வியாழன், 6 ஏப்ரல், 2017

நீதிதேவன் மயக்கம்..

                                           

     ”நீதிதேவன் மயக்கம்” என்பது “அறிஞர் அண்ணா” எழுதிய நூலின் பெயர். இந்நூல் எனது மனம் கவர்ந்த நூல்.



      நூலின் தொடக்கம், பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க இறைவன் ஆணையிடுகிறார். அதில் முதலாவது கம்பரின் வழக்கு. அவ்வழக்கில் ராவணன் அரக்கன் என்று கம்பர் குற்றம் சாட்டுகிறார். வழக்கை நீதிதேவன் விசாரிக்கிறார். கம்பரும் ராவணனும் நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள் , இருவரும் சாட்சிகள் சமர்ப்பிக்கிறார்கள். இறுதியில் ராவணன் நீதிதேவனை அழைத்துக் கொண்டு சென்று நிறைய சாட்சிகளை காண்பிக்கிறார். ராவணன் பக்கத்தில் உள்ள நியாயத்தை உணர்கிறார் நீதிதேவன். வழக்குக்கான தீர்ப்பை நீதிதேவன் கூற வருகையில் மயங்கி விழுகிறார், கம்பர் சபையைவிட்டு வெளியே செல்ல முயல்கிறார் கால் வழுக்கி கீழே விழப்போகும் போது ராவணன் கம்பரை நோக்கி சென்று அவரை தாங்கிப் பிடிக்கிறார். இவ்வாறு கதையை முடிக்கிறான் அறிஞர் அண்ணா. கதையின் முடிவு உணர்த்தும் வழக்கின் தீர்ப்பை.


    நம் மனதில் எழும் கேள்விகளை அடுத்தடுத்த உரையாடலாக அமைத்துள்ளார். என் மனதில் இராவணன் அரக்கன் என்று இருந்த எண்ணத்தை மாற்றியது இந்நூல். படிப்பதற்கு எளிமையாக இந்நூல் அமைந்துள்ளது. ஆரியக் கருத்தை மறுத்து திராவிடக் கருத்தை எடுத்துக் கூறுவதாகவும் இந்நூல் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக