ஞாயிறு, 13 மார்ச், 2016

பொன்மொழிகள்

                                              
Image result for புத்தகங்கள்

   புத்தகங்கள்

“இறவாத புகழுடைய புது நூல்கள்
தழிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”
-    மகாகவி பாரதியார்
“மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்
முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்”
-    பாவேந்தர் பாரதிதாசன்
“ஊர்செல்லக் காட்டும் வழிபோல வாழ்வுக்கு
நேர்பாதை சொல்வதே நூல்”
-    சாமி சிதம்பரனார்
“புத்தகங்கள் மனித சமுகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச்
சென்றுள்ள பரம்பரைச் சொத்தாகும்”
-    அடிஸன்
“உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!”
-    கதே
 “பிறர் எழுதியுள்ள புத்தகங்களைக் கொண்டு உங்களைத்
திருத்திக் கொள்வதில் நேரத்தைச் செலவிடுங்கள்; பிறர்
வருத்தி உழைத்ததைக் கொண்டு நீங்கள் எளிதில் பெறக்
கூடிய பயன் இது!”
-    சாக்ரடீஸ்
 “புத்தகங்களை இரவல் கொடிக்காதீர்கள். யாரும்
அவற்றைத் திருப்பிக் கொடுப்பதில்லை. என் நூல் நிலையத்தில்
உள்ள புத்தகங்கள் எல்லாம் பிறரிடமிருந்து இரவல் வாங்கியவை
மட்டுந்தான்!”.
-    அனடோல் பிரான்ஸ்
“என் மனதுக்கு உகந்த நூல்களை மட்டும் கொடுத்து,
என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான்
கஷ்டப்பட மாட்டேன்”.
-    மாஜினி
“புத்தகம் என்பது வெறும் புத்தகம் மட்டும் அன்று. புத்தகத்தை
தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”.
-    வால்ட் விட்மன்
“ஒரு புத்தகம் எழுத அரைவாசி நூல் நிலையத்திற்கு மேல்
படிக்க வேண்டும்”.

-    ஜான்ஸன்

4 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவுகள் சகோ.என்னையும் நூல்கள் தான் செதுக்கிக் கொண்டு இருக்கின்றன.நமது ஒவ்வொருவரின் உண்மையான நண்பன் புத்தகங்கள் மட்டுமே என்பது உண்மையே சகோ.அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. புத்தகம் பற்றிய நல்ல பகிர்வு. எனக்கு மிகவும் பிடித்த பொன்மொழி நீ இன்னும் படிக்காத புத்தகத்தை படிக்காத புத்தகம் என்று சொல்லாதே படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல் - விவேகானந்தர்

    பதிலளிநீக்கு
  3. வாசிப்பது சுவாசிப்பது போன்றது.

    பதிலளிநீக்கு