சிறுவயதில் இருந்தே நம்முள் பல கனவுகள் சிறகடித்து கொண்டிருகின்றன ...ஆனால் அக்கனவுகள் எதனை பேருக்கு நிஜமாகின்றன ? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவுகள் ...".நான் கலெக்டர் ஆவேன்", என்று ஏழு வயதில் சொன்ன அதே குழந்தை பத்து வயதில் "நான் என்ஜினியருக்கு படிக்கபோகிறேன் "என்று கூறுகிறான் ...ஆனால் கடைசியில் அவன் படித்தது என்னவோ ஆசிரியர் பணிக்கு தான் ...பெற்றோர்களின் வற்புறுத்தல்களும், சில குடும்ப சூழ்நிலைகளும்,இந்த சமூகத்தில் நடப்புகளுமே ஒரு மனிதனின் எதிர்காலத்தை நிர்ணகிக்கின்றன தவிர அந்த மனிதன் தன்னுடைய எதிர்கால கனவை நோக்கி சரியாக பயனிப்பதுயில்லை ...பிடித்தது கிடைக்காமல் போக படித்ததிற்கு ஏற்ற வேலை பார்த்து கொண்டிருப்பவர்களின் மனதில் கண்டிப்பாக அவர்களின் கனவு வேட்கை கனன்று கொண்டே தான் இருக்கும் ...இதனால் அவர்களின் வருங்கால சந்ததிகளிடம் தங்களுடைய ஆசைகளை துணிக்க ...அதுவே சங்கலிதொடராய் நீண்டு பலருடைய கனவுகள் கேள்விகுறியாகுகின்றன.....இதனால் பாதிக்கபடுவது தனி மனிதன் மட்டுமல்ல இந்த ஒட்டுமொத்த சமூகமும் தான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக