பசுமையான வயல்வெளிகள்..
பாட்டி தாத்தா சொன்ன கதைகள்..
பள்ளிக்கு போக மறுத்த நாட்கள்..
குச்சிமிட்டாய்க்கும் பஞ்சுமிட்டாய்க்கும் அழுந்த நாட்கள்..
கோயில் கடைகளில் அடம்பிடித்து வாங்கிய பொருட்கள்.
அப்பாகிட்ட அடி வாங்கின நாட்கள்..
அம்மா சமைக்கும் போது ருசித்த நாட்கள்..
ஊர் பெருசுங்க பேசும் வதந்திகள்..
பேருந்தில் பயணச்சீட்டு வாங்காமல் சென்ற நாட்கள்..
நாட்குறிப்பேட்டில் மட்டும் புதைந்து போன விவரம் அறியா காதல் கதைகள்..
நண்பர்களுடன் சமைத்த கூட்டாஞ்சோறு..
பம்பு செட்டில் நீராடிய நாட்கள்..
கில்லி விளையாடிய நாட்கள்..
பட்டம் செய்து தர சொல்லி போட்டி போட்டு விளையாடிய நாட்கள்..
டாம் & ஜெர்ரி பாப்பாய் பார்த்து பொழுது போக்கிய நாட்கள்..பள்ளியில் சென்ற சுற்றுலா பயணங்கள் ..
அப்பா சட்டையில் காசு திருடி உண்டியலில் சேர்த்தது..
நண்பர்களுடன் வீதியில் போட்ட ஆட்டம் பாட்டங்கள்..
பிறந்தநாள் என்றால் புது ஆடையில் ஒரு நாள் கூத்து..
ஒரு ரூபாய்க்கு வாடகை சைக்கிள் வாங்கி ஊரை சுற்றிய நேரங்கள்..பள்ளி தோழனின் மரணம்...
அப்துல் கலாம் வருகையை எதிர்பார்த்து ரோட்டில் காத்திருந்த நேரம்..
வானில் போகும் வான ஊர்திக்கு கை வீசி டாட்டா காட்டிய நேரங்கள்..
அன்றைய இரயில் நிலையம் இன்றைய விமானம் நிலையம் போன்ற பிரமிப்பு..
விருந்தினர் வருகையால் வீட்டில் சமைக்கும் கறிச்சோறு..
அம்மை போட்டால் பள்ளிக்கு விடுமுறை..
மழை வந்தால் பேப்பரில் விட்ட டைடானிக் கப்பல்..
கண்களை மூடியே பார்த்த பேய் படங்கள்..
இரவு நேரங்களில் பாத்ரூம் போக பயந்து படுகையை நனைத்த நாட்கள். .
பள்ளி ஆண்டுவிழாவில் ஆடிய முதல் நடனம் அரங்கேற்றிய நாடகம்..
டிவி பார்க்கையில் இதுக்கு பின்னால் மனிதர்கள் உள்ளனரா என்று பார்த்த நாட்கள்..
விக்கிரமாதித்தன் வேதாளம் தொடர்கதைகள்..
சிந்துபாத் கதைகள்... சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களே ஞாயிறு தோறும் வீட்டில் பார்க்கப்படும்...
டாப் டென் சினிமா.. டாப் டென் பாடல்கள்..
ஆண் (ம) பெண் நண்பர்களுடன் சேர்ந்து சென்ற திரையரங்குகள்..
விடுமுறைக்கு ஊருக்கு சென்றால் திரும்ப வரவே பிடிக்காத நாட்கள்..
பட்டாசு வெடிக்கையில் ஓட்டையான புது துணி..
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும் நேரங்கள். .
பெரியவள் ஆனதும் பூப்பு நன்னீராட்டு விழா அத்தை மடியில் கொண்டாடிய நேரங்கள். .
வீட்டில் பாம்பு வந்ததும் பக்கத்து வீட்டு அண்ணாவை அழைத்து வந்து பாம்பை அடித்த நாட்கள்..
எதற்கு நடுகிறோம் என்று தெரியாமல் நட்ட மரங்கள். .
டியுசன் டீச்சர் அடித்து சொல்லிக் கொடுத்த பாடங்கள்..
அரசியல் பேச்சு பேசிய டீக்கடை அண்ணாக்கள்..
ஓட்டுக்கு பிரியாணி காசு வாங்கி ஓட்டு போட போனவர்கள்..
கணக்கு வாத்தியாரை பார்த்தாலே கால் நடுங்கும்..
ஆலமரத்தில் ஆடிய ஊஞ்சல். .
புளிக்கொட்டையில் ஆடிய பல்லாங்குழி.. ஐந்தாங்கல் பாம்பு கரம் தாயம் ஆடியது..
மாமா கூட வண்டியில் போன பயணங்கள். .
குமரியை நடுங்க வைத்த சுனாமி. .
கும்பகோணத்தில் கருகிய குழந்தைகள்..
சுதந்திர தின விழாவில் மிட்டாய் வாங்கவே சென்ற நாட்கள்..வாட்ச் கட்டிய முதல் நாள் மணி பார்க்க கூட தெரியாத நாட்கள். .
இப்படி ஓடிக் கொண்டு விளையாடிய நாட்களில் திடீர் திருப்பங்கள் நண்பர்களை பிரிந்து சென்று கல்லூரியில் சேர்ந்த நாட்கள்..
நிமிர்ந்து பார்க்கையில் ஒரு தனி மனிதியாக இனி எதிர்காலத்தின் கனவுகளோடு நான்..
திரும்பி பார்த்தேன் அத்தனையும் கனவு போல வந்து சென்றன..
போட்டிகள் நிறைந்த உலகம்..
முகமூடியை அணிந்த மனிதர்கள். .
ஊழல் இலஞ்சம் உள்ள அரசு மற்றும் அரசியல்..
பணத்தை தேடி ஓடும் ஒரு கூட்டம். .
படிப்பை விற்கும் ஒரு கூட்டம்..
வேலை வாய்ப்பு தேடும் ஒரு கூட்டம். .
உணவு தேடும் ஒரு கூட்டம். .
இப்படி பல கூட்டங்களுக்கு நடுவில் கல்லூரி படிப்பின் இறுதியில் நான். வாழ்க்கையின் உண்மையான காரணம் தேடும் நோக்கில் நான் ..கண்ணில் தைரியத்துடன் மனதில் நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க உள்ளேன்...
ஒன்றுமட்டும் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது...
வீழ்வேன் என்று நினைத்தாயோ...!!!
அறுபது வரிகளில் நாம் இழந்ததும், நாம் எதிர்கொண்டதும், எதிர்க்கப்போவதும்....
பதிலளிநீக்குஅருமை.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
நீக்குஅருமையான ஆக்கம்.
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதி வாருங்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..
நீக்குஅனைத்தின் நடுவின் நாங்களும் ஆனால் என்ன கடைசி வருட கல்லூரி யை எடுத்துட்டு வேலையும், வீடும் என்று ஓடிக் கொண்டிருக்கும் நாங்கள் ...ரொம்ப நல்லாருக்கு வைசாலி...
பதிலளிநீக்குஅடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள்? மேற்படிப்பு?! எதுவாகஇருந்தாலும் உங்கள் மகிழ்ச்சி அதில் நிலைக்கட்டும்...வாழ்த்துகள்
கீதா
தங்களின் வருகைக்கு நன்றி சகோ..
நீக்குஅடுத்து நான் சிவில் சர்வீஸ் தேர்வில் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளேன் சகோ.. அதற்கு இடையில் ஒரு பெரிய திட்டம் ஒன்று உள்ளது.. அதனையும் செய்ய உள்ளேன்..
தங்களின் வாழ்த்துதலுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் சகோ..
உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா..
நீக்குஅற்புதமான கவிதை. சிறந்த கவிதைக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி ஐயா.
நீக்கு