வெள்ளி, 6 மே, 2016

மூவிடம்                                     

இடம் மூன்று வகைப்படும். அவை
                        தன்மை
                        முன்னிலை
                        படர்க்கை
தன்மை
தன்னைப் பற்றி கூறும் சொல் தன்மை இடமாகும்.

எடுத்துக்காட்டு- நான் எழுதினேன், நாங்கள் எழுதினோம், நான் செய்தேன்

முன்னிலை
நமக்கு முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை இடமாகும்.

எடுத்துக்காட்டு- நீ கேட்டாயா?, நீங்கள் கேட்டீர்களா?

படர்க்கை
தன்னையோ, முன்னால் நிற்பவரையோ குறிக்காமல் வேறு ஒரு மூன்றாவது நபரைக் குறிப்பது படர்க்கை இடமாகும்.
படர்க்கை உயர்திணை அஃறிணை என்று இரு வகைப்படும்.

எடுத்துக்காட்டு- அவன், அவள், அவர்கள் – படர்க்கை உயர்திணை
                அவை, அது – படர்க்கை அஃறிணை

6 கருத்துகள்:

  1. மக்கள் ஆஈஈள், மறந்து போன தமிழ் இலக்கணத்தை மறுபடியும் நினைவூட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பள்ளியில் படித்த இலக்கணம் எல்லாம் இங்கு மீண்டும் கல்லூரி மாணவிகள் உங்களால் நினைவூட்டப்படுகிறது. மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு