புதன், 26 செப்டம்பர், 2018

அன்புள்ள அம்மா

உன் கருவரையை எனக்கு
வசிப்பிடம் ஆய் தந்தவள் நீ
நான் கொடுக்கும் வலியிலும்
இன்பம் கண்டவள் நீ
நான் தவழ்ந்து நடக்கும்
நடையில் நயம் கண்டவள் நீ
என் மழலைப் பேச்சினை
ரசித்தவள் நீ....
என் அறியா பருவம் முதல்
இன்றுவரை எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி என்னை
காதலித்ததும் நீ...... என்னுயிர் தாயே

2 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனை ஐஸ்வர்யா. இது ஒரு கடன். நம் பெற்றோர் நமக்கு தரும் அந்த அன்பை நாம் அவர்களுக்கு முழுமையும் திருப்பி செலுத்திவிட முடியுமா.

    பதிலளிநீக்கு