சனி, 5 மார்ச், 2016

கணிதமேதை ஜான்நேப்பியா்


    










           ஜான் நேப்பியர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கணித மேதை ஆவார்.  இவர் அச்நாட்டிலுள்ள எடின்பா்க் நகரின் அருகே அமைந்துள்ள “மொ்சிஸ்டன் காஸில்” என்னும் இடத்தில், 1550ஆம் ஆண்டு பிறந்தார். மேலும் இவரது காலம் கி.பி.1550-1617. 
     தன்னுடைய பதிமூன்றாவது வயதிலேயே ஆண்ட்ருஸ் பல்கழைக்கழத்தில் சேர்ந்தார்.  எனினும் அங்கு அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை.  அவா் பட்டம் எதுவும் பெறாமலே அக்கல்லூரியை விட்டு விலகினார்.
     நேப்பியர் அதன் பிறகு பல வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றார்.  1571ஆம் ஆண்டு தன் சொந்த ஊருக்கே திரும்பி வந்தார்.  1572ஆம் ஆண்டு நேப்பியரின் திருமணம் நடைபெற்றது.  ஆனால் அவரது மனைவி ஏழு ஆண்டுகளில் மரணம் அடைந்தார்.  எனவே அவர் மறுமணம் புரிந்தார்.
     நேப்பியர் கிறிஸ்தவ மதத்தில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.  அவர் ரோம் நகரிலுள்ள தேவாலயம் பற்றிய நூல் ஒன்றையும் எழுதினார்.
    



     நேப்பியரின் பெரும்பாலான வாழ்க்கை கணித ஆராய்ச்சியிலேயே கழிந்தது.  கூட்டல், கழித்தல், வர்க்க மூலத்தைக் கண்டறிதல் போன்றவற்றிற்குப் பயன்படும் கருவி ஒன்றை நேப்பியர் கண்டுபிடித்தார்.  அக்கருவி அவரது பெயரிலேயே “நேப்பியர் ராடு” என்று அழைக்கப்படுகிறது.
     கணித உலகில் “மடக்கை” (Logrithms) என்னும் பிரிவு மிகவும் முக்கியமானதாகும்.  அதனைக் கண்டுபிடித்த பெருமை நேப்பியரையே சாரும்.  நேப்பியர் இல்லையென்றால் கணித உலகிற்கு மடக்கை விதிகளும், மடக்கை அட்டவணையும் (Logrithm Table) கிடைத்திருக்காது.
   




       நேப்பியர் பின்ன எண்கள், அதிக இலக்க எண்கள் போன்றவற்றை பெருக்குவதற்கு, வகுப்பதற்கும் மடக்கை விதிகளைப் பயன்படுத்தி மிக விரைவாகவும், எளிதாகவும் விடைக் கண்டார்.  இன்றளவும் உலகெலுங்கிலு முள்ள பள்ளிகளில் மடக்கை விதிகளும், மடக்கை அட்டவணைகளும் பயன்பட்டு வருகின்றன.
     கணிப்பொறி உலகில் அறியப்படுவதற்கு முன் பெரும்பாலான கணக்கு வழக்குகளில் மடக்கை அட்டவணையே (Logrithm Table) பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  இன்றைய கணினி யுகத்தில் கூட மடக்கை அட்டவணையின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாகும்.  ஏனெனில், மடக்கை அட்டவணை மிக எளிதானது மட்டுமின்றி, சிக்கனமானதும் ஆகும்.
     உதாரணமாக, இரு அதிக இலக்க எண்களைப் பெருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.  அவ்வதிக இலக்க எண்களுக்கு மடக்கை அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட எண்கள் தரப்பட்டிருக்கும்.  இரு அதிக இலக்க எண்களைப் பெருக்குவதற்கு அவ்வெண்களின் மடக்கை எண்களை அட்டவணை மூலம் கண்டறிந்து, அவற்றைக் கூட்டி, கிடைக்கப்பெறும் எண்ணிற்கு எதிர்மடக்கை எண்ணைக் (Antologrithm) கண்டால் அதுவே பெருக்குத் தொகை விடை ஆகும்.
     ஒரு குறிப்பிட்ட எண் “N” என்று வைத்துக் கொள்வோம்.  அதன் மடங்கைக் குறிக்கும் எண் “b” என்று வைத்துக்கொள்வோம்.  அவ்வெண்ணின் மடங்கைக் குறிக்கும் மடக்கை வாய்ப்பாடு, logbN ஆகும்.
     கணிதத்தில் மடக்கை விதி (Logrithm) அதைக் கண்டுபிடித்த கணித மேதை நேப்பியரின் பெயரிலேயே அழைக்கப்படுவது நேப்பியருக்கு கிடைத்த பெருமையாகும்.


2 கருத்துகள்: