சனி, 27 பிப்ரவரி, 2016

சக்கர வியூகமும் 1/7 பின்னமும்..!!



தோற்றம்;

பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் பிரமிப்பூட்டும் பல தந்திரங்கள் கையாளப்பட்டன.அதில் ஒன்று தான் சக்கர வியூகம் எனப்படுகிறது.இது வெவ்வேறு அளவிலான ஏழு சுழலும் வட்டங்களைசக் கொண்ட போர்த் தந்திரச் செயல்திட்டம்.இதில் ஒவ்வொரு சக்கர அடுக்கும் திருகு சுழல் வடிவில் சுழன்று அமையும்.அது உள்ளே செல்லச் செல்ல இறுக்கமாக மூடிக் கொள்ளும் ஒரு வீரர் இதன் உன்பகுதிக்கு முன்னேறும் போது பெரும் குழப்பமும் சோர்வும் அடைவார்.இதன் இறுதிச் சக்கர அடுக்கில் தலை சிறந்த வீரர்கள் உள்ளே வருபவரைக் கடுமையாகத் தாக்குவதற்காகக் காத்திருப்பார்கள்.

சக்கர வியூகம் அமைப்பு;

போர்களத்தில் சுழலும் மரண இயந்திரமாகச் சக்கர வியூகம் கருதப்பட்டது.எனவே மிக நுட்பமான அறிவும் ஆற்றலும் இல்லையெனில் இதன் உள்ளே செல்பவர்கள் உயிர் பிழைத்து மீண்டும் வெளியில் வருவது மிக அரிது.பாண்டவர்களை வீழ்த்த துரோணாச்சாரியார் இந்தச் சக்கர வியூக அமைப்பை ஏற்படுத்தினார்.பெரும் சிக்கலை ஏற்படுத்தி எதிரியை மதிமயங்க வைக்கும் இந்த பயங்கரமான போர்த் தந்திரத்தை முறையாகப் புரிந்து கொண்டு இந்தச் சக்கர வியூகத்தின் உள்ளே ஊடுருவிச் சென்று போர் புரிந்து பிழைத்து அதைத் தகர்த்து உயிருக்குச் சேதமில்லாமல் மீண்டு வரும் திறமை பாண்டவர்களில் அர்ஜீனன் உட்பட ஒருசிலருக்கே இருந்தது.

அபிமன்யு இறப்பு;



மகாபாரத கதையின் படி அர்ஜீனன் தனது மகன் அபிமன்யு சுபத்திராவின் கருவில் இருக்கும் போது சக்கர வியூகத்தில்  எவ்வாறு உள்ளே செல்வது எப்படி திரும்ப வருவது குறித்து கூறுகையில் சுபத்திரா  தூங்கியதால் அபிமன்யுக்கு உள்ளே செல்ல தெரிந்தது ஆனால் வெளி வருவதற்கு தெரியாமல் கடைசி  வரை போராடி கவுர வீரர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு தன் உயிரை நீத்தார் அபிமன்யு.

சக்கரமாய் சுற்றும் 1/7;

நாம் ஏழு என்ற எண்ணைக் கொண்டு ஒரு சக்கர வியூகத்தை அமைக்கலாம்.உதராணமாக நாம் 1/7 என்ற பின்னத்தை எடுத்துக் கொள்வோம்.இந்த பின்னத்தை கணக்கிட்டால் மதிப்பு 0.142857 எனக் கிடைக்கும்.ஒவ்வொரு முறையும் இந்த பின்னத்தை 1 முதல் 6 வரை பெருக்கினால் 142857 என்ற எண்கள் மாறி மாறி வரும்.




உதாரணமாக,

0.1428578*1=0.142857
0.1428578*2=0.285714
0.1428578*3=0.428571
0.1428578*4=0.571428
0.1428578*5=0.714285
0.1428578*6=0.857142

சக்கரத்தை உடைத்த ஒன்று;

இப்பொழுது நாம் 1/7=0.142857142857 என்ற எண்ணை ஏழால் பெருக்கினால் கிடைப்பது  1 ஆகும்.எனவே மேலே உள்ள எண்ணை  ஏழால் பெருக்கினால் சக்கர அமைப்பு உடைந்து விடும்.எனவே முதல் தரத்திற்கு வந்து வீரராக வெளிப்படலாம்.7-ல் பெருக்குவதைப் போன்ற மிக முக்கியமான ரகசியம் தெரியாததால் இறுதி அடுக்கில் சிக்கி மாண்டார்.



அடுத்த முறை கணக்குப் போடும் போது நீங்களும் இந்த சக்கர வியூகத்தை தகர்த்துவிடுவீர்கள் தானே..??


4 கருத்துகள்:

  1. கணிதம் நன்கறிந்த ஒருவரால்தான் இதன் நுட்பத்தை நன்கு புரிந்துகொள்ளமுடியும். அடுத்தவருக்குப் புரியவைக்கவும் முடியும். தாங்கள் நன்கு புரியவைத்தீர்கள் வைசாலி.

    பதிலளிநீக்கு
  2. சக்கரவியுகம் பற்றிய அருமையான பதிவு தோழி.

    பதிலளிநீக்கு