வியாழன், 12 மே, 2016

வலைப்பூக்களின் பூந்தோட்டங்கள்..!!ஒரு மொழியின் அடையாளம் என்பது அதற்கு தரும் முக்கியத்துவத்தை பொறுத்தது.உலக முழுவதும்  பல்வேறு மொழிகளால்  ஆட்சி செய்யப்பட்டு வருகிறது.உலக மொழிகள் எவ்வளவு இருந்தாலுமே நமது தமிழ் மொழிக்கென்று ஒரு தனிச் சிறப்புண்டு.ஒரு காலக்கட்டத்தில் குமரி முதல் இமயம் வரை அனைவராலும் பேசப்பட்ட மொழி தமிழ் மட்டுமே.ஆனால் இன்று தமிழ் மொழி குறைவாகவும் அன்னிய மொழிகள் அதிகமாகவும் பேசப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு தமிழனின் அடையாளம் அவர்களின் தாய்மொழியான தமிழ் மொழியே.அதற்கு உதாரணமாக இந்த பதிவு அமைய உள்ளது.
நம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளில் வசித்து தமிழர்களால் தமிழ் மொழி உயிர் பெற்று வருகிறது.தமிழின் ஓசை பல்வேறு திசையில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது..தமிழ் வலைப்பூக்கள் மூலமாக தமிழ் மொழி மணம் வீசி வருகிறது.வேறு நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டு மொழிக்கு அடிமையாகாமல் தனது அடையாளமான தமிழ் மொழியில் பதிவுகளை தருகின்றனர்.இப்படி பல்வேறு தமிழ் வலைப்பூக்கள் ஒன்று சேர்ந்து தமிழ் மணம் வீசி வரும் பூந்தோட்டங்கள் சில உள்ளன.அவை,
14 கருத்துகள்:

 1. தமிழ் வெளி ,திரட்டி ஆகிய இரண்டும் செயல்பாட்டில் இல்லை ! சரியான தகவலைப் பதியவும்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றி.அடுத்த முறை கவனமாக பதிவு செய்கிறேன் ஐயா.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 3. சகோதரியின் தமிழ் இணையதள ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். இப்படி பொதுவாக எழுதுவதைவிட, ஒவ்வொரு திரட்டியைப் பற்றியும், உங்களது பார்வை, அனுபவம் இவற்றை சாதாரணமாகவே எழுதினால் போதும். ரசனையாக இருக்கும். பகவான்ஜீ சொல்வதைப் போல சில திரட்டிகள் இப்போது இல்லை. தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள்.அப்படியே செய்கிறேன்,எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன் நன்றி ஐயா.

   நீக்கு
 4. தங்களின் தகவல் களஞ்சியம் நன்று சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 5. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி வைசாலி.

  பதிலளிநீக்கு
 6. நேற்றைய எனது கருத்துரை எங்கே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும் வெளியிட தாமதம் ஆகிவிட்டது.மீண்டும் ஒரு முறை தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 7. வைசாலி தங்களின் இந்தப் பதிவின் கருத்து நன்று. இதில் தமிழ்மணம் இன்றும் நன்றாகத் திரட்டி வருகின்றது அவ்வப்போது அதில் சில பிரச்சனைகள் வந்தாலும்...நமது பதிவுகளை இணைப்பது போன்ற பிரச்சனைகள்...என்றாலும் நல்ல திரட்டி...மற்ற திரட்டிகள் வேலை செய்யவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் ஐயா.

   நீக்கு