இயற்கை ..!!


இயற்கை..!!!

இறைவனின் படைப்பிலே

இயற்கையும்

ஓர் அற்புதப் படைப்புதான்..!!!

பூமியை அழகுபடுத்தும் ஓர்

அற்புத சாதனம் இயற்கை..!!

கோடையின் கொந்தளிப்பும்

குளிரின் நடுக்கமும்

கொண்டது இயற்கை..!!

மழைக்காலத்தில் செழுமையும்

கோடைக்காலத்தில் வறட்சியும்

மாறி மாறி கட்டித்தழுவும்

ஓர் அற்புத நிகழ்வு இயற்கை..!!

வானிற்கே வர்ணமிடும் வானவில்;

இரவிற்கு கோலமிடும் நட்சத்திரம்;

இருட்டிற்கு வெள்ளையடிக்கும் நிலா;பசுமைக்கு உயிரிடும் மரங்கள்;எனப்

பல புதுமைகள் கொண்டது இயற்கை..!!

மனித வாழ்க்கையின் நம்பிக்கை இயற்கை..!!

இயற்கை வளம்காத்து

இறைவனடி சேர்வோம்..!!!

Comments