மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!
முன்னுரை
கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கிறதே இன்றி குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணம் புவி வெப்பமாதல் தான். புவி வெப்பமடைய காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமான காரணம் மரங்களை வெட்டுவதுதான்.
மரம் என்றாலே நன்மை தான்
மரங்களும் குழந்தைகளைப் போலத் தான் விதை மண்ணில் விழுந்து சிறு செடியாய் முளைத்து அது மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகிறது. ஒரு செடி மரமாக வளர குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும். புவியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆயுட்காலம் உண்டு. ஆனால் ஆயுட்காலம் இல்லாத ஒரே உயிர் மரம் மட்டும் தான். மனிதர்களாலும் இயற்கையாலும் எந்தவித இடையூறும் ஏற்படாத வரை மரங்கள் எத்தனை ஆண்டு காலம் வேண்டுமாலும் புவியில் உயிர்வாழ முடியும். மரங்கள் நமக்கு தரும் நன்மைகள் பல. எதை எடுத்துக்கொண்டாலும் நன்மை தீமை என்று இரு பக்கம் இருக்கும். நன்மை மட்டுமே அதிக அளவில் நிறைந்திருக்கும் ஒரே உயிர் மரம் தான்.
புவி வெப்பமடைதலை தடுக்கிறது
மரங்களால் உயிரனங்கள் அடையும் நன்மைகள் பல பல. மரங்கள் புவி வெப்பமாதலைத் தடுக்கிறது. மரங்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் அதிக கார்பன் வெளியேற்றதாலும் 2000 ஆண்டு வரை 25% மாக இருந்த புவி வெப்பம் இன்று 37%மாக அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்தும் திறன் மரங்களுக்கு மட்டுமே உண்டு. நன்றாக வளர்ந்து முதிர்ந்த ஒரு மரம் ஒரு ஆண்டில் 48 பவுண்ட் கார்பன்-டை-ஆக்ஸைடை இழுத்துக் கொள்கிறது.
மண் அரிப்பை தடுக்கிறது
மரங்களின் வேர்கள் மண்ணில் நன்கு பிணைப்புடன் இருப்பதால் மழை காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கிறது. மேலும் மண் வளத்தை மேம்படுத்துகிறது. மரங்கள் நிழல் தருபவைகளாகவும் உள்ளது. வெயிலில் கஷ்டப்படுகிறவர்களுக்குத் தான் நிழலின் அருமை தெரியும் என்பர். அது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை தான். மேலும் மேசைகள் செய்யவும் வீட்டு உபயோக பொருள்கள் செய்யவும் எரிபொருளாகவும் எந்த பகுதியும் பயனற்று போகாமல் மரத்தின் எல்லா பகுதியும் பயனளிப்பவையாக உள்ளது.
காற்றை விலைக்கு வாங்கும் நிலை
இத்துனை நன்மைகள் நிறைந்த மரங்களை நாம் சாதாரணமாக வெட்டுகிறோம். இந்நிலை நீடித்துக் கொண்டே போனால் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான காற்றை விலை கொடுத்து வாங்கும் அவல நிலையை ஏற்படுத்தி விடுவோம். நீரை வீணாக்கியதால் நம் தலைமுறையே நீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காற்றிலும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
நம் முன்னோர்களின் பெருமை
நம் தலைமுறை அசோகர் மரம் நட்டார் என்ற வரலாற்றை படித்து பெருமிதம் அடைகிறது. நாளைய தலைமுறை நம் முன்னோர்கள் அதாவது நாம் மரத்தை வெட்டி அவர்களுக்கு புவி வெப்பத்தை விட்டுச் சென்றோம் என்ற பெயர் நமக்கு வேண்டுமா?? நீங்களே சிந்தியுங்கள். நம் எதிர்கால சந்ததியினருக்கு வெப்பம் என்னும் தீயை விட்டுச் சென்று அவர்களை அவல நிலையில் ஆழ்த்த வேண்டாம். நாம் என்றும் நம் முன்னோர்களை எண்ணியும் அவர்கள் விட்டுச் சென்ற வளங்களை எண்ணியும் பெருமிதம் அடைகிறோம். அதேபோல நம் சந்ததியினரும் நம்மை எண்ணி பெருமிதம் அடையும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
முடிவுரை
அப்துல்கலாம் ஐயா கூட மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல சொற்பொழிவுகளையும் மரக்கன்றுகளையும் அதிக அளவில் நட்டு உள்ளார். பிறர் நடுவதற்கு காரணமாகவும் உள்ளார். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற வாசகம் சட்டமாக்கபட வேண்டும். பிறரைப் போல் நாமும் இல்லாமல் நம்மால் இயன்ற உதவிகளை நம் சந்ததிகளுக்காக செய்வோம். நாம் கற்ற கல்வி கூட நமக்கு பின்னால் வருபவர் அறியாமல் போகலாம். ஆனால் நாம் இறந்த பின் நம் பேர் சொல்லும் ஒன்று நாம் வைக்கும் மரம் மட்டுமே. எனவே அதிக அளவில் மரங்களை நடுவோம்!! புவி வெப்பமடைவதை தடுப்போம்!!
நல்லதொரு கட்டுரை. அப்துல்கலாம் ஐயா அவர்களின் கனவை நனவாக்கத் தொடங்கியிருக்கின்றார்களே நமது புதுக்கோட்டை அன்பர்கள் விதைக்கலாம் குழுவினர்!!!! பாராட்டி வாழ்த்துவோம் அவர்களை...
பதிலளிநீக்குSURENDHARAN
பதிலளிநீக்குNice
பதிலளிநீக்குநன்றாக உள்ளது
பதிலளிநீக்குமேலும் இது போன்ற நல்ல விஷயங்களை பரப்ப என் மணமார்ந்த வாழ்த்துக்கள்
Its superb
பதிலளிநீக்கு