எனது மடிக்கணினி
பழுதாக இருந்த போது பல்வேறு இணைத்தளங்களிலும்,பலரிடமும் உதவியை நாடினேன்.அப்போது நான்
ஒரு இணையத்தில் படித்ததை தங்களோடு இப்பதிவில் பகிரவுள்ளேன்.
கணினியின் ரீசைக்கிள்
பின் எனப்படும் ட்ராஷ் பாக்ஸ் எப்பவும் காலியாக இருக்க வேண்டும்.டிராஷ் பாக்ஸ் முழுவதும்
ஃபேல்கள் இருக்கும் போது கணினியின் வேகம் நிச்சயம் குறையத்தான் செய்யும்.
கணினியின் டெக்ஸ்டாப்பில்
நிறைய போல்டர்கள் இருக்கும் பட்சத்தில் கணினி இயங்குவதில் வேகம் நிச்சயம் குறையும்.கணினி
வேகமாக இயங்க கேச்சி பயன்பட்டாலும் அவை அதிகமாக
இருக்கும் பட்சத்தில் அதுவே கணினியின் வேகம் குறையவும் காரணமாக அமையும்.இன்டர்நெட்
பயன்படுத்தும் போது சீரான இடைவெளியில் கேச்சிக்களை அழிப்பது அவசியமாகும்.
கணினியில் பழைய
மென்பொருள் இருப்பதும் அதன் வேகம் குறைய காரணமாக இருக்கலாம்.தேவையில்லாத அல்லது பயன்படுத்தாத
ப்ரோகிராம்களை கணினியில் வைத்திருப்பது கணினியின் வேகம் குறைய காரணமாகும்.ஸ்பேஸ் ஹார்டு
டிஸ்க் எப்பவும் 10 சதவீதம் காலியாக இருக்க வேண்டும்.இந்த அளவு குறையும் போது கணினியின்
வேகம் நிச்சயம் குறையும்.ப்ராக்மென்ட்ஸ் ஹார்டு டிஸ்க்களை சீரான இடைவெளியில் டீப்ராக்மென்ட்
செய்ய வேண்டும்.கணினியின் வேகத்தை தீரமானிப்பதில் ரேம் அதிக பங்கு வகிக்கின்றது.
இன்டர்நெட்டில்
இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஃபான்ட்கள்
அனைத்தும் நல்லதாக இருக்காது.சில ஃபான்ட்கள் கணினிக்கு பிரச்சினையை உண்டாக்கலாம்.பிராசசஸ்()கணினியின்
சி.பி.யு சரியாக இயங்குகின்றதா என்பதை சரி பார்க்க வேண்டும்.சில சமயங்களில் தேவையில்லாத
ப்ரோகிராம்கள் இயங்கி கொண்டிருக்கும்.இந்த நிலையில் ஸ்டார்ட் அப் ஐடம்களை எடிட் செய்தால்
கணினியின் வேகம் அதிகரிக்கும்.
என்னங்க இது
எல்லாம் செஞ்சு பாருங்க இப்ப உங்க கணினி எப்படி
இருக்கு..????
மேலும் அறிந்துக்
கொள்ள இந்த இணைப்பை சுட்டுக; http://tamilthagaval.com
நல்ல தகவல்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றிகள் ஐயா.
நீக்கு