திங்கள், 28 மார்ச், 2016

இலவசமாகப் புத்தகங்களை தரவிறக்கலாம்..!!

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் எப்படி இலவசமாக தரவிலரக்கலாம் என்பது பற்றிய பதிவு தான்.

கணினித் துறையில் எந்த  மொழிப்படிக்க வேண்டுமென்றாலும் கடைகளுக்கு சென்றும் அல்லது பல இணையதளத்திற்கு சென்றும் படிக்க இனித் தேவையில்லை.நாம் இந்த இணையதளத்திற்கு சென்று எந்த வகையான புத்தகங்களையுமே இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

இணையத்தள முகவரி.http://www.ebookpdf.net/


இங்கு ஒவ்வொரு துறைவாரியாக பலத் தரப்பட்ட புத்தகங்கள் உள்ளது.சில தினங்களுக்கு முன்பு வரை வெளியான புத்தகங்களைக் கூட நாம் இலவசமாகவும்  எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் தரவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

11 கருத்துகள்:

  1. தகவலுக்கு நன்றி! மெத்த படிக்காத எம்மால் படித்தால் புரிந்து கொள்ள முடியுமா?? நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.
      ஆஹா தங்களால் புரிந்து கொள்ள முடியாது என்பது எது உள்ளது ஐயா.

      நீக்கு
    2. வைசாலி அவர்களே, தாங்கள் ஒரு சட்ட விரோதமான செயலை செய்யும் ஒரு இணையப்பக்கத்தை இங்கு கூறியுள்ளீர்கள். தங்களைப்போன்றவர்கள் இப்படி ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடாது. ஒரு சில புத்தகங்கள் மட்டுமே இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும். ஆனால் “சில தினங்களுக்கு முன்பு வெளியான புத்தகங்கள் கூட கிடைக்கும்” என்று சொல்லியிருப்பதிலிருந்து இந்த இணையதளம் ஒரு சட்டவிரோத இணைதளம் என்பது தெரிகிறது. அதனால் சற்று கவனம் தேவை. ஒருவர் மிக சிரமப்பட்டு எழுதி, ஒரு வெளியீட்டாளரின் உழைப்பால் வெளிவரும் புத்தகங்களை நாம் திருட்டுத்தனமாக இலவசமாக தரவிறக்கிப்படிப்பது குற்றம். நானும் கல்லூரிக் காலங்களில் தெரியாமல் இந்த தவறுகளைச்செய்துள்ளேன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

      நீக்கு
  3. நல்ல தகவல் ! இந்த வலைத்தளம் அறிந்தாலும், ஏனென்றால் இந்தத் தளத்திலிருந்துதான் எங்கள் வீட்டிலும் குழந்தைகள் புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொள்வார்கள். தாங்கள் இங்கு சொல்லியமை பலருக்கும் உதவும். நல்ல பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  4. வைசாலி அவர்களே, தாங்கள் ஒரு சட்ட விரோதமான செயலை செய்யும் ஒரு இணையப்பக்கத்தை இங்கு கூறியுள்ளீர்கள். தங்களைப்போன்றவர்கள் இப்படி ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடாது. ஒரு சில புத்தகங்கள் மட்டுமே இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும். ஆனால் “சில தினங்களுக்கு முன்பு வெளியான புத்தகங்கள் கூட கிடைக்கும்” என்று சொல்லியிருப்பதிலிருந்து இந்த இணையதளம் ஒரு சட்டவிரோத இணைதளம் என்பது தெரிகிறது. அதனால் சற்று கவனம் தேவை. ஒருவர் மிக சிரமப்பட்டு எழுதி, ஒரு வெளியீட்டாளரின் உழைப்பால் வெளிவரும் புத்தகங்களை நாம் திருட்டுத்தனமாக இலவசமாக தரவிறக்கிப்படிப்பது குற்றம். நானும் கல்லூரிக் காலங்களில் தெரியாமல் இந்த தவறுகளைச்செய்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  5. எந்த ஒரு புத்தக வெளியீட்டாளரும் அவர்களின் புத்தகங்களை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள அனுமதிக்கமாட்டார்கள். அதுவும் வெளியிட்டு சில நாட்கள், சில ஆண்டுகள் மட்டுமே ஆன புத்தகங்களுக்கு நிச்சயம் அனுமதி இருக்காது. பழைய புத்தகங்கள் வேண்டுமானால் அப்படி வெளியீட்டாளர்களின் அனுமதியோடு இலவசமாக தரவிறக்க முடியும்.(வெகு அரிதாக). நம் கல்வியை முறையாக வழிமுறையில் பெறுவோம். குறுக்கு வழியில் வேண்டாம். சில நாட்டுடமையாக்கப்பட்ட பொதுவுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் மட்டுமே இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளம் அந்த வகையைச்சார்ந்ததல்ல. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் நெறிகாட்டுதலுக்கு நன்றி ஐயா.

      நீக்கு
    2. தாமதமான பதிலுறைக்கும் எனது கவனமின்மைக்கும் மன்னிக்கவும் ஐயா. எனது தவறுகளைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஐயா. இனிமேல் கவனமாக எழுதுகிறேன்.

      நீக்கு