வியாழன், 26 மே, 2016

மே டின் ஜப்பான்…!!!


இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவத்தின் அணுக்குண்டு வீச்சால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நகரம் தான் ஜப்பான்.பொருளாதாரத்தில் மிகவும் அடிப்பட்டு பின் தங்கிய நிலையும் ஏற்பட்டு இருந்தது.போர்முனையில் தோற்றாலும்,பொருளாதாரத்தில் தோற்க விரும்பாமல் தன்னம்பிக்கையும் உழைப்பையும் உரமாக்கி மண்ணில் விதைத்தனர் ஜப்பானியர்கள். பல தலைவர்களால் ஜப்பான் பொருளாதாரம் விரிவடையக் காரணமாக இருந்தாலும் 30 ஆண்டுகளில் ஜப்பான் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நிகராக மாற்றியவர், மே டின் ஜப்பான்(made in japan) என்ற வாசகத்திற்கும்,தரக்கட்டுபாட்டிற்கும் ஒரு பிரம்மாவாக திகழ்ந்தவர் தான் அகியோ மொரிட்டோ( Akio Morito ) இவரைப் பற்றி தான் இப்பதிவு அமைய உள்ளது.

1921 ஆண்டு ஜனவரி 26 அன்று ஜப்பானில் உள்ள டோக்கியோ என்ற நகரில் பிறந்தவர் தான் மொரிட்டோ.400 வருடங்களாக தனது குடும்பம் செய்து வந்த மதுபானம் தயாரிக்கும் தொழிலை ஜப்பானியர்களுக்கு கற்று தருவதால் எந்தவித பொருளாதார முன்னேற்றமும் ஏற்படாது என்று நினைத்தார்.அவருக்கு சிறுவயதில் இருந்தே கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் ஆர்வம் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் மின்னியல் பொருள்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்யலாம் என்று நினைத்தார்.1946 ஆண்டு மே 7 அன்று தனது கடற்படை நண்பரோடு 375 டாலர் மதிப்பில் அதாவது 190 ஆயிரம் யெண் முதலீட்டில் டோக்கியோ டெலி கமுனிகேசன் என்ஜினியரிங் கார்பரேசன் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னியல் பொருள் தான் டேப் ரெக்காடர் என்ற ஒலிப்பதிவு கருவி ஆகும்.போருக்கு பிந்திய காலம் என்பதால் அவர்களால் அதிக பணம் கொடுத்து வாங்க இயலாது என்பதால் அமெரிக்காவின் வெல் லேப்ஸ்  நிறுவனத்திலிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டை பையில் வைக்கக்கூடிய அளவில் ஒரு வானொலியை உருவாக்கினார்.அமெரிக்காவில் இருந்து வாங்கி உற்பத்தி செய்து அதனை அவர்களிடமே விற்பனை செய்தார்.எனவே உலகம் முழுவதும் இவர்களின் பொருள்கள் வலம் வர வேண்டும் என்று பல அகராதிகளில் தேடிய போது தான், சோனஸ் என்ற சொல் அதாவது அதற்கு ஒலி என்று பொருள்.பிறகு சோனிபாய்ஸ் என்ற இசைக்குழுவின் பெயரை இணைத்து தான் சோனி கார்பரேசன் என்ற பெயரை உருவாக்கினார்.

தனது குழந்தைகளுடன் சுற்றுலா செல்லும் போது தனது பிள்ளைகள் பெரிய வானொலிகளை எடுத்துச் செல்வதை கவனிந்த மொரிட்டோ,உடனே யோசித்து உருவாக்கிய பொருள் தான் வாக்மேன்.இதனை உருவாக்கிய போது அருகில் இருந்தவர்கள் காதில் வாக்மேனை மாட்டிக் கொண்டு போனால் பைத்தியம் என்று நினைப்பர் எனக்கூறினார்கள்.அதனை முறியடித்தது வாக்மேன்.இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.பிறகு தொலைகாட்சி,வானொலி போன்ற பல்வேறு பொருள்கள் தரக்கட்டுபாடு கொண்டு உற்பத்தி செய்து விநியோகம் செய்தார்.இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில்முனைவோரில் அமெரிக்கா இல்லாத ஒரு ஜப்பானிய நபர் தான் மொரிட்டோ.


தனக்கு 72-வயது நடைபெற்ற போது வாதத்தால் பாதிக்கப்பட்டார்.பிறகு அனைத்து பொறுப்புகளையும் தனது பொருளை குறைக்கூறி கடிதம் எழுதிய நொரியோ ஒகா என்பவரின் குறையில் நிறைக் கண்டு அவரிடம் ஒப்படைத்தார்.1966 ஆண்டு அவர் எழுதிய Never Mind School’s Records என்ற நூலில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப் பெற பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள் முக்கியமல்ல என்று மொரிட்டோ வாதாடினார்.ஆர்வம் தான் படைப்பாற்றலின் திறவுகோல் என்பவது மொரிட்டோ நமக்கு விட்டுச் சென்ற பொன்மொழி.நாம் அனைவரும் ஆர்வம்,தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

9 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  2. இதுவரை நான் அறிந்தது அஜினோமோட்டோ மட்டுமே !அகியோ மொரிட்டோவைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

      நீக்கு
    2. ஹா..... ஹா..... ஹா.... பகவான்ஜி..!

      நீக்கு
  3. நல்லதொரு உழைப்பாளியைப் பற்றிய தகவலுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு