செவ்வாய், 15 மார்ச், 2016

மீத்தேன் திட்டம் ,மக்கள் திண்டாட்டம்..!!


தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு பழமொழி உண்டு.இப்போது அந்த பழமொழி உண்மையாகி வருகிறது.ஆமாங்க தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சையில் தான் இது நிலவுகிறது.இந்த கட்டுரையில் மீத்தேன் எரிவாயு குறித்த சிறிய விழிப்புணர்வை பகிரவுள்ளேன்.


நம்ம நாட்டுல தேவையில்லாத செலவினங்கள் அத்தாங்க விளம்பரங்கள்,ஊழல்,இலஞ்சம் போன்ற பயனற்ற செலவுகள் நிலவி வருவது நமக்கு தெரிந்த உண்மையே.இதில் இருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா தனது மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து விட்டது. “என்னடா சிக்கும்என அது தேடும் போது அதற்கு சிக்கி இருப்பது தான் தஞ்சை திருவாரூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் மீத்தேன் எனப்படும் இயற்கை எரிவாயு.

சரி அது என்னங்க மீத்தேன் எரிவாயு..??அட கால்நடைகளான (எருது.மாடு,எருமை )போன்றவைகளின் சாணத்திலிருந்து எடுபாங்களே அதுவா என்று நினைக்கிறீர்களா..??அதுவும் தான் இதுவும் தான் என்ன புரியலையா.சாணத்தில் இருந்து கிடைக்கும் எரிவாயு வீடுகளில்  உபயோகிக்க 1970-களில் இந்திரா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது.




மண்ணிற்குள் பதிக்கப்படும் குழாய்கள் நம் போன்ற  Tropical நாடுகளில் மிக எளிதில் துருப்பிடித்து மண்ணுக்கடியிலேயே துருப்பிடிக்கும் வெறும் சாணத்திலிருந்து வெளியேறும் மிகச் சிறிய வாயுவிற்கே தீப்பிடிக்கும் ஆற்றல் இருக்கும் போது பாதிக்கப்பட்டு கசிவு பெரும் குழாய்களில் வரும் பேராபத்து என்பது ….?????

மீத்தேன் எரிவாயு என்பது நிலத்தடி நீர் முழுவதுமாக உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படும் (நிலத்தடியில் எடுக்கப்படுவது தான் மீத்தேன் எரிவாயு) அந்த நீர் கடல் நீரைவிட மிகவும் உப்பாக இருக்கும்.அப்ப அந்த நீர் நிலத்தில் படியும் போது விளை நிலம் எல்லாம் உப்பளங்காளாக மாறிவிடும்.அப்போது நம்மால் விளைச்சலை செய்ய இயலாது என்பதே உண்மை.



 மீத்தேன் எரிவாயுவின் பண்புகள் குறித்த சிறிய கண்ணோட்டம்:


கரிம நீரதை எனப்படும் Hydrocarbon வகையினைச் சார்ந்த மூலக் கூற்றினைக் (Molecular Formula) கொண்டதாக அறியப்படுவதே இந்த மீத்தேன் அல்லது மெத்தேன் எனப்படும் எரிவாயு.
பொதுவாக பல்லாண்டு காலமாக புவி வெப்பமடைதலை கண்டு உலகளவில் விஞ்ஞானிகள் அச்சமாக உள்ளனர்.மேலும் நாம யாரு ஓசோனுக்கே காத்து அசிச்சவங்க தானே.அத்தாங்க வாகனப்புகை,பிளாஸ்டிக் பைகளை எரிச்சு என பலவகையில் காற்றை (அ)சுத்தப்படுத்துறோம்.

இதற்கு முதன்மைக் காரணம் நமது வளி மண்டலத்தை எரிபொருட்களின் புகையினால் நிரப்புதலே. அதாவது கூடுதல் கரியமில வாயு (Co2) வெளியேற்றம் இதனாலேயே இற்றைக் காலங்களில் இதனை வெளியேற்றும் வானூர்திகளின் பயணச் செலவும் பன் மடங்கு அதிகரித்துள்ளது. இந்த  கரியமில வாயு (Co2) வை விட 10 மடங்கு மிக கூடுதலாய் புவி மண்டலத்தை துளையிட்டு புவி வெப்பமடைய அசுர வேகத்தில் செயல்படும் தன்மை மீத்தேன் வாயுவிற்கே உண்டு. இது கடலுக்கடியிலும் அதிகமாய் இருக்கின்றது.

அது மட்டுமா இல்லையே,மீத்தேன் வாயு வெடுப்பதற்கு முன் அதாவது அதன் விழுக்காட்டு தன்மை ஆராயப்படும் குறைந்தது 5%-15% வரை இருக்கும் போது தான் பற்ற வைப்பு,உலோகம் வெட்டுதல்,சாணை பிடித்தல், கூர் செய்தல் போன்ற ஆபத்தான பணிகளைத் துவக்குகின்றனர்.


எல்லாவற்றிற்கும் மேலாக மீத்தேன் வாயுவின் உருகு நிலை மைனஸ்  - 182.5 டிகிரி செல்சியஸ் , அதன் கொதி நிலை என்பதும் மைனஸ் – 161.6 டிகிரி செல்சியஸ் இது வாயு நிலையிலேயே இருக்கும் என்பதால் எப்போது வேண்டுமானாலும் தீப்பிடிக்கும் என்பது உண்மை.

அப்ப வீட்டில் உபயோகிக்கும் எரிவாயு ஆபத்தானாதா என்ற அடுத்த கேள்வி வரும்.ஆனால் நாம் அதை உருளையில் பயன்படுத்துகிறோம் மேலும் அதை கையாளும் விதத்தால் அபாயம் தவிர்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் எண்ணிலடங்கா சிக்கல்களை உருவாக்கும். சில முக்கியப் பிரச்சினைகளை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்;

1.நிலத்தடி நீர் ஒட்டுமொத்தமாக உறிஞ்சப்படுவதால் தற்போது கிடைக்கும் நீரும் கிடைக்காது.

2.நிலத்தின் அடியே வெடிகளை குறுக்கும் நெடுக்குமாக வைப்பதால் பூகம்பம் நிகழும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

3.இது போன்ற குழாய்களை அமைக்கும் போது ஏற்கனவே விவசாயம் செய்ய உதவும் ஆறுகள்,குளங்கள் போன்றவை அழிக்கப்படும்.

4.மேலும் இதானல் மக்கள் பிறந்து,உண்டு,வாழ்ந்த இம்மண்ணிலை அகதிகளாக வாழ நேரிடும்.

5.இந்த குழாய்களில் கசிவு ஏற்பட்டால் நஞ்சு மட்டுமல்ல,இந்த குழாயில் ஏற்படும் சேதத்திற்கு நம் மீது  தவறுதலாக தீவிரவாத வழக்குப் போடவும் வாய்ப்பு உள்ளது.


தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும் அனுமதி  மூன்று நிறுவனங்களுக்கு   கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்கள்

1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் ( Oil and Natural Gas Corporation Ltd  ONGC ) ,

2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் ( Gas Authority  of  India Ltd GAIL ) 

3.கிழக்கத்திய எரிசக்தி  நிறுவனம் ( Great Eastern Energy Corporation Ltd  GEECL  ).

இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. இந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும் , அந்த நிலத்தில் எத்தனை  மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அந்த நிலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.

  • இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் உணவை விளைவித்து தந்த நாமே அடுத்த வேலை உணவிற்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைமை ஏற்படும் என்பது உண்மையே.நம்மால் முடிந்த வரை மட்டுமல்ல,முழுமையாக இதை எதிர்த்து கூக்குரல் எழுப்ப வேண்டும்.இல்லையேல் உணவுக்கும்,வாழ்வுக்கும் திண்டாட்டம்,அந்த கம்பெனிகளுக்கு கொண்டாட்டாம் என்ற நிலை ஏற்படும்.







4 கருத்துகள்:

  1. அருமை சகோ நல்லதொரு சமூக நலனுக்கு வேண்டிய விடயத்தை அழகாக விளக்கியமைக்கு நன்றி உண்மைதான் விளம்பரச் செலவுகள் என்பது நாட்டுக்கும், மக்களுக்கும் அவசியமில்ல ஒன்று தரத்தை பார்த்து மக்கள் வாங்கி கொள்ளலாம் இது முதலில் மக்களுக்கே விளங்குவதில்லை

    சினிமா நடிகனும்,கிரிகெட் வீரனும் சொன்னால் அது தரமானவை என்று நம்புவது அறிவீனம் அருமையான பகிர்வுக்கு மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அய்யா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.அது என்னவோ உண்மை தாங்க அய்யா.நடிகர்களோ,வீரர்களோ நடித்தால் அந்த பொருட்கள் மிகவும் தரமானது என்று நினைத்துக் கொண்டு வாங்கி ஏமாறும் மக்கள் நம் நாட்டிலே அதிகம் குறிப்பாக தமிழ்நாடு தான் முதலிடம் அய்யா.

      நன்றி அய்யா.

      நீக்கு
  2. அருமையான பதிவு வைசாலி. மீத்தேன் குறித்த தங்கள் கட்டுரை புரியாத பலருக்கும் புரியும் மொழிநடையில் உள்ளது. நன்று.

    பதிலளிநீக்கு