திங்கள், 7 மார்ச், 2016

கண்ணீரை கொண்டு சர்க்கரை நோயை கண்டறிய முடியும்..!!

காண்டாக்ட் லென்ஸ் மூலம் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கண்டறியும் புதிய கருவியை கூகுள் கண்டறிந்திருக்கின்றது. வாடிக்கையாளர்களின் கண்ணீரின் மூலம் அவர்களின் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கண்டறிய முடியும் என கூகுள் நிறுவனத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்ணுல விளக்கெண்ணைய ஊத்திட்டு பாருங்க, இது தெரியும் ! இந்த வகை காண்டாக்ட் லென்ஸ்களை சோதனை செய்ய கூகுள் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த காண்டாக்ட் லென்ஸ் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும் என்று குவார்ட்ஸ்.காம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கண்ணீரை கொண்டு சர்க்கரை நோயை கண்டறிய முடியும்


லென்ஸ் நிறுவனம் பயனாளிகளின் கண்ணீரை கொண்டு உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கண்டறியும் திட்டத்தை அறிவித்தது. இந்த புதிய கருவியின் மூலம் விரல் நுனியில் இருக்கும் ரத்தத்தை கொண்டு சர்க்கரை அளவை கணக்கிடும் அவசியம் இனி இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்களை கிரங்கடிக்கும் தொழில்நுட்ப தகவல்கள் இந்த வகை காண்டாக்ட் லென்ஸ்கள் சந்தையில் கிடைப்பது குறித்து கேட்ட போது சம்பந்தப்பட்ட அனுமதி பெற்ற பின் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பாருங்க மக்களே நம் தொழில் நுட்பம் எப்படியெல்லாம் முன்னேற்றம் அடைகிறது..!!!

4 கருத்துகள்:

  1. நல்ல தகவல்கள் சகோ
    மன்னிக்கவும் சின்ன டவுட்டு வெங்காயம் உரிக்கும் பொழுது கண்ணீரை எடுத்து டெஸ்ட் செய்தால் தெரியுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா என்ன ஜி இப்படி கேட்டீங்களே..!!அதுவும் கண்ணீர் தானே தெரியும் ஐயா.டெஸ்ட் பண்ணுங்க ஐயா.

      நீக்கு
  2. கூகிள் க்ளாஸே இன்னும் சந்தையில் சரியாகக் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இது வரும்போது பார்க்கலாம் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா..

      நீக்கு