திங்கள், 30 மே, 2016

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்..??


இப்பதிவு எனக்கு கொடுத்த நண்பர் தினேஷ் அவர்களுக்கு நன்றிகள்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்? ஐந்து முக்கிய காரணங்கள்...


மருத்துவ துறை செலவு பணவீக்கம் கடந்த சில வருடங்களாக இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக மிகவும் குறைவாகதான் உள்ளது. பல்வேறு ஆய்வுகளின்அடிப்படையில் பார்க்கும் போது, இந்திய மக்கள் தொகையில் சுமார் 11-13 சதவிகிதம் பேர் தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி உலக வங்கியின் அறிக்கையின்படி மருத்துவ செலவுகளுக்காக பெரும்பாலானோர் கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் செலவழிக்கிறார்கள். இப்படி செய்யாமல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்றும் ஏன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவை என்பது குறித்தும் பார்ப்போம்.


1.மாறும் வாழ்க்கை முறை:

வேலை பளு காரணமாக மன அழுத்தம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. நீண்ட நேரவேலை, சரியான உடற்பயிற்சி இல்லாமை மற்றும் சரியான உணவு பழக்கமின்மை ஆகியவை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பவையாக உள்ளன. இந்த விஷயங்கள் இன்று பெரும்பாலானோருக்கு இருப்பதால் உடல் நலம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது அதனால் இதற்கேற்ப ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

2. மாறும் நோய்தன்மை!

தொற்று நோய்கள் தற்போது கணிசமான அளவில் குறைந்துள்ளன. தொற்று நோய்கள் அல்லாத உடல் பருமன், இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை முன்பு அவ்வளவாக இல்லை. கணிப்புகளின் படி இன்று 100ல் 18 பேருக்கு உயரழுத்த கோளாறு உள்ளது. இதனால் நரம்பு மற்றும் இதய கோளாறுகள் ஏற்படுகின்றன. அதிலும் 30 சதவிகிதம் பேருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது என்றும் , 35 லட்சம் மக்கள் தினமும் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். அதனால் மருத்துவ காப்பீடு என்பது அவசியமான ஒன்றாகிறது.

3.செலவுகள்!

இன்று தொழில்நுட்ப வசதிகளும், மற்ற அறிவியல் வளர்ச்சிகளும் அதி நவீனமாக வளர்ந்துள்ளன.அதனால் நோய் கண்டறியும் முறை துவங்கி அதன் தன்மையை ஆராய்வது வரை அனைத்துமே கட்டணம் அதிகமுள்ள விஷயமாக மாறியுள்ளது. அதனை சரிசெய்ய சிலர் இன்று தங்களது சொத்துகளை விற்று தங்கள் ஆரோக்கியதுக்கான செலவுகளை செய்கின்றனர். அப்படி செய்யாமல் இருக்க இந்த இன்ஷூரன்ஸ் உதவும்.

4. மறைமுக கட்டணம்!

மருத்துவ செலவுகள் இன்றி மற்ற செலவுகளும் ஒருவருக்கு சுமையாக அமைகிறது. மருத்துவத்துக்காக சென்று தங்கும் செலவு , பயணச் செலவு மற்றும் அந்தக் காலத்தில் அவருக்கு ஏற்படும் சம்பள இழப்பு ஆகிவற்றை சமாளிக்கவும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம். இது மொத்த மருத்துவ்ச செலவில் 35 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

5. முறையற்ற நிதி திட்டமிடல்!

இன்று பெரும்பாலானோர் வீடு, வாகனம் மற்றும் ஓய்வுகாலத்துக்கு திட்டமிடுகிறார்கள் ஆனால் உடல்நலத்துக்காக திட்டமிடுபவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. மக்கள் உடல் நலக்குறைவு வந்தால் பார்த்து கொள்ளலாம் என்ற மனநிலையிலேயே இருந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு உடல் நலக்குறைவு வரும் போது அதன் நிதி சுமை அதிகம் என்பதால் அவர்கள் அப்போது தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பற்றி நினைக்கிறார்கள்.

அனைவரது நிதி திட்டமிடலிலும் ஹெல்த் இன்ஷூரன்ஸுக்கு என ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருக்கும். அதனை மருத்துவ உதவி தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம். விபத்து மற்றும் உடல் நலக்குறைவுக்கு மட்டுமின்றி மருத்துவத்துக்கு முன் மற்றும் பிந்தைய செலவுகள், உறுப்பு தானம் கொடுப்பதற்கான செலவு, அவசரகால ஆம்புலன்ஸ் செலவு ஆகியவற்றையும் இதன் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் மனிதனின் ஆரோக்கியம் உயர் வாழ மிகவும் அவசியம் என்பதால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் மூலம் நம் வாழ்க்கையை பயன்படுத்தி கொள்ளலாம்.


2 கருத்துகள்: