வியாழன், 6 ஏப்ரல், 2017

திருக்குறள் வழி நான்..

                


திருக்குறள்,சொல்ல வேண்டிய கருத்தை அழகாக இரண்டு வரிகளில் எடுத்துரைக்கின்றன. 1330 குறள்களில் என் மனம் கவர்ந்த திருக்குறள்கள் இரண்டு , அவை, அறத்துப்பாலில் “நிலையாமை” என்னும் அதிகாரத்தில் வரும்.


        நெருநல் உளனொருவன் இன்றில்லை என்றும்
 பெருமை உடைத்துஇவ் வுலகு.

இக்குறளின் பொருள் , நேற்று உயிருடன் இருந்த ஒருவன் இன்று இல்லை என்ற பெருமையை கொண்டது இவ்வுலகு. இவ்வுலகில் ”எது பெருமை?” என்று உரையாடிக் கொண்டிருக்கும் போது இவ்வுலகுக்கே பெருமை ”நேற்று இருந்த ஒருவர் இன்று இல்லை” என்பது தான். வாழ்வின் நிலையாமையை அழகாக இவ்விரு வரிகளில் எடுத்துக் கூறிவிட்டார் திருவள்ளுவர்.

என் மனம் கவர்ந்த மற்றொரு குறள், அறத்துப்பாலில் “இன்னாசெய்யாமை” என்னும் அதிகாரத்தில் வரும் குறள் தான்.

     இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர்நாண
 நன்னயஞ் செய்து விடல்.


இக்குறளின் பொருள் தமக்கு தீங்கு இழைத்தவர்க்கு ஒருவர் செய்ய வேண்டியது அவர் வெட்கித் தலை குனியும் வண்ணம் அவருக்கு நன்மை செய்ய வேண்டும். தனக்கு துரோகம் இழைத்தவரை பழிவாங்க துடிக்கும் காலத்தில் தனக்கு தீங்கு செய்தவர்க்கும் நன்மை செய்ய வேண்டும் என்று அழகுற கூறுகிறார் வள்ளுவர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக