வியாழன், 6 ஏப்ரல், 2017

காசநோய்..

                 
               
   காசநோய் என்பது நுரையீரலை பாதிக்கக் கூடிய தொற்று நோய். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும் போதோ தும்பும் போதோ அவரிடம் உள்ள கிறுமிகள் மற்றொறுவருக்கு பரவுகிறது. காசநோயை கண்டு பிடித்தவர் ‘ராபர்ட் கார்க்’. இவர் மார்ச் 24, 1882 ஆம் ஆண்டு இந்நோயைக் கண்டு பிடித்தார்.

தொற்றின் தன்மை;
காசநோய் பாதிக்கப் பட்டவரிடம் இருந்து வெளிவரும் தொற்று சூரிய ஒளி படும் போது உடனே இறந்து விடும். ஆனால் சூரிய ஒளி இல்லாத பட்சத்தில் அத் தொற்று இரண்டு நிமிடம் வரை உயிர் வாழும்.

காசநோய் வகைகள்;
               காசநோய் இரண்டு வகைப்படும். ஒன்று நுரையீரலை பாதிக்கும். மற்றொன்று நுரையீரலைத் தவிர மற்ற உடல் பாகங்களை பாதிக்கும் {முடி மற்றும் நகங்களைத் தவிர}. நுரையீரலில் பாதிக்கப் பட்டவர்கள் இரும்பும் போது மட்டும் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொவருக்கு பரவும். மற்ற பாகங்களில் பாதிக்கப் பட்டவர்களிடம் இருந்து தொற்று இன்னொருவருக்கு பரவாது. கருவுற்று இருக்கும் பெண்ணிடமிருந்து சிசுவிற்கு நோய் தொற்று பரவாது.

உணவு முறை;

                 நோய் பாதிக்கப் பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதற்கு தகுந்தவாறு உணவு முறை இருக்க வேண்டும். முட்டை போன்ற அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சைவம் உண்ணுபவர்கள் முளைக் கட்டிய பயிர் வகைகள் மற்றும் புரத சத்துக்கள் மிகுந்த பருப்பு வகைகளை உண்ண வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக