வெள்ளி, 6 அக்டோபர், 2017

தாயின் அருமை

                                            தாயின் அருமை           
                                           

    "அம்மா!...வலித் தாங்க முடியலயே ..அம்மா!...."
"கொஞ்சம் பொறுத்துக்கோ மாலதி ஒண்ணும் ஆகாது நான் இருக்கேன் "
"முடியலங்க ரொம்ப வலிக்குது" ... என்று பிரசவ வலியில் துடிதுடித்து போனாள் மாலதி .
திவாகருக்கு இப்படியெல்லாம் துன்ப பாடுவாள் என நினைத்திருந்தால்  உள்ளே வந்திருக்க மாட்டான்
திடீரென அம்மாவின் நியாபகம் ,...அவனையும் சேர்த்து ஆறு பேர் ,..நாலு ஆண் ரெண்டு பெண் ...எப்படித் துன்ப பட்டிருபாள் ......
    "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது "என கூறி சென்றாள் மருத்துவர் .
மாலதி மயங்கி கிடந்தாள் ...
ஆனால் திவகருக்கு தன் தாயின் நினைவாகவே இருந்தது .
யாருக்கோ அவசரமாய் போன் பண்ணினான் .
"மேடம்! நான் திவாகர் பேசறேன்" .
"சொல்லுங்க திவாகர் நேத்தே எல்லா பில்லும் கட்டிடிங்களே!"
"இல்லை மேடம் நான் என் அம்மாவை கூட்டிச் செல்ல இருக்கிறேன் ...அதற்கு தேவையான ஏற்பாடுகளை செயுங்கள்" ...என்றான் திவாகர்.
  "சரி திவாகர் நான் ஏற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் தங்களுக்கு தெரிவிக்கிறேன்"..என்று கூறி வைத்தார் அந்த முதி
யோர் இல்ல நிர்வாகி. mother image in tamil க்கான பட முடிவு


வயதான தாய் தந்தையிடம் நாலு வார்த்தை அன்பாக பேசினாலே போதும் அவர்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க ...ஏன் என்றால் அவர்கள் தேவைகளை விட உணர்வுகளை அதிகம் நேசிப்பவர்கள் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக