வெள்ளி, 1 மார்ச், 2019

18+👆👆👆


         

இன்றுசமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஒரு கேள்வி, 18+ உங்கள் ஓட்டு யாருக்கு என்பது தான். என்னை போன்ற பல கல்லூரி மாணவர்கள் ஓட்டு போடும் முதல் தேர்தல் இது. அடுத்த 5 ஆண்டு நம் நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் அந்த 5 நொடிகள் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
  நம்மை பாத்து நாம் கேட்டு கொள்ளும் முதல் கேள்வி
1.  இதற்கு முன் இருந்த அரசால் என்ன ஆதாயம் உண்டு. மக்களுக்காக என்ன செய்தனர். சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைத்ததா அல்லது பெரிய தலைகளின் குறுக்கீட்டால் நிராகரிக்கப்பட்டதா ?
 2. இதற்கு முன் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?
3. தன் கட்சியை பிரபல படுத்தும் விதமாக செய்யப்படும் அனாவசிய செலவுகளுக்கு கூட்டத்திற்கும்  ஆறுதல் அளிக்க கூடாது. ஏனென்றால், உண்மையில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவார்கள் ஒரு செயலை செய்து விட்டு  இதை நான் தான் செய்து உள்ளேன் என்று மேடையில் ஏறி கூவ தேவை இல்லை அது உண்மையில் செய்ய பட்டு இருந்தால் அது தானாகவே மக்களை சென்று அடையும் ஏனென்றால் பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை.
4. மேலும் இறுதியாக உறுதியாக அழிவின் விழும்பில் இருக்கும் பெண்கள் இனத்தை பாதுகாக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு. 
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல.


1 கருத்து: