கணினித்துறையில்
இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை.கணினிக்கு அடிப்படை
கணிதம் என்பதால் கணிதத்திலும் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்பதிலும் ஆர்ச்சரியமில்லை.கணிதத்துறையில் இராமானுஜம் சிறந்த கணிதமேதையாக விளங்குகிறார்.இருந்தாலும்
கணிதத்தில் பல்வேறுக் கூறுகளையும் வழிமுறைகளையும் பற்றி கூறியவர்கள் கிரேக்கர்கள் என்பது
வரலாறு கூறும் உண்மை.பிளாட்டோ,அலெக்சாண்டர் போன்ற தத்துவமேதைகளை போன்று பல்வேறு சிந்தனையாளர்கள்
தோன்றினர் கிரேக்க மண்ணில்.மூலக்கோட்பாடுகள் என்ற கணிதத்தொகுப்பு நூல் தான் உலகின்
தோன்றிய முதல் பாடப் புத்தகம் ஆகும்.இந்த புத்தகத்தின் ஆசிரியரும் கணிதத்தின் தந்தையாகவும்
போற்றப்படும் யூக்ளிட் பற்றி தான் இப்பதிவு அமையவுள்ளது.
யூக்ளின் இவரின்
பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.அநேகமாக கி.மு.325-ல் பிறந்து
கி.மு.265-ல் அலெக்சாண்டிரியாவில் இறந்து போயிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது.கணிதத்தில்
மிக முக்கிய கோட்பாடுகளுள் ஒன்றான வடிவியல் கணிதத்தை தந்தவர் தான் யூக்ளிட் எனவே தான் அவரின்
பெயர் வரலாற்றில் பேசப்பட்டு வருகிறது.யூக்ளிட், அலெக்சாண்டரின் காலத்தில் வாழ்ந்தவர்
என்பதால் அலெக்சாண்டர் காலத்தில் இவருக்கு முன்பே தோன்றிய கணிதமேதைகள் பற்றி இவருக்கு
தெரிந்தக்கூடும் அவர்கள் கி.மு 585-ல் வாழ்ந்த தேல்ஸ் மற்றும் மிலட்டஸ் என்பவர்கள்.அவர்களால்
ஏற்கனவே பல்வேறு கூறுகள் ,தேற்றங்கள் மற்றும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உலகிற்கு
தந்துள்ளனர் என்றாலும், அவற்றில் சிதறிக்கிடந்த அத்தனை கூறுகளையும் வழிமுறைகளையும்
ஒருமுகப்படுத்தியும் ஒழுங்குப்படுத்தியும் எளிய உதாரணங்களால் எளிமைப்படுத்தி கொடுத்தவர்
யூக்ளிட் தான்.அந்த நூல் தான் மூலக்கோட்பாடுகள் என்பது. இரண்டாயிரம் ஆண்டுகளாக கணிதத்தில்
மிகச் சிறந்த நூலாக அந்நூல் தான் திகழ்கிறது.யூக்ளின் எழுதிய வடிவியல் கணிதமும் எண்
கணிதமும் எளிமையாகவும் உன்னதமாகவும் விளங்கியது.அவர் கிரேக்கத்தில் எழுதிய மூலக்கோட்பாடுகள்
என்ற நூல் பல நூற்றாண்டுகளாக எழுத்துப்பிரதியில் இருந்தது.கடந்த 500 அண்டுகளுக்கு முன்பு
1500 பதிப்புகளில் இப்புத்தகம் வெளிவந்தது.பல்வேறு மொழியிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது.விஞ்ஞானிகளில்
சிறந்த சர்.ஐசக் நியூட்டனின் சிறப்பு பெற்ற பிரென்ஸிபியா என்ற நூல் யூக்ளிட்டின் வடிவியல்
கணதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பது சிறப்பு.
அறிவியலின்
மொழியே கணிதம் தான்.அறிவியலில் எந்தவொரு கண்டுப்பிடிப்பும் அதன் முடிவுக்கு கணிதத்தை
தான் அணுக வேண்டும்.எனவே கணிதத்தின் தந்தை என்று மட்டுமல்லாமல் அறிவியலின் தந்தை என்று
யூக்ளிட்டை கூறினாலும் மிகையே அல்ல.யூக்ளிட் கணிதம் தவிர பிற துறையிலும் ஆராய்ந்து
13 நூல்களை எழுதியுள்ளார் அவற்றில் 3 நூல்கள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளது.
யூக்ளிட் ஆசிரியராக
பணியாற்றும் போது ஒரு மாணவன் எழுந்து கணிதம் இதனை படித்தால் எனக்கு என்ன இலாபம் வரப்
போகிறது ..??என்று கேட்டானாம்.அதற்கு உடனே யூக்ளிட் தனது பணியாளனே அழைத்து அந்த சிறுவன்
ஏதோ இலாப நோக்கத்திற்கு வந்துள்ளான் அவனுக்கு ஏதாவது கொடுத்து வெளியே அனுப்பிவிடு என்றார்
யூக்ளிட்.பிறகு அனைத்து மாணவர்களிடமும் யூக்ளிட் கல்வி என்பதும் ஒரு இலாபமே என்று கூறினார்.புதியவற்றைக்
கற்றுக்கொள்வதும் ,தெரியாதவற்றை அறிந்துக் கொள்வதும் கல்வியின் இலாபம் என்றார்.யூக்ளிட்டின்
வாழ்க்கை குறிப்பில் இருந்து எளிமையான இரண்டு உண்மைகள் புலப்படுகின்றனர்.அவைகளில் ஒன்று
எப்போதும் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.இரண்டு உழைப்புக்கு நிகரான
பண்பு வேறு கிடையாது என்பதே அந்த உண்மைகள்.
கற்றவர்களுக்கு
சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற உண்மையை நாம் அனைவரும் அறிந்தும் தெரிந்தும் செயல்பட
வேண்டும்.
மிக மிக அருமையான தகவல்கள். யூக்ளிட் பற்றி அறிந்திருந்தாலும் அவர் சொன்னதாக நீங்கள் சொல்லியிருக்கும் அந்த சிவப்பு, நீல வண்ணக் கருத்துகள் புதிது. இறுதியில் வரும் அந்தப் பத்தி சிறப்பான கருத்துகள் வைசாலி.
பதிலளிநீக்குதொடருங்கள் இது போன்ற பதிவுகளை.
வருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.நன்றி தொடர்வேன் தொடருங்கள் ஐயா.மீண்டும் நன்றிகள்.
நீக்குமிக அழகான தகவல் அக்கா
பதிலளிநீக்குநன்றிகள் ஜனனி.
நீக்குஅறிவுப்பூர்வமான தகவலுக்கு நன்றி சகோ
பதிலளிநீக்குவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு மகிழ்ச்சியுடன் நன்றிகள் ஐயா.
நீக்கு