பிட்டு
ஒரு துருத்துருவென இருக்கும் பையன்.அவன் ஒருநாள் மரத்தின் உச்சியில் தன் கவனுடன் அமர்ந்திருந்தான்.அக்கணம் ஊர் பூசாரி வழியில் சென்றுகொண்டிருந்தார்.அவரது வழுக்கைத்தலை பல பல வென வெய்யிலில் மின்னியது.அவன் ஏரிந்த கல் அவரது தலையில் பட்டு இரத்தம் வரத்தொடங்கியது.வழியில் அவர் குமுரத்தொடங்கினார்.சுற்றிமுற்றி பார்த்து பிட்டுவை கையும் களவுமாக பிடித்தார்.
அவர் பிட்டுவை கீழே அழைத்து``உன்னுடைய குறி அபாரமாக உள்ளது.நாளை இந்த வழியாக மன்னர் வருவார் அவரது தலையில் இதேப்போல் சரியாக குறிவைத்து அடித்தால் உனக்கு பரிசு கொடுப்பார்’’ என்றார்.அடுத்தநாள் மன்னரின் தலையில் அடித்தார்.உடனடியாக மன்னர் தனது பணியாட்களை அனுப்பி பிட்டுவைப்பிடித்தார்.மன்னர் பிட்டுவிற்கு 100 சாட்டையடிகள் பொதுமக்கள்முன் கொடுக்குமாறு ஆனையிட்டார்.பிட்டு அந்த தண்டனை தனக்கு வேண்டாம் என அழுந்தான்.பிறகு இப்படி குறும்புதனம் இனி செய்ய மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்தான்.
தரவு
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக