சனி, 20 பிப்ரவரி, 2016

எழில் கொஞ்சும் இயற்கை..!!


Image result for எழில் கொஞ்சும் இயற்கை

காலையில் கண் விழித்தவுடன் புதிதாய் ஒரு பொழிவு!

ஏதோ ஒரு வெளிச்சம் என் கண்களை வருடிச் சென்றது;

கண்துடைத்து வியப்புடன் புதிதாய் மலர்ந்த சூரிய காந்தியோ?

என்று பறிக்க முயன்று ஏமாற்றத்துடன்  திரும்பினால்;

முன்னே உறைக்காற்று சீறிப்பாய பின்னே சிறகடித்து

பறவை கூட்டம் துறத்தி விளையாடி கொண்டிருந்தது;


Image result for இயற்கை பறவைகள்

உடன் நானும் விளையாட மனம் ஏங்கியது!

ஏக்கத்துடன் தலை குனிந்த போது

இளந்தென்றல் காற்று என் மனதிற்கு இனிமை அளித்து

என்னையும் உடன் அழைத்து சென்றது; அங்கே

ஆர்பறித்து வரும் நீர் ஏதோ முணுமுணுத்து

என்னை கடந்து சென்றது; எட்டிப் பார்த்தால்

கண்ணை கவரும் வெண்முத்து!

கையை விட்டு எடுத்தால் தண்ணீர் மட்டுமே வந்தது!



Image result for எழில் கொஞ்சும் இயற்கை

மேலே பார்த்து உண்மையை உணர்ந்தேன்;

கோபத்துடன், என் மனதில் ஒரு கேள்வி!

நீ தான் இயற்கையோ? ஆனால்

எனக்கு செயற்கையை தான் தெரியும் என்றேன்;

அப்போது, பொறுமையாய்,

இயற்கையின்றி செயற்கை உண்டோ?  என்று

நீ சொல்லாமல் சொன்னாய்! நான்

கேட்காமல் உணர்ந்தேன்; திடீரென்று

இனிய குயிலின் குரலோசை என்

செவியை தட்டி எழுப்பியது; அதனால்

நிஜத்தை விட்டு இயற்கையோடு மூழ்கியிருந்த

என் கனவிலிருந்து பிரியா விடைபெற்றேன்!


Image result for இயற்கை பறவைகள்


15 கருத்துகள்:

  1. சூழலைப் படிப்போரும் கனவு காணும் வண்ணம்
    படைத்த கவிதை அருமையிலும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல அம்மா.

      நீக்கு
  2. சிறந்த சிந்தனை சீரிய கருத்து

    பதிலளிநீக்கு
  3. அருமையான சூழலை அமைத்து எங்களையும் கனவில் ஆழ்த்திய தோழி கீர்த்தனாவுக்கு வாழ்த்துகள் மா..

    பதிலளிநீக்கு
  4. தொடர்ந்து எழுதுங்க கவிதாயினி கீர்த்தனா.

    பதிலளிநீக்கு
  5. கலாம் சொன்னபடி கனவு கண்டு இருக்குறீர்கள் என்று நிணைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. தெளிவான நடை அருமை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  7. தங்களது தளத்தில் எப்படி இணைந்து கொள்வது ?

    பதிலளிநீக்கு