Skip to main content

சக்கர வியூகமும் 1/7 பின்னமும்..!!தோற்றம்;

பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் பிரமிப்பூட்டும் பல தந்திரங்கள் கையாளப்பட்டன.அதில் ஒன்று தான் சக்கர வியூகம் எனப்படுகிறது.இது வெவ்வேறு அளவிலான ஏழு சுழலும் வட்டங்களைசக் கொண்ட போர்த் தந்திரச் செயல்திட்டம்.இதில் ஒவ்வொரு சக்கர அடுக்கும் திருகு சுழல் வடிவில் சுழன்று அமையும்.அது உள்ளே செல்லச் செல்ல இறுக்கமாக மூடிக் கொள்ளும் ஒரு வீரர் இதன் உன்பகுதிக்கு முன்னேறும் போது பெரும் குழப்பமும் சோர்வும் அடைவார்.இதன் இறுதிச் சக்கர அடுக்கில் தலை சிறந்த வீரர்கள் உள்ளே வருபவரைக் கடுமையாகத் தாக்குவதற்காகக் காத்திருப்பார்கள்.

சக்கர வியூகம் அமைப்பு;

போர்களத்தில் சுழலும் மரண இயந்திரமாகச் சக்கர வியூகம் கருதப்பட்டது.எனவே மிக நுட்பமான அறிவும் ஆற்றலும் இல்லையெனில் இதன் உள்ளே செல்பவர்கள் உயிர் பிழைத்து மீண்டும் வெளியில் வருவது மிக அரிது.பாண்டவர்களை வீழ்த்த துரோணாச்சாரியார் இந்தச் சக்கர வியூக அமைப்பை ஏற்படுத்தினார்.பெரும் சிக்கலை ஏற்படுத்தி எதிரியை மதிமயங்க வைக்கும் இந்த பயங்கரமான போர்த் தந்திரத்தை முறையாகப் புரிந்து கொண்டு இந்தச் சக்கர வியூகத்தின் உள்ளே ஊடுருவிச் சென்று போர் புரிந்து பிழைத்து அதைத் தகர்த்து உயிருக்குச் சேதமில்லாமல் மீண்டு வரும் திறமை பாண்டவர்களில் அர்ஜீனன் உட்பட ஒருசிலருக்கே இருந்தது.

அபிமன்யு இறப்பு;மகாபாரத கதையின் படி அர்ஜீனன் தனது மகன் அபிமன்யு சுபத்திராவின் கருவில் இருக்கும் போது சக்கர வியூகத்தில்  எவ்வாறு உள்ளே செல்வது எப்படி திரும்ப வருவது குறித்து கூறுகையில் சுபத்திரா  தூங்கியதால் அபிமன்யுக்கு உள்ளே செல்ல தெரிந்தது ஆனால் வெளி வருவதற்கு தெரியாமல் கடைசி  வரை போராடி கவுர வீரர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு தன் உயிரை நீத்தார் அபிமன்யு.

சக்கரமாய் சுற்றும் 1/7;

நாம் ஏழு என்ற எண்ணைக் கொண்டு ஒரு சக்கர வியூகத்தை அமைக்கலாம்.உதராணமாக நாம் 1/7 என்ற பின்னத்தை எடுத்துக் கொள்வோம்.இந்த பின்னத்தை கணக்கிட்டால் மதிப்பு 0.142857 எனக் கிடைக்கும்.ஒவ்வொரு முறையும் இந்த பின்னத்தை 1 முதல் 6 வரை பெருக்கினால் 142857 என்ற எண்கள் மாறி மாறி வரும்.
உதாரணமாக,

0.1428578*1=0.142857
0.1428578*2=0.285714
0.1428578*3=0.428571
0.1428578*4=0.571428
0.1428578*5=0.714285
0.1428578*6=0.857142

சக்கரத்தை உடைத்த ஒன்று;

இப்பொழுது நாம் 1/7=0.142857142857 என்ற எண்ணை ஏழால் பெருக்கினால் கிடைப்பது  1 ஆகும்.எனவே மேலே உள்ள எண்ணை  ஏழால் பெருக்கினால் சக்கர அமைப்பு உடைந்து விடும்.எனவே முதல் தரத்திற்கு வந்து வீரராக வெளிப்படலாம்.7-ல் பெருக்குவதைப் போன்ற மிக முக்கியமான ரகசியம் தெரியாததால் இறுதி அடுக்கில் சிக்கி மாண்டார்.அடுத்த முறை கணக்குப் போடும் போது நீங்களும் இந்த சக்கர வியூகத்தை தகர்த்துவிடுவீர்கள் தானே..??


Comments

  1. கணிதம் நன்கறிந்த ஒருவரால்தான் இதன் நுட்பத்தை நன்கு புரிந்துகொள்ளமுடியும். அடுத்தவருக்குப் புரியவைக்கவும் முடியும். தாங்கள் நன்கு புரியவைத்தீர்கள் வைசாலி.

    ReplyDelete
  2. சக்கரவியுகம் பற்றிய அருமையான பதிவு தோழி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல       சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!
சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!       ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!
ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!       உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை
தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்       சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்
நீ வாழ்க்கை என்னும் படியை
வெற்றியுடன் தாண்ட முடியும்!
சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ

உழவுக்கு உயிரூட்டுவோம்..!!!

முன்னுரை;
உணவு, உடை, இருப்பிடம் என்பது குடிசையில் இருந்து மாட மாளிகையில் வாழ்பவர்கள் அனைவரது அடிப்படைத் தேவைகள் ஆகும்.பூமி எப்படி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதோ அதுபோல தான் விவசாயியும் தனக்கு வேண்டிய உணவை உற்பத்திச் செய்துவிட்டு பிறருக்கும் உணவை உற்பத்திச் செய்து தருகின்றனர்.இப்படிப்பட்ட விவசாயின் உழவுக்கு உயிரூட்வோம் என்ற வகையில் சில கருத்துகளை காண்போம்.
உழவு என்பதன் பொருள்;
உழவு தொழில் அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடைகளை வளர்பதையும் குறிக்கும்.வேள் என்னும் சொல்லின் அடியாகப்பிறந்த வேளாண்மை எனும் சொல் பொதுவாக கொடை,ஈகை ஆகியவற்றைக் குறிக்கும்.நிலமானது தரும் கொடையால் தான் இப்பெயர் வழங்கியிருக்கலாம்.வேளான் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் என்றும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருளும் உண்டு.
நெல் உற்பத்தி தொடக்கம்;
கி.மு.7000 நூற்றாண்டில் கோதுமை மற்றும் பார்லி வகைப் பயிரிடப்பட்டன.பிறகு தான் கோதுமையை விட நெல் (அரிசி) அதிகளவில் பயிரிடப்பட்டன.கடந்த நமத…