வாய் விட்டு
சிரித்தால் நோய்விட்டு போகும் இந்த உண்மை நம்மை
உணர வைத்த ஒரு கேலிச்சித்திர நாயகன் தான் நமது சார்லி சாப்ளின் இவர் உயிரோடு நம்மை
சிரிக்க வைத்தவர்.நம்மை கனவு உலகில் இன்றும் கண் மூடினால் சிரிக்க வைக்கும் உயிரற்ற ஒரு கேலிச்சித்திரம் தான் மிக்கி மௌஸ் என்ற
ஒரு எலி.இது உருவானதை பற்றி பகிரவுள்ளேன்.
சுமார் 80 ஆண்டுகளுக்கு
முன்பும் இன்றும் நம் சிரிப்புக்கெல்லாம் காரணமாக இருந்தவர் என்றால் அது நிச்சயம் சார்லி
சாப்ளின் அவர்கள் தான்.பிறகு வால்ட் டிஸ்னி என்பவர் 05-12-1901 அன்று அமெரிக்காவில்
பிறந்தார்.இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதிலும் ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம்
மிக்கவர்.தனக்கு 7-வயது இருக்கும் போதே ஓவியங்களை வரைந்து அண்மையில் இருப்பவர்களுக்கு
விற்பனை செய்வாராம்.அவருடைய தந்தைக்கு டிஸ்னி ஓவியம் வரைவது பிடிக்காது.ஆனால் அவரின்
தாயார் உனக்கு பிடித்ததில் கவனம் செலுத்து என்று ஆதரவு அளித்தாராம்.
இவர் பள்ளியில்
சார்லி சாப்ளின் போல நடித்து காட்டுவாராம்.ஆசிரியர்கள் டிஸ்னியை நகைச்சுவை நாடகம் நடித்துக்காட்டுமாறு
கேட்பார்களாம் அப்போது டிஸ்னி கரும்பலகையில் வரைந்துக் கொண்டே நடித்துக்காட்டுவாராம்.அவருடைய
தந்தைக்கு தெரியாமல் நகைச்சுவை நாடகத்தில் நடித்த அனுபவமும் டிஸ்னிக்கு உண்டு.
1922-ஆம் ஆண்டு
தனது சகோதரர் ராய் உடன் தனது Laugh Oh
Grand என்ற நிறுவனத்தை ஆரம்பித்து ஆலிஸ் இன் காட்ரூண்ஸ் என்ற முதல் கேலிச்சித்திரத்தை துவங்கினார்.அது தோல்வியடைந்தது.பிறகு 1932 ஆண்டு டிஸ்னி இரயிலில் பயணம் செய்யும் போது
தனது ஓவியக் கிறுக்கலில் உருவானதே மிக்கி மௌஸ் என்ற கேலிச்சித்திரம். Flower And
Tree என்ற முழு நீளப்படமத்தில் மிக்கியின்
சேட்டையும் அடித்த லூட்டியும் அப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை பெற்று தந்தது.அதனை
அடுத்த டிஸ்னி உருவாக்கிய மற்றொரு கேலிச்சித்திரம் தான் டொனல் டக் என்ற வாத்து.மிக்கியும்
டொனல்டும் சேர்ந்து அடித்த லூட்டியை இன்றும் கண் மூடி நினைத்து சிரிப்பவர்களுமுண்டு.
1955-ஆம் ஆண்டு
வால்ட் டிஸ்னி 17 மில்லியன் டாலர் செலவு செய்து டிஸ்னி லேண்ட் பார்க் என்ற பொழுது போக்கு
பூங்காவை அமெரிக்காவில் ஒலொன்டா என்ற நகரில் மக்களின் பூலோகச் சொர்க்கமாக ஏற்படுத்தினார்.அவருடைய
வெற்றியின் தாரக மந்திரம் ஆர்வம்,தன்னம்பிக்கை,தைரியம் மற்றும் நிலைபாடு.இவற்றில் மிக
முக்கியமானது தன்னம்பிக்கை எந்த ஒரு செயலையும் பல்வேறு கேள்விகளோடு தொடங்கக் கூடாது
எதுவாக இருந்தாலுமே தன்னம்பிக்கையோடு செயலாற்றினால் வெற்றி நிச்சயம் என்று அவர் கூறிவாராம்.இது
நம் அனைவருக்குமே பொருந்தும்.
அரிய தகவல் அறிந்தேன் சகோ நன்றி
பதிலளிநீக்குவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள்.
நீக்குசிறப்பான தகவல்கள்....
பதிலளிநீக்குவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள்.
நீக்குஅருமையான பதிவு சகோ.
பதிலளிநீக்குதங்களின் மறுமொழிக்கு நன்றிகள் சகோ.
நீக்கு