செவ்வாய், 21 ஜூன், 2016

மாய மந்திரம்! இந்திர ஜாலம்!






மாயா ஜாலாம் தொடர்கிறது..                
           இந்த இந்திர ஜாலம் பற்றி 1300 ஆண்டுகளுக்கு முன் தண்டி என்ற கவிஞர் எழுதிய தசகுமார சரித்திரம் என்ற வடமொழிக் கதைப் புத்தகத்தில் ஒரு சுவையான கதை வருகிறது.
சுவையான மாய மந்திரக் கதை
மகத நாட்டில் ராஜவாஹனன் என்ற இளவரசன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தையை மாளவ மன்னன் மானசாரன் தோற்கடித்து காட்டுக்கு விரட்டி விடுகிறான். ராஜவாஹனன் தாய் தந்தையரின் அனுமதி கேட்டு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான். அவனுடன் வந்த பத்துப் பேரையும் இடையில் தவற விடுகிறான். பின்னர் அவன் மட்டும் தனியாகப் பயணம் செய்து உஜ்ஜையினி நகரை அடைகிறான். அதுதான் மானசார மன்னனின் தலை நகரம். அந்த மன்னனுக்கு அவந்திசுந்தரி என்ற அழகிய மகள் உண்டு.எதிர்பாராத விதமாக உஜ்ஜையினி நகரில் அவனுடைய பழைய நண்பனைச் சந்திக்கிறான். அவன், அவந்தி சுந்தரியின் தோழியைத் திருமணம் செய்துகொண்டு செல்வாக்குடன் விளங்குபவன். அவர்கள் மூலமாக அவந்தி சுந்தரியைச் சந்திக்கிறான். காதல் மலர்கிறது. ஆனால் தந்தையைக் காட்டிற்கு விரட்டிய மன்னனின் மகளைக் காதலிப்பதால் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாது.இதுபற்றி எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, வித்யேஸ்வரா என்ற மந்திரவாதியின் தொடர்பு கிடைக்கிறது. அவன் உதவி செய்ய முன்வருகிறான். இருவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அவந்திசுந்தரி தனது தந்தை மானசாரனிடம் சொல்லி ஒரு மாயாஜாலக் காட்சியை ஏற்பாடு செய்கிறாள். அதில் அற்புதமான காட்சிகள் வருகின்றன.


                                                                (தொடரும்..)

4 கருத்துகள்: