சனி, 14 மே, 2016

யான் நுகருகின்ற தமிழ்மணம்..!!





வலைப்பதிவர் தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களின் கருத்திற்கு இணங்க இன்று இப்பதிவில் தமிழ்மணத்தில் நான் பெற்றுவரும் அனுபவங்களை பகிரவுள்ளேன்.

தங்களுடைய சிந்தனைகளையும்,கருத்துக்களையும் எவ்வித தடைகளுமின்றி எவரும் படிக்க இயலும் என்பது எனக்கு தெரியாது.எங்கள் கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன்  ஐயா அவர்களின் வலைத்தளத்தை ஒரு நாள் பார்வையிட்டேன்.உடனே அவரிடம் எனக்கும் இதுப் போன்று தங்களின் நட்பு வட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டேன்.அவர் தங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியுமா என்று கேட்டார் தெரியாது என்றேன்.எனக்கு அதற்கான இலவச மென்பொருளான என்.எச்.எம்.ரைட்டரில்  பயிற்சி வழங்கினார்.பிறகு வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம் வழங்கினார்.

வலைப்பதிவு குறித்து என்னுடைய கருத்து நாம் எழுதுவது யார் படிக்க போகிறார்கள் என்று தான் நினைத்தேன்.ஆரம்பத்தில் எனக்கு எப்படி எழுதுவது என்று தெரியாமல் இருந்தேன்.பிறகு குணசீலன் ஐயா தமிழ்மணம், வலைப்பதிவுகளின் திரட்டியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.தமிழ்மணம் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.அவற்றில் எனது கருத்துக்களை மறுமொழியாக தந்தேன்.

தமிழ்மணத்தில் முதலில் நான் ஒரு மறுமொழியாளராக அறிமுகமானேன்.பிறகு எங்களுடைய கல்லூரி வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்தோம் பிறகு ஒரு ஆசிரியராக வலம் வந்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்மணத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவுகளை எளிமையாகப் பெற்றேன்.தொடர்ந்துப் பெற்று வருகிறேன்.உலகில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தமிழர்களால் தமிழில் பதிவுகளை தந்துவருகின்றனர்.தமிழ்மணம் மூலமாக எனக்கு ஒரு மிகப்பெரிய  நட்பு வட்டராமே கிடைத்துள்ளது.மூத்த வலைப்பதிவர்கள் நான் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் மறுமொழி அளித்து என்னுடைய தமிழ் எழுத்துகளுக்கு  ஆதரவு தருகின்றனர்.எங்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும்,வலைப்பதிவின் சிறந்த உபயோகிப்பாளர் என்ற மற்றொரு விருதும் எங்கள் கல்லூரி முதல்வர் மா.கார்த்திகேயன் ஐயா வழங்கி பெருமைப்படுத்தியும் ஆதரவையும்  வழங்கி வருகிறார்.மேலும் கல்லூரி ஆண்டுவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வலைப்பதிவர்  நா.முத்துநிலவன்  ஐயா எனக்கு ஒரு நூலை பரிசாக அளித்தார்.இந்த தமிழ்மணத்தில் எனக்கென்ற ஒரு அடையாளத்தை பதித்து வருக்கின்றேன்.இவை அனைத்திற்கும்  மூலதாரம் என்னுடைய தமிழ் ஆசிரியரான முனைவர்.இரா.குணசீலன் ஐயா.அவர் எனக்கு ஆசிரியராகவும் ஒரு தந்தையாகவும்  இருந்து வழிக்காட்டி வருகிறார்.அவருடைய மாணவியாக அவரை பெருமிதம் அடையச் செய்வேன்.
                 
                          


தமிழர்களின் ஒரு குரல்,தமிழனின் அடையாளம்,வலைப்பூக்களின் பூந்தோட்டம்,தமிழின் மண் வாசனை அனைத்தும் ஒரே இடத்தில் சேர்ந்து நான் நுகருகின்ற  வாசனை தான் தமிழ்மணம்.பதிவு நீண்டு வருகிறது என்பதால் முடிகிறேன்.பொறுமையாக வாசித்த அனைவருக்குமே என்னைடைய நன்றிகள்.தொடர் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

2 கருத்துகள்:

  1. தமிழ்மணத்தைப் பற்றிப் பொதுவாக, அதுவும் குறிப்பாக அதன் தரம்/ரேங்க் மதிப்பீடு பற்றி எங்களுக்கு ஒரு சில கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் தமிழ்மணம் ஒரு நல்ல திரட்டி என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. நீங்கள் குறிப்பிட்ட அனைத்துக் கருத்துகளும் சரியே....நாங்கள் அதை நல்ல திரட்டியாகப் பார்க்கின்றோம். ஆம் உலகம் முழுக்க இருக்கும் நல்ல படைப்புகளை அதன் மூலம் வாசிக்க முடிகின்றது. சிறப்பான பதிவு வைசாலி. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.நன்றி

      நீக்கு