ஊர்களின் பெயர்காரணம்
கோயம்பத்தூர்
கோவன்களால் உருவாக்கப்பட்ட ஊரானது கோவன்புத்தூர்
என்று அழைக்கப்பட்டது.அது பிற்காலத்தில் மருவி கோயம்பத்தூர் என்று மாறிவிட்டதாம்.
திருவான்மியூர்
வான்மிகம் என்றால் புற்று.புற்றுகள் நிறைந்த
பகுதியாக இருந்ததால் இதற்கு திருவான்மியூர் என்று பெயர் வந்தது.
முகலிவாக்கம்
மௌளி என்றால் கிரிடம்.கோவூர் ஈசனின் கிரிடம்
இருந்த இடம் மௌமிவாக்கம்.அது இன்று முகலிவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
திருவல்லிக்கேனி
பார்த்தசாரதி கோவிலின் எதிர் பக்கத்தில்
இருக்கும் குளத்தில் நிறைய அல்லி மலர்கள் பூக்குமாம். அதனால் இந்த பகுதிக்கு திருஅல்லிக்கேனி
என பெயர் வந்தது.பிற்காலத்தில் அது மருவி திருவல்லிக்கேனி என மாறிவிட்டது.
வேளச்சேரி
முற்காலத்தில் வேதஸ்ரேணி என்று சொல்லப்பட்ட
இடமே இன்று வேளச்சேரி என்று அழைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக