வெள்ளி, 1 மார்ச், 2019

குயிலி🗡️🗡️ ⚔️

                
உங்களுக்கு தெறிந்த வீர்மங்கை பெயர்கள் என்று கேட்டதற்கு பலர் கூறிய பதில் ஜான்சி ராணி, சிலர் வேலுநாச்சியார் என்றனர். ஆனால் குயிலி என்ற ஒரு பெண் போராளி இருந்தார் என்பது பலருக்கு தெரியாத உண்மை.  ஜான்சி ராணிக்கு முன்பே போர் புரிந்தவர் வேலுநாச்சியார். 1750ஆம் ஆண்டுகளில் மிக அதிகமான போர் வீரர்களை வைத்திருந்தார். அவரது படையான வளரி படை மற்றும் பெண்கள் படை தான் அவரது பலமே. வளரி படையை மருது சகோதரர்களின் கையில் கொடுத்து விட்டு, பெண்கள் படையை ஏற்று நடந்தும் பொறுப்பு குயிலிக்கு வழங்கப்பட்டது.சிறு வயது முதலே வேலுநாச்சியாரை பார்த்து பார்த்து தன் வீரத்தை வளர்த்தி கொண்டார் குயிலி. ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்து கொண்டு இருந்த போது ஆங்கிலேயரின் ஆயுதங்கள் மிகவும் பலம் கொண்டவையாக  இருந்தது அதனை அழித்தால் தான் அவர்களை அழிக்க முடியும் என்ற நிலை உருவாக அதனால் அடுத்த நாள் அரண்மனையில் நடந்த அம்மன் பூஜையில் கலந்து கொள்வது போல் கோட்டைக்குள் நுழைந்தனர். ஆங்கிலேயர் எதிர்பாராத விதமாக நாச்சியரும் அவரது படையும் தாக்க ஆரம்பித்தது. தீடீரென்று உடம்பு முழுவதும் நெய் ஊற்றிய உருவம் ஒன்று ஆயுத கிடங்கில் நுழைந்து நெருப்பு வைத்துக்கொள்ள கிடங்கோடு சேர்ந்து ஆங்கிலேயரும் அழிந்தனர். அந்த  தற்கொலை போராளி வேறு யாரும் அல்ல வேலுநாச்சியாரின் தளபதியான குயிலி தான்.உலகில் முதல் தற்கொலை படை போராளியும் நம் தமிழ் வீரமங்கை குயிலி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக