ஞாயிறு, 27 மார்ச், 2016

வாங்க போலாம் பங்குச் சந்தைக்கு..!! (தொடர்ச்சி)

அன்புடையீருக்கு வணக்கம்,

இந்த வாரம் பங்குச் சந்தைக்கு தயார் ஆயிட்டிங்கனு நினைக்கிறேன் நட்புகளே.சரி கடந்த வாரங்களாக பங்குச் சந்தை பற்றிய தகவல்களை சிறிது சிறிதாக பார்த்து வருகிறோம்.இந்த வாரம்  பங்குத் தரகர்களிடம் எவ்வகையான கணக்கை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

Image result for பங்கு சந்தை


பங்குத் தரகர்கள்;

பங்குச் சந்தையில் பங்குகளை நேரடியாக வாங்கவோ விற்கவோ இயலாது.அதற்கென இருக்கும் பங்குச் சந்தையில் உரிமம் பெற்ற உறுப்பினர்களிடம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய இயலும் அவர்களே தரகர்கள்.இத்தகைய தரகர்களிடம் இருவகையான கணக்குகளை உருவாக்க வேண்டும் அவை,

1.டீ-மேட் கணக்கு(demat account)
2.வியாபார கணக்கு(trading account)

டீ-மேட் கணக்கு என்றால் என்ன..?? 

                    வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பேணப்படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.
விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.

Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும். 


வியாபார கணக்கு  என்றால் என்ன? 

                            Demat Account நமது கணக்கில் உள்ள பங்குகள், பராமரிக்கப் படும். அவ்வளவே! நாம் வாங்கி விற்க வேண்டுமானால், வர்த்தகத்திற்கான தனிக்கணக்கு (Trading Account) தொடங்கியாக வேண்டும். Demat Account உள்ளவர்கள் மட்டுமே Trading Account தொடங்க முடியும். வீட்டில் இருந்தவாறே இணையம் மூலமாகக் கூட பங்குப் பரிவர்த்தனை செய்யலாம். அதற்கான கணிணி மென்பொருளைப் பங்குத் தரகு நிறுவனத்திடம் பெற்று ( ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி) நமது கணிணியில் நிறுவிக் கொள்ளலாம். இதைச் செய்தோமானால், சந்தை நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து வாங்குவதா / விற்பதா என்று முடிவெடுப்பதும் வியாபாரம்  செய்வதும் எளிதாக இருக்கும். ஆனாலும், நமது பங்கு வணிகம், அப்பங்குத் தரகர் வழியாகவே நடைபெறுகிறது. ஆகவே, நமது பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு, நாம் அவர்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். 

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
                          01.  முதலீட்டாளர் (Investor)
                           02.  நாள்வணிகம் செய்வோர் (Day Trader) 

அடுத்த வாரம் இதுக் குறித்து விரிவாக பார்க்கலாம்.நன்றி.




6 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு. பங்கு சந்தை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் புரியும் வண்ணம் எழுதி இருகிறீர்கள் பாராட்டுகள் . தொடர்கிறேன்.
    நீங்கள் கேட்டுக் கொண்டபடி கல்விக் கட்டணங்கள் பற்றி எழுத் இருக்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

      கல்வி கட்ணம் குறித்த தங்களின் பதிவை நான் படித்தேன் ஐயா.அருமையாக இருந்தது அதற்கு எனது கருத்தை சொல்லிவிட்டு வந்துள்ளேன் ஐயா.நன்றி ஐயா எனது வேண்டுதலுக்கு இணங்க பதிவை எழுதியது பலரையும் சிந்திக்க வைக்கும் என்ற எண்ணம் வந்துள்ளது ஐயா.

      நன்றிகள் ஐயா.

      நீக்கு
  2. பலருக்கும் பயனுள்ள பகிர்வு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

      நீக்கு
  3. மிக மிக பயனுள்ள பதிவு. நிறைய தெரிந்து கொள்கின்றோம்..ஏற்கனவே கொஞ்சம் தெரிந்திருந்தாலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது,தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றிகள் ஐயா.இது தொடர்பாக ஏற்கனவே 6 இடுகைக்களும் எழுதியுள்ளேன் நேரமிருந்தால் பாருங்கள் ஐயா.இதன் தொடர்ச்சி ஞாயிறு தோறும் எழுதி வருக்கின்றேன் ஐயா.மீண்டும் நன்றிகள் ஐயா.

      நீக்கு