்;
(எ-கா) ஓடு,பாடு,வா
செய்யும் செயலை
குறிப்பதால்,இவைகள் வினைகள் எனப்படும்.பிரித்தால் பொருள் தராது.
இடை பகாப்பதம்;
(எ-கா) போல,ஆல்,ஐ,அது.
வேற்றுமை உருபுகளை
பிரிக்க இயலாது.
உரி பகாப்பதம்;
(எ-கா) சால,கடி,உறு
இவைகளை பிரித்தால்
பொருள் தராது.
2.பகு பதம்;
பிரிக்க முடியும்.பிரித்தால்
பொருள் தரும்.அவைகளே பகு பதம் எனப்படும்.
பகு பதத்தின்
வகைகள்;
பெயர் பகுபதம்.
வினை பகுபதம்
பகுபதத்தின்
உறுப்புகள்;
1.பகுதி-முதல்
பகுதி.
2.விகுதி-கடைசி
பகுதி.
3.இடைநிலை-நடுப்பகுதி.
4.சந்தி-இணைப்பது
பகுதிக்கும்
இடைநிலைக்கும் நடுவிலும் அல்லது இடைநிலைக்கும்
பகுதிக்கும் நடுவிலும் வருவது சந்தி ஆகும்.
5.சாரியை-இதுவும்
கிட்டதட்ட சந்தியை போல தான் வரும்.
6.விகாரம்-மாறுதல்.
அதாவது ஒரு
சொல் திரிந்து வருவது.
(தொடரும்)………
அடுத்த பதிவில்
பகுபதத்தின் உறுப்புகள் பற்றி விரிவாகவும் எளிமையாகவும் பார்க்கலாம்.நன்றி.
பள்ளியில் படித்தவை மீண்டும் இங்கு நினைவு படுத்திக் கொள்ள முடிந்தது. நன்றி
பதிலளிநீக்குவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.
நீக்குதொடர்கின்றேன்.
பதிலளிநீக்குவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.மகிழ்ச்சி தொடருங்கள் ஐயா.
நீக்குஆஹா பயனுள்ள தகவல்கள் என்னைப்போன்ற அரை வேக்காடுகளுக்கு பலன் உண்டு தொடர்கிறேன்.....
பதிலளிநீக்குவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.மகிழ்ச்சி தொடருங்கள் ஐயா.
நீக்குஎளிதாக
பதிலளிநீக்குபுரிகிறது