ஞாயிறு, 12 ஜூலை, 2020

உணர்வுகள்

யாது என்று அறியாமல்
இவர் என்று புரியாமல்
இதுவே இல்லை அதுவே
என்ற குழப்பம் இல்லாமல்
தன்னையே அறியாமல்
வருவது தான் உணர்வுகளோ??
என்ற கேள்வி அனைவருக்கும்
இருந்து கொண்டு தான் இருக்கிறது.
என்ன செய்வது!
மனிதனாக பிறந்தால் 
உணர்வு ஒன்று இருக்க தானே செய்யும் என்ற உணர்வுடன் 
இவ்வரிகளை சமர்ப்பிக்கிறேன்

வெள்ளி, 26 ஜூன், 2020

லிப்ரே அலுவல் தொகுப்பு அறிமுகம் - Introduction to LibreOffice


லிப்ரே ஆபீஸ் என அழைக்கப்படும் திறந்தமூலகட்டற்ற மென்பொருளை எவ்வாறு
பதிவிறக்குவது,?
நிறுவுவது?
பயன்படுத்துவது?
வசதிகள் யாவை?
ஆகிய கேள்விகளுக்கு விடையளிப்பதாக இப்பதிவு அமைகிறது.

வியாழன், 18 ஜூன், 2020

தனியாக நடக்க கற்றுக் கொள்ளுங்கள்
ஏனெனில் பலர் நீங்கள் முடிக்கும் பொழுது உங்களுடன் கடைசி வரை தொடரமாட்டார்கள்.

செவ்வாய், 16 ஜூன், 2020

தொடித்தலை விழுத்தண்டினார்


சங்க இலக்கியத்தில் தொடரால் பெயர்பெற்றவர்கள் வரிசையில் தொடித்தலை விழுத்தண்டினார் என்ற புலவரின் பெயர்க்காரணத்தை அவர் இயற்றிய பாடல் வழி விளக்குகிறது இப்பதிவு. இப்பதிவு ரீட் அலவுட் என்ற நுட்பத்தின் வழியாக தமிழ் எழுத்துகளை  கணினி வழி வாசித்துப் பதிவு செய்யப்பட்டது. 

வாழ்க்கை

பல்வேறு  வகையான வலிகளையும்,
வேதனைகளும் நிறைந்தது தான் வாழ்க்கை.

திங்கள், 15 ஜூன், 2020

வியாழன், 11 ஜூன், 2020

செவ்வாய், 9 ஜூன், 2020

கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும்


கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும் என்ற இப்பதிவானது வலைப்பதிவு, யூடியூப் ஆகிய இரு தளங்களிலும் ஆட்சென்சின் இன்றைய நிலையையும், புதிய பதிவர்களுக்கான ஆட்சென்சு குறித்த அறிமுகமாகவும் அமைகிறது.

வெற்றியாளன்

உறுதியாய் தீர்மானித்தவனுக்கு
எல்லா வகையான  பிரச்சனைகளும் எளிது

வெள்ளி, 5 ஜூன், 2020

ஆட்சென்ஸ் தகுதி பெற்ற பெண் எழுத்தாளர்களின் வலைப்பதிவு



டிசம்பர் 15, 2015 அன்று கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக இந்த வலைப்பதிவு  தொடங்கப்பட்டது. கணித்தமிழ்ப் பேரவையின் நிதிநைல்கையுடன் கணினித் தமிழ்த் தட்டச்சு முதல் கணினித் தமிழ் நுட்பங்கள் வரை மாணவிகளுக்குப் பயிற்றுவித்தோம்.கணினித் தமிழ் நூலகம் ஒன்றை உருவாக்கினோம். அதன் ஒரு பயிற்சிக்களமாக இந்த வலைப்பதிவில் மாணவிகள் குழுவாகப் பதிவிடத் தொடங்கினர். ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஆர்வமான 50 மாணவிகள் தொடர்ந்து அவர்களது சிந்தனைகளைப் பதிவு செய்தனர். இன்றுவரை இந்த வலைப்பதிவு, 184539 மொத்த பார்வைகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த வலைப்பதிவில் மாணவிகளும் பெண் உதவிப் பேராசிரியர்களும் எழுதி வருகின்றனர். பெண்களின் சிந்தனைக் களமாக இந்த வலைப்பதிவு திகழ்கிறது.
 
இன்றைய பதிவு 1461 ஆக இடம்பெறுகிறது.  கவிதை, கட்டுரை,  பொது அறிவு, ஓவியம், வாழ்க்கை, பெண்ணியம், அனுபம், அறிவியல், கணிதம் எனப் பல துறைகள் சார்ந்த இம்மாணவிகளின் சிந்தனைகள் பெரிய பார்வையயும், பாராட்டையும் பெற்றதுடன் இவர்களுக்குள் இருந்த படைப்பாக்கத்திறனையும், நட்பு வட்டத்தையும் உருவாக்கியுள்ளது. யாவற்றுக்கும்  மேலாக, டிக்டாக் போன்ற பொழுதுபோக்கு ஊடகங்களையும் கடந்து இதுபோன்ற வலைப்பதிவுகளில் எழுதுவதால் இணையப்பரப்பில் இவர்களது பெயரும் சிந்தனைகளும் நீங்கா இடம்பெற்றுள்ளன. வலைப்பதிவுகளுக்கு விளம்பரம் வெளியிட்டு பணம் வழங்கும் ஆட்சென்ஸ் விதிகளின் படி இந்த வலைப்பதிவு தகுதி பெற்றதால் இன்று விளம்பரம் வெளியிடுதற்கான அறிவிப்பு கிடைத்துள்ளது. அங்கீகாரம் வழங்கிய கூகுள் ஆட்சென்ஸ் நிறுவனத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
தங்களது சிந்தனைகளால் இந்த வலைப்பக்கத்தை நிறைத்த மாணவிகள் ஒவ்வொருவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய தாளாளர், துணைத் தாளாளர், செயல் இயக்குநர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்

மாணவிகளின் திறமைகளை இனம்கண்டு களம் அமைத்து தொடர்ந்து ஊக்குவித்து வரும் முதல்வர் முனைவா் மா. கார்த்திகேயன் அவர்களுக்கு எம் நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்கிக்கொள்கிறோம். 

மாணவிகள் வெளியிடும் பதிவுகளை வாசித்து கருத்துரை நல்கி வழிகாட்டிவரும் ஆசிரியர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்

 

செவ்வாய், 2 ஜூன், 2020

ஆசிரியர்களுக்குத் தேவையான 5 குரோம் நீட்சிகள்


குரோம் வெப்சுடோரில் கிடைக்கும் நீட்சிகளுள், ஆசிரியர்களுக்கு கிடைக்கும் ஐந்து நீட்சிகளை அறிமுகம் செய்வதாக இப்பதிவு அமைகிறது.

வெள்ளி, 29 மே, 2020

வியாழன், 28 மே, 2020

புதன், 27 மே, 2020

பிறர் பொருளை விரும்பாதே..


18. வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.                       171
பிறா் பொருளை விரும்பியவனின் குடியும்கெட்டு குற்றமும்
சேரும்
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.                       172
நடுநிலையாளர் பிறா் பொருளை விரும்பாதவராவா்
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.                     173
அற இன்பம் பெரிதென உணா்ந்தவா்  சிற்றின்பங்களை விரும்பார்
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.                      174
புலன்களை வென்றவா் வறுமையால் பிறா் பொருளை விரும்பார்
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.                       175
பிறா் பொருளை விரும்பாமையல்லவா அறிவு   
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.                     176
அருள்வழியென்பதே நல்வழி, பொருள் வழியே தீயவழி
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.                      177
தவறாக சேர்த்த செல்வம் தேவையான நேரத்தில் பயன்படாது
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.                 178
செல்வம் குறையாமலிருக்க வழி பிறர்பொருளை விரும்பாமை
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.                      179
பிறா்பொருளை விரும்பாதவரிடமே செல்வம் தங்கும்
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.               180
ஆசை அழிவின் வழி, ஆசையின்மையே வெற்றியின் வழி

கைரேகை

கோலா என்ற விலங்குக்கு மனிதனைப் போன்றே கைரேகை உள்ளது.

திங்கள், 25 மே, 2020

பலம்

எது நம்மை கொல்லாமல் விடுகிறதோ
அது நம் பலமாகிவிடுகிறது.
   
                             -  நீட்சே 

செவ்வாய், 19 மே, 2020

மனநிறைவு

மனநிறைவு நமக்கு இருக்கும் இயற்கை யான செல்வம்.ஆடம்பரம் நாம் தேடிக்கொள்ளும் வறுமை.
                 
                   -சாக்ரட்டீஸ்

வீரம்

சாய்ந்த பின்
மரங்கள்
பொருளாகும்...
நீ
மாய்ந்த பின்
வீரம்
வரலாறாகும்.

வாழ்க்கை

சின்னச் சின்ன ஆசைகள்
கொண்டதே வாழ்க்கை

திங்கள், 18 மே, 2020

இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயலிகள் - முனைவா் இரா.குணசீலன்

முங்கில்

மூங்கில் 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வளரும்.

யானை

யானை 3 மைல் தொலைவுக்கு அப்பால் நீர் இருந்தாலும் அதன் வாசனையை உணரும்.
சுதந்திரத்திற்கு கட்டுபாடுகள் உண்டு,
ஆனால் எல்லைகள் இல்லை.

ஞாயிறு, 17 மே, 2020

பாடம்

துன்பபடாமலும் அவமானபடாமலும் எவரும் எதையும்
கற்க முடியாது.

விழி

ஒரு பொருளை கனிவுடன் பார்க்கும் போது நமது விழியில் உள்ள பாவை 45 சதவீதம் விரிவடைகிறது.

சுட்டு விரல்

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி
சிலையின் நீளம் 8 அடி.

சனி, 18 ஏப்ரல், 2020

வேதம்

வேதம் கூறும் பொருள்
வேதத்தில் கூறப்படும் உண்மைப் பொருள் மூன்று.
தொன்மை மிக்கவை
தோற்றம் இல்லாதவை
பதி, உயிர்க்கூட்டங்கள்,பாத்தளைகள்
என்பன.

நம்பிக்கை

கடலிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்து
வரும் அலைக்கோ கரையை கடப்போம் என்ற நம்பிக்கை !

கரையில் நிற்கும் மனிதனுக்கோ அது கரையை கடந்து வராது என்ற நம்பிக்கை !

நம்பிக்கை முரண்படலாம்...

ஆனால் நம்பிக்கையின்றி
வாழ்க்கை சுழற்சி ஆகாது...

வியாழன், 16 ஏப்ரல், 2020

மனைவி

மனைவி என்ற சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்.
1துணைவி 2.கடகி 3.கற்பாள் 4.காந்தை
5.வீட்டுக்காரி 6.கிழத்தி 7.குடும்பினி 8.பெருமாட்டி 9.இல்லத்தரசி 10.வதுகை 11.வேட்டாள் 12.உவ்வி 13.சீமாட்டி 14.தலைமகள் 15.தாட்டி 16.தாரம் 17.நாச்சி 18.பரவை 19.பெண்டு 20.இல்லாள் 21.மணவாளி 22.மணவாட்டி 23.பத்தினி 24.தலைவி 25.அன்பி.

புதன், 15 ஏப்ரல், 2020

மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்கள்:
1.பாண்டரங்கம்
2.கொடுகொட்டி
3.மரக்கால்
4.பாவை
5.துடி
6.குடை
7.அல்லியம்
8.குடம்
9.மல்
10.பேடி
11.கடையம்

இந்திய மண் வகைகள்

மணல்
வண்டல் மண்
சதுப்பு மண்
செம்மண்
கரிசல்மண்
மலை மண்

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

கல்வி

நல்ல மனிதர்களுடன் பழகும் அனுபவமும் ஒருவிதமான கல்விதான். (கலாமின் திருப்புமுனைகள், பக்கம் 104).

இடையூறுகளுக்கு எஜமானனாகு

இடையூறுகள் உனது தலைவனாக மாறி உன்னை அதிகாரம் செய்ய அனுமதித்துவிடாதே. நீ அவற்றின் எஜமானனாக மாறி அவற்றை உன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு வெற்றியடை. - சதிஷ் தவன்.
(கலாமின் திருப்புமுனைகள், பக்கம் 101)

திங்கள், 13 ஏப்ரல், 2020

பதி
பதி என்பது படைத்தல் காத்தல்
அழித்தல் மறைத்தல் அருளல் என்னும்
ஐந்தொழிலைச் செய்யும் நீலகண்டனாகிய சிவம் எனப்படும்.

செவ்வாய், 17 மார்ச், 2020

சனி, 14 மார்ச், 2020

இன்றைய தினம்

இன்றைய தினம்
        ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்.
        கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்.
        கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு தினம்.
தமிழின் பதினாறு சிறப்புப் பெயர்கள் 
1.தொன்மை
2.முன்மை
3.எண்மை
4.ஒண்மை
5.இளமை
6.வளமை
7.தாய்மை
8.தூய்மை
9.செம்மை
10.மும்மை
11.இனிமை
12.தனிமை
13.நுண்மை
14.திருமை
15.இயன்மை
16.வியன்மை
சாமுவேல் பட்லர்
        வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
மெக்காலே
       உணர்ந்து படிக்கும் ஒரு பக்கம், விரைந்து படிக்கும் ஒரு நூலை விட மேலானது.
இன்றைய வெளிச்சம்
        அளவற்ற உழைப்பே மேன்மை தரும்.
        குழந்தைகளை குறை சொல்வோரை விட, அவர்களுக்கு வழிகாட்டுவோரே அதிகம் தேவை.

வியாழன், 12 மார்ச், 2020

இன்றைய தினம்

இன்றைய  தினம் 
       ஏர்ல் நைட்டிங்கேல் பிறந்த தினம்
       உலக சிறுநீரக தினம்
திறனாய்வு வகைகள்
1.விதிமுறைத் திறனாய்வு
2.முடிபுமுறைத் திறனாய்வு
3.ஒப்பீட்டு முறைத் திறனாய்வு
4.வரலாற்று முறைத் திறனாய்வு
5.விளக்கமுறைத் திறனாய்வு
6.முருகியல் முறைத் திறனாய்வு
7.மதிப்பீட்டு முறைத் திறனாய்வு
8.வாழ்க்கை வரலாற்று வழித் திறனாய்வு
9.உளவியல் முறைத் திறனாய்வு
10.நலம் பாராட்டும் திறனாய்வு
ஸ்டாலின் 
       ஆற்றல்களில் மிஞ்சிய ஆற்றல் மனிதனின் மன ஆற்றல் தான்.
வில்லியம் பென்
        வேதனையின்றி வெகுமதியில்லை, முள் இன்றி அரியனை இல்லை.
இன்றைய வெளிச்சம் 
        அடிமையைப் போல் உழைப்பவன் அரசனைப் போல உண்பான்.
        உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர் வெற்றி எதையும் சாதிக்க முடியாது.

வெள்ளி, 6 மார்ச், 2020

தன்னாட்சியை இழந்த நமக்கு
தமிழர்  என்ற பெயர் எதற்கு ?

                   தமிழர் தமது குல தொழில்களை பரம்பரை ,பரம்பரையாக செய்து கொண்டு அவரவர் பழக்க ,வழக்கங்களை பின்வரும் சந்ததியருக்கு கற்பித்து வாழ்ந்து வந்தனர் .
                   எவரும் ஒருவருக்கொருவர் சாலைப்பிள்ளை என்று தன்னாட்சியாக நின்று உழைத்தனர் .அவரவர் கடமைகளை கருத்தோடு செய்வதுமட்டுமின்றி, திறமைகளை வளர்த்துக்கொள்வதிலும் ஆர்வம் கொண்டனர்.  அனால்,          இன்றோ விவசாயின் மகன்! பர்கர்,பீசாவை கேட்கிறான்!
                   சோற்றையும், சேற்றையும் வெறுக்கிறான்.பட்டினம் தேடி பட்டினி கிடக்கின்ற இந்நிலைக்கு நாம் தலைப்படவில்லை நாமே துள்ளிக் குதித்துவிட்டோம்.
                   தமிழர் வலிமையிலும்,திறமையிலும் பிறரை பார்த்து போட்ட காலம் போய் வாகனங்களையும்,வசதிகளையும் பார்த்தும் பேராசைக் கொள்கின்றனர்.
                  நெல்லின் இடுப்பொடியாமல் நுட்பமாக சேற்றில் ஊன்றிய காலம் போய் இன்று தொழிலநுட்பம் என்ற பெயரில் நம் இடுப்பெலும்பு ஊனற்று போக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
                  இயற்கையினை பாதுகாக்க ஊரோடு இணைந்து செய்யப்பட்ட நாம், இன்றளவில் இல்லறத்தையே விட்டு விலகி இல்லம் சேரா அனாதைகளாய் வாழ்கிறோம்.
                  ஏழைகளின் முகத்தில் இறைவனை காண சொன்ன காலங்கள் மாறி இப்போதெல்லாம் ,இறைவனே ஏழைகளை தன்னை தரிசிக்க கட்டணமின்றி அனுமதிப்பதில்லை.
                 ஐந்து முதல் எட்டு நபர்கள் வரை பயணிக்கும் மாட்டுவண்டி ஏற்படுத்தாத காற்று மாசுபாட்டை இன்று தனி ஒருவரின் இருசக்கர வாகனம் ஏற்படுத்துகிறது.
                 தானாய் விளைந்த புல்லிற்கு பதிலாய் பால்,தயிர்,நெய் மற்றும் உரமாக சாணம் என எண்ணற்ற இயற்கை பொருட்களை தந்த மாடுகளை விட்டுவிட்டு.
                காற்றை மாசுபடுத்தும் இயந்திர வாகனத்திற்கு செலவு செய்து வருகிறோம் .
அழிந்து வருவது மாடுகளின் இனம் அல்ல! 
மனுடனின் மானம்!
                எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உதவிய கரங்கள், இன்று யாசிக்கின்ற நிலைமைதான் ஏனோ?
சுய தொழில் செய்வதை விட்டு! 
சுக வாழ்வு கேட்ட தமிழன் !
                 இன்றைக்கு தன சுயமரியாதையை விட்டு சுயநலத்திற்காக வாழ்ந்து வருகின்றார்.
                  சுக துக்கங்களை விட்டு சுற்றத்தோடு இன்பமாய் வாழ்ந்த தமிழன். இன்று சுதந்திரம் இழந்து தனது குடும்பத்துடனும் எவ்வித இணைப்பும் இன்றி பிறரின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து தன்னை தானே தாழ்த்தி வருகிறான்.
                 ஒற்றை பிடி சோற்றில் பங்கு போட்ட தமிழர்,ஒன்றாக கூடிய காட்சியை தான் நம் இன்று காணாமல் விடுகிறோம்.
                 தமிழன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த போதிலும் கூட தன்னாட்சியாக வாழ்ந்தான்। தன் வீட்டிற்கு தானே ராஜாவாக இருந்தான்.தன் தொழிலுக்கும் முதல்வனாய்,தனக்கு வேண்டிய பொருளை தானே தேடி, தன்னம்பிக்கையை கைவிடாதும் இருந்தான்.
                  முயற்சிகளுக்கு இடைவிடாது செயல்பட்டான் முயன்றதில் கிடைத்ததை மூலதனமாய் கொண்டான். முயற்சி பல மேலும் செய்து முதன்மை நிலையை தானாய் வென்று இருந்தான்.
தன்னாட்சியாய்! தனித்துவமாய் !
தனிமனிதனாய்! தமிழனாய்!
இன்றோ தன்னாட்சியை இழந்து தமது பெயரில் மட்டும் தமிழர் என்பதனை வைத்து வருகின்றனர்। நம் கொள்கையை பின்பற்றா நமக்கு தமிழன் என்ற பெயர் எதற்கு ?

இமயமலை

இயற்கையான அழகை
செயற்கையாலே பெறலாம்..
தேர்ச்சி என்னும் பலத்தை
பயிற்சியாலோ பெறலாம்
முயற்சி என்ற கடலே
இமயமலை எனலாம்.

3.1.2020 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

புதன், 4 மார்ச், 2020

சங்க தமிழரே ! சரிக்கின்ற தமிழரே !

                     சங்க கால தமிழர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்து சரித்திரம் படைத்தனர். இன்றோ ஆங்காங்கே இருக்கும் பள்ளிக் கூடங்களில் கற்பிக்கப்படும்.  நமது தாய் மொழியான தமிழ் வழி கல்வியை நாமே ஏற்க மறுக்கின்றோம்.
                     வெளிநாட்டவர் இங்கு வந்து தமிழ் கற்று அதனை தங்கள் நாடுகளில்,அவரவர் மொழிகளில் மொழி பெயர்த்து கொண்டனர்.ஆனால், தமிழ் மண்ணில் பிறந்து வாழ்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களாகிய நாமே தமிழ் வழிக்கல்வியை வெறுக்கின்றனர்.
             வரலாற்றை புரட்டி பார்த்தால் சாதனைகள் எத்துணை சரித்திரங்கள் எத்துணை இருகின்றது நம் தமிழ் மண்ணில் விமானத்தை கண்டெடுக்கும் முன்னரே புராணக்கதைகளில்  பறவைகளை வாகனமாக கொண்டு விண்தொட்ட காட்சிகள் தான் மறக்குமா நமக்கு !
சங்கம் வைத்த தமிழனின் ,சரித்திரத்தை உடைக்கும் நிகழ் மனிதர்களே !
            சாதனைகள் பல புரிந்து தனிமொழியாய் விளங்கி , மொழிகளில் சிறந்தது நம் தமிழ் மொழி . சோதனைகள் பல கடந்து சரித்திரத்தை படைத்தது நம் தமிழ் குலம்.
                  தமிழரின் சிந்தைக்கு நிகரென ஏதேனும் உண்டா 
                       ஒழுக்க நெறிக்கு குருகுலம் ,ஓங்கி உயர்ந்த மலைகளின் இயற்கை வளம் , பண்பாடு போற்றும் தனிக்குலமே நமது தமிழரின் குலம்
பெரியோர் சொல்லுக்கு எதிர்ப்பில்லா இருந்த நமது சமூகம் இன்று பெற்றவர்களையே மறுத்து ,மறந்தும் வருகிறது.
                    வீரம் கோபமாய் மாறியது ,விவேகம் மூடமாய் மாறியது , எண்ணங்கள் எண்ணிக்கைகளில் அடங்கியது. இந்நிலை நீடித்தால் சரித்திரம் பேசிய தமிழர்களின் வாழ்வு ।நமது தலைமுறையோடு  முடிந்துவிடுமா।
எல்லோரும் வெளியூரில் வேலை செய்து அடிமைகளாய் வாழ்வதை காட்டிலும் .உன் ஊரில் நீ உனக்கு வேண்டியதை செய்து மகிழ்வோடு வாழ்வதே மேல்.
இதனை , அறியா இன்றைய தமிழ் சமூகம் சீர்குழைந்த நிலையை எய்தியுள்ளது.இந்நிலையை போக்க வேண்டும்.
தமிழன் வாழ்வதற்காக பிறந்தவனல்ல ஆள்வதற்காக பிறந்தவன் என்பதனை அனைவருமே உணர வேண்டும் !
இன்றளவில் ,பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை சரியான வழியில் நடத்துவதாக எண்ணி எந்தவிதமான சமுதாய இன்னல்களிலும் ஈடுபடாமல்। தமது சுய வாழ்வை வாழ்ந்துவருகின்றனர் .
முறைகேடுகளை தடுக்கும் முயற்சிகளை விட்டுவிட்டு ஒருவருடன் ஒருவர் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் .
சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கேட்டு திரியும் தமிழர்களாகிய நாம் சட்டங்கள் நிறுவப்படாத காலத்தில் நமது சங்க தமிழர்கள் படைத்த சாதனைகளையும் ,போதனைகளையும் செவியேறா கதைகளாய் கொண்டுள்ளனர்.
இன்று உங்கள் செவிகளில் ஏற துடிக்கும் இதுபோன்ற சரித்திரம் சரியவில்லை .நாளை நீங்கள் படைக்க காத்திருக்கும், வரலாரே சரிந்து கொண்டு தான் இருக்கிறது .
நமது சரித்திரத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை ।நமது கடமையை நாம் செய்ய எந்த தயக்கமும் கொள்ளக் கூடாது.
துணிவுடன் செயல்பட்டு ,துன்பங்களை அகற்றி பிறருக்கு தூணாக நிற்பதே நமது வழக்கம் .அதனையே, நாமும் பின்பற்றுவோம் .
சரிவிலிருந்து மீண்டும் எழுவோம் ,தாய் மொழியையும் ,தாய் நாட்டையும் வரலாற்று பெட்டகங்களில் நிகழ்வாக பதிவிடாது ।நிலையான  சரித்திரமாக மாற்றுவோம் .
சங்க தமிழனுக்கே தலை வணங்குவோம் !

               தமிழ் நூல்களும், தமிழர் வாழ்வும்

                   உலகில் எங்கு  சென்று பெற்ற இயலாத வாழ்க்கை தத்துவ நெறிகளை தொகுத்து வழங்கிய சிறப்பு மிக்க செம்மொழி நம் தாய்மொழி.
                   ஐய்யன் வகுத்த திருக்குறளில் இல்லா நெறி அவரது ஈரடி குறளில் இல்லா வழி வாழ்க்கை இதில் மீதும் ஏதேனும் உண்டோ. இன்று நமது  சமூகத்தில் ஏற்படும் அத்துணை இல்லற பிரச்சனைகளுக்கும் நாம் இவ்வாறான நூல்களை தவிர்ப்பதேயாகும்.
                      பகவத்கீதையில் இருக்கும் வாழ்வியல் செயல்திட்ட தத்துவங்கள் ஜென்மங்கள் கடந்து செய்ய  வேண்டிய அறநெறிகளை வலியுறுத்துகிறது.
                      அன்றைய தமிழர்கள் அனைவருமே அதனை கற்று, அதன் நுட்பத்தினை ஏற்று வாழ்க்கையை இன்புற்று வாழ்ந்தனர்.
                      ஆனால், இன்றோ திரைப்படத்தின் மோகத்திற்கு ஆளாகி தமது வாழ்க்கையில் தோற்று அனைத்து விதமான தீமைகளிலும் எளிதில் ஈடுபட்டு வருந்துகின்றனர்.
                       குழந்தைகளை வளர்க்கும் வேளைகளில் தொலைநோக்கு சிந்தனைகள் இன்றி செயல்பட்டு அவர்களையும் வழிநடத்த தவறிவிட்டனர்.அந்தந்த சமயங்களுக்கு ஏற்றவாறு கட்டுப்பாட்டுடன் அனைத்து மக்களும் செயல்பட்டு மகிழ்வோடு வாழ எழுதிய நூல்களை படித்து பயன்பெறாது.
                        சாதி,சமயமாய் மாற்றி ஒரு சில சுயநலவாதிகளால் பொதுமக்களின் வாழ்வியல் நெறிகளை  சிதைத்துவிட்டனர்.  இந்நிலையினை போக்க வேண்டும்.
                        நம் முன்னோர்கள் எவ்வித வேறுபாடும் கருதாமல் சகோதரத்துவத்தினை வளர்த்துவிட்டனர்  இன்றோ உடன்பிறந்த சகோதர்களே வேற்றுமையுணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.
                         நாம்,நமது முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றை அறியவும், வாழ்வியல் நெறிகளை கற்கவும் நமது சங்க நூல்களே சிறந்த வழியாகும்.
                        அண்டை நாடுகளில்  இருந்து வந்த பிற பொழுதுபோக்கு செயல்களை செய்து நேரத்தினை  செலவழிக்காமல் நல்ல நூல்களை கற்று பின் மற்றவர்களுக்கு கற்பித்து வாழ்வதே இன்பத்தினை தரும்.
                          இத்துணை தலைமுறைகள் ஈடேறாமல் பூண் கட்டுக்கதைகளை பேசி காதுகளை களைப்படைய செய்யாதீர்கள்.
                          வரலாறாய் மாறி வருங்காலம் போற்ற உரமாகுங்கள்!  
                     உயிர் பிரிந்தாலும் உயர்ந்து நிற்பாய்!
                     இவ்வுலகில் தமிழுடன், தமிழனாய் !


                           தமிழும்   தமிழரும்

                               உடலும், உயிருமாய் விளங்கிய தமிழ்மொழியும், தமிழரும் இன்றியமையா  புகழப்படைத்து இவ்வையத்தையே வியப்பில் ஆழ்த்தினர். உடலுக்கு உடையை வைத்தது போல் தமிழுக்கு வைத்தான் சங்க தமிழன்.
             ஆனால், இன்று உயிரான தன் மொழியின் பயன்பாட்டினை குறைப்பதனாலும், தன் தாய்மொழி கல்வியை வெறுப்பதனாலும் உயிரற்ற நடைபிணமாய் வாழ்கிறான் இன்றைய தமிழன்.
              தமிழ்பாடி நாடெல்லாம் திரிந்த அன்றைய தமிழுக்கு அமிர்தமாய் இருந்த நம் தாய்மொழி, இன்று வின்வெளிக்கு செல்லும் அளவிற்கு வளர்ச்சி பெற்று உயர்ந்து நிற்கும் நம் நாட்டு மக்களுக்கு நம் தாய்மொழி விதமாய் தோன்றுகிறது.
              முன்னேற்ற பாதையில் செல்வதை எண்ணி நாம் அனைவருமே நமக்கு சொந்தமான நாட்டை அந்நியனுக்கு கொடுத்துவிட்டு, நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டு வருகின்றோம்.
              தன்னுடைய தாய்மொழியை மதிக்காத இடத்தில் நின்று பொன், பொருள் தேடி நிற்பது தாயை விட்டு பிறரிடம் யாசிப்பதற்கு சமம்.வளம் மிகுந்த நாட்டின், செல்வங்கள் நிறைந்த நாட்டின் பிள்ளைகளாகிய நாம் மட்டும் யாசிக்கவில்லை.
               அத்துணை வளமும், பலமும் கொண்ட நம் தாய்திருநாட்டின் தரத்தினையும் குறைத்து வருகிறோம்.
                எத்துணை பெரிய துன்பத்திலும், நம் நாட்டை அந்நியரிடம் இருந்து காப்பாற்றி சுதந்திரம் பெற்ற அன்றைய தமிழன் தமிழ் மொழியை தன் உயிராய் ஏற்று, தமிழ்மொழியின் உடலாக செயல்பட்டான்.
                  தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டான்
பண்டையத் தமிழன்!
              கல்வி, தொழில், அறிவியல், வணிகம்,அரசியல் என நாட்டின் அத்தனை செயல்பாடுகளும் என்று நம் தாய்மொழியில் நடக்கின்றதோ அன்று தான் நம் நாடு முழுமையான சுதந்தர நாடாக தோன்றும்.
                   பிற மொழியை கற்பது தவறல்ல! தம் தாய்மொழியையும் பிறர் கற்கும் அளவிற்கு பரவச் செய்பவனே உண்மையான தமிழன்!
                    அன்றைய காலகட்டத்தில் தமிழன், தாய்மொழியில் நுணுக்கமாக பெற்ற அறிவும், ஆளுமையும் இன்னும் அத்துணை அண்டை மொழிகளை கற்றாலும் அதற்கு ஈடாகாது.

செம்மொழியாம் தமிழ்மொழி 

                   சொல்வளங்கள் மிஞ்சும் மொழியாம் செம்மொழி சொற்களுக்கே உரிய மொழியாம் நம் தமிழ்மொழி எம்மொழியும் பெறா இலக்கணம் பெற்ற பொன்மொழியம் தமிழ்மொழி.
                                 செல்வதை மிஞ்சும் மொழியாம் தமிழ்மொழி 
            செய்யுளின் ஆயுள் மொழியாம் செம்மொழி தமிழ்மொழி இறக்கும் வரை புதிய புதிய நடைகளும் இலக்கிய, இலக்கண வகைகளும் தோன்றி கொண்டே தான் இருக்கும்.
                              சேரனின்  ஆட்சிமொழியாம் செம்மொழி 
           முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த சிறப்பு மிக்கமொழி தான் நம் தாய்மொழி . மதுரை மண்ணின் மைந்தனாய் தோன்றிய மொழியே நமது தமிழ்மொழி.
               மாறாத மதிப்பின் மொழியாம்  தமிழ்மொழி .இன்னும் எத்துணை ஆண்டுகள் கழிந்தாலும் துடிப்புடன் செயல்பட்டு விளங்கும் அறிய மொழி தான் நமது தாய்மொழி
                     அன்றும்,இன்றும்,என்றும் தனிமொழி நம் தமிழ்மொழி                     எம்மொழியின் உதவியும் இன்றி பேசுவதற்கு இயன்ற மொழிநடையை உடையது தமிழ்மொழி.
                உணர்வினை ஊட்டும் மொழியான நமது தமிழ் மொழி கேட்ட்கும் செவிகளுக்கு விருந்தாக , பேசும் வாய்ற்க்கு அமுதாக இருக்கின்றது
ஊக்கத்தின் உச்ச நிலையாம் தமிழ்மொழி குழந்தைகளுக்கு பாடும் தாலாட்டு முதலே ஊக்கத்தோடு  செயல்பட உதவும் உன்னதமான மொழியானது நம் தாய்மொழி.
                   விதைகளின் விருட்ச மொழியே தமிழ்மொழி
          விதைகளில் இருந்து விருட்சமாய் வளர்ந்த வீரமான மொழி நம் தமிழ்மொழி புல்வெளியில் பனித்துளியே செம்மொழி அழகிய நடைகளை உடைய மொழியே நம் தமிழ்மொழி
                 இருளின் சுடர் ஒளியே செம்மொழி 
             வாழ்க்கையில் திறன் கொண்டு தத்தளித்த பலருக்கு எளிய நடையில் பேச, படிக்கச் உதவி இருளில் இருந்து மீது ஒளி தந்து உதவிய நட்புணர்வுடையது நம் தமிழ்மொழி
             அன்னையின் அன்புமொழியே தமிழ்மொழி அய்யன் குறளில் மிதந்த ஆற்றல் மிக்க மொழியே செம்மொழி ।  வாழ்க்கை நெறியை தொகுத்து காட்டிய தொன்மையான மொழி
               அழியா  புகழில் ஆழ்ந்த மொழியே செம்மொழி 
              உலகின் உன்னத மொழியே தமிழ்மொழி ஊர் போற்றும் கோவில் மணியாய் விளங்கியது நம் தாய்மொழி 
                     கம்பர் கவியின் வாரியாம் செம்மொழி 
              கற்பதிலும்,கற்றவர் போற்றுவதிலும் என்றுமே செம்மொழியாம் நம் தமிழ்மொழி 

செவ்வாய், 3 மார்ச், 2020

இன்றைய தினம்

இன்றைய தினம்
              உலக வனவிலங்குகள் தினம்.
              அலெக்சாண்டர் கிரகாம்பெல் பிறந்த தினம்.
சிலம்பின் பல்வேறு பெயர்கள்
1.சிலப்பதிகாரம்
2.தமிழ் முதல் காப்பியம்
3.உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
4.முத்தமிழ்க் காப்பியம்
5.முதன்மைக் காப்பியம்
6.பத்தினிக் காப்பியம்
7.நாடகக் காப்பியம்
8.குடிமக்கள் காப்பியம்
9.புதுமைக் காப்பியம்
10.பொதுமைக் காப்பியம்
11.வரலாற்றுக் காப்பியம்
12.புரட்சிக் காப்பியம்
13.போராட்டக்காப்பியம்
14.சிறப்பதிகாரம்.
சிலப்பதிகாரத்தில் நாடகம்
1.பாண்டரங்கம்
2.கொடுகொட்டி
3.மரக்கால்
4.பாவை
5.துடி
6.குடை
7.அல்லியம்
8.குடம்
9.மல்
10.பேடி
11.கடையம்
இன்றைய வெளிச்சம்
       பணத்தை இழந்தால் சொற்ப நட்டம், நேரத்தை இழந்தால் எல்லாமே நட்டம்.
       கடந்து வந்த பாதையைக் கவனி, வாழ்வின் அனுபவச் சுவடுகள் தானே தெரியும்.

சனி, 29 பிப்ரவரி, 2020

பழமொழி

புலி பசித்தாலும் புல்லை திண்ணாது
 நாய்,பூனை, போன்ற ஒரு சில விலங்குகள் தன் குட்டிகளை ஈன்றவுடன் பிரசவ வலி மற்றும் அப்போது ஏற்படும் அகோர பசியின் காரணமாக அவை ஈன்ற சில குட்டிகளை தானே தின்றுவிடும். ஆனால் புலி இப்படி தன் குட்டிகளை தானே உண்பது இல்லை அவைகளை பத்திரமாகவும் தன் பார்வையில் மிகுந்த கவனத்தோடு பராமரிக்கிறது. அதனாலே புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்கிறோம். 

சிலப்பதிகாரத்தில் நாடகம்

1.பாண்டரங்கம்
2.கொடுகொட்டி
3.மரக்கால்
4.பாவை
5.துடி
6.குடை
7.அல்லியம்
8.குடம்
9.மல்
10.பேடி
11.கடையம்

மொழி

தாயும்
தன் குழந்தையும்
பேசிக்கொள்ளும்
சின்ன சிரிப்பே
யாரும் அறியாத
மொழி


வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அறம் செய் ! புறம் பேசாதே !

                        ஒரு குறையும் இன்றி நாம் நம் வாழ்க்கையை வாழ விரும்பினால் ,அதற்கு ஏற்ற செயலை மட்டும் செய்து மறுபிறவி ஒன்று ஏற்பட்டால் அப்போதேனும் அந்த அறிய வரத்தினை பெற வேண்டும்.
                       அங்ஙனம் இன்றி இன்று நினைப்பதனை இன்றே பெற வேண்டும் என்று எண்ணி ,நாளை என்றொன்று இருப்பதனை மரத்தால் . அதாவது வரும் முன் காப்போம் என்பதனை அறியாதிருத்தல் .
                       எல்லாம் அறிந்தும் அறியாமையை தேடுகின்றனர் இன்றைய தமிழர் இந்நிலை மாற வேண்டும் . அறியாமையிலும் ,அறிவீனம் என்று நினைத்துக்கொண்டு தன் நலத்திற்காக பிறரை துன்புறுத்துகின்றனர் .                    உண்மை கண்முன் என்றாலும் பொய்மையின் பின்னால் கண்மூடி தனமாக கண்ணை திறந்தே நடக்கின்றனர் .
                       பிறரை நோக்கியேனும் அறிவோ , ஆக்கமோ கொள்ளாது பொறாமையும், பேராசையையும் கொள்கின்றனர் . தான் வெல்லாவிட்டாலும் , பிறர் வெல்ல கூடாதென்று சூழ்ச்சிகளை செய்யவும் துணிகின்றனர.
                      மனம் என்ற ஒரு இனம் அறத்தின் வளமாய் இருப்பதனை மறந்து சாதி ,மதம் , குலம் என்னும் என்றோ அறுத்தெறியப்பட்டதை . தான் நூலெடுத்து கோர்ப்பதாய் எண்ணி பிறரை ஊசியால் குத்துகின்றனர் .                  வன்முறையை அளிக்காவிட்டால் ,அறநெறியை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதனை இன்றளவிலும் உணராது செயல்பட்டு வருகின்றனர். .                         இன்றைய தமிழர் । நம் பிறப்பென்பதை யார் தீர்மானித்தாலும் !இறப்பை எமன் தீர்மானித்தாலும் ! நம் வாழ்வை நாம் தீர்மானிக்க வேண்டும் !                        அவற்றை அறிவாய், அளவாய், அழகாய், அமுதாய் அதாவது "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு " போல  வாழ்க்கையை கழிக்க வேண்டும் ।
                      அழியா வரம் வேண்டாம் , மறையும் வரை வாழ்ந்திடும் (ஆழ்த்திடும் ) வரத்தினை பெறவேண்டும். வாழ்க்கையை அழியா புகழோடும் , அனைவரும் அறியும் மிதலோடும் ,அணுகும் மனதோடும் ,அறியும் குணத்தோடும் வாழ்தல் வேண்டும் .
                       உன் தலையெழுத்து குறையாக இருந்தாலும் உன் கையெழுத்து முறையாக இருக்க வேண்டும் . தம் முன்னால் பிறர் போடாவிட்டாலும் ,பின்னால் பரைய கூடாது .
                                         நன்மை ஒன்றும் செய்யாவிட்டாலும் 
தீமையை என்றும் நீ தீண்டாதே
              கடவுளை காணாவிட்டாலும் உன் உள்ளம் அதை நீ உணர்த்திருக்காதே . காலம்  அது  கரைந்து போகையிலே 
கல்லாய் நீயும் மாறிவிடாதே .
                  கவிதை பேசும் வார்த்தைகள் எல்லாம் கல்லறைகள் கேட்காத என்பது போல,  இன்று உன் முன்னால் பயத்தினாலோ அல்லது எதிர்பார்ப்பினாலோ காலத்தையும் ,சூழ்நிலையையும் ,சுல்லலையும் பார்த்து உன்னை பாடிப் போற்றி பேசினாலும் , பேசாவிட்டாலும் .
                      பின்னால் இகழ்வதனை நீ அனுமதிக்காதே । உன்னை இகழ்வதனை நீ அறியாமல் இருக்காதே அவ்வஞ்ச புகழ்ச்சியினை உன் கல்லறையும் கேட்டவிடாதே
அறத்தினை செய் கூசாதே புரம் நின்று பேசாதே 

நதி உருவாகும் இடம்

சிந்து - பொக்கா - சூ பனியாறு (மானசரோவர் ஏரி)
பிரம்மபுத்திரா - கெமாயுங்டங் பனியாறு (மானசரோவர் ஏரி)
கோதாவாி - திரயம்பதேஷ்வரா் பீடபூமி (நாசிக்)
மகாநதி  - சிஹாவா (ராய்பூர்)

அப்துல்கலாம்

முதல் வெற்றிக்குப் பின் ஓய்வெடுக்காதீர்கள்,
ஏனென்றால் இரண்டாவதில் நீங்கள் தோல்வியடைந்தால், உங்களின் முதல் வெற்றி வெறும் அதிர்ஷ்டம் என்று பேச பல உதடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

தகுதி

உங்களுக்கு  ஒரு தகுதி  வேண்டும் என்றால் ,
அதை  நீங்கள்  பெற்று விட்டதைப் போல் செயல்படுங்கள்.  
அதுவாகவே நீங்கள்  மாறிவிடுவீர்கள்.
                                                  _ வில்லியம் ஜேம்ஸ்.

இயற்கையை காப்போம்

இயற்கை அளித்த மழைத்துளியை
மனிதன் காப்பதில்லை
கடவுள் படைத்த இயற்கையை
மனிதன் காப்பதில்லை
இயற்கை அளித்த நீரும் மணலும் காற்றுகூட
மனிதனின் பணத்தேவையாக மாறி விட்டது
தற்போது மனிதனிடம் ஒன்றும் இல்லை
ஆனால் அழிப்பதில் முன்நிற்கின்றனர்....
இயற்கையை காப்போம்...

6.1.2020 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

வியாழன், 27 பிப்ரவரி, 2020

தத்துவம்

இன்றே செய்ய வேண்டியதை நாளை வரை தள்ளிப் போடாதே.
சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கும் தேனீக்கு தூங்கக் கூட நேரமில்லை.

புதன், 26 பிப்ரவரி, 2020

பொய் மானிடா..... நீ எம் மண்ணிலா..... 

                தமிழ் தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகிறது இன்றும் தனிமொழி என்ற சிறப்பினை இழக்காமல் இருக்கிறது.
                ஆனால் , தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம் . நம் தாய்மொழி கல்வியை கற்க விருப்பமில்லாமல் , பிறமொழி கல்வியை கற்றுவருகிறோம்.
                இதில் தான் நம் அடிமைத்தனம் வெளிப்படுகிறது . ஆங்கிலேயர் ஆண்ட காலம் கடந்து சுதந்திர நாடக மாறியது என்று நாம் குறிக்கொண்டிருக்கிறோம் .
                ஆனால் , இன்றும் அந்நிய மொழிக்கு நாம் அடிமைகளாகவே இருக்கிறோம் . அதனையே நம் சந்ததிக்கும் கொடுக்கிறோம் .
                உண்மையிலேயே நமக்கு நம் மண்மீது  பற்று இருந்திருந்தால் , நாம் நம் மொழியை  தான் முதன்மைப்படுத்தி  தாய்மொழி கல்வியை  உயர்த்தியிருக்க வேண்டும். உலகளவு பரவிய மொழியாய் மாற்றியிருக்க வேண்டும். 
                எம்மொழியிலும் இல்லா இலக்கணமும் , சொற்களும் உடையது ,  நம்மொழி .
                எளிதில் கற்க  , உணர வளம் கொண்ட நம் மொழி சிறப்புப்பெற செய்பவனே உண்மையான பற்றுடையோன் செயல் .
               நாம் அனைவருமே இன்றளவில் பொய் மானிடர்களாய் தான் நம் மண்ணில் இருக்கின்றோம் !
               தன் தாய்நாட்டிற்கும் , தாய்மொழிக்கும் வளர்ச்சியை  கொடுக்க செயல்பட்டு உழைப்பவனே என்றும் உண்மையான மானிடன் .
               நாம் எவ்வளவு தான் அறிவியல்  ரீதியாகவும் , பொருளாதாரரீதியாகவும்  உயர்ந்தாலும் நம் நாட்டையும் , மொழியையும் உயர்த்துவதில்லை .
               நீ விண்ணில்  நின்று பேசினாலும் ,விவாதமாய் பேசினாலும் உன் தாய் மொழிக்கு தலைவணங்கு .
       உன் மொழியில் பாடி நில் ! உலகமெங்கும் பரவ  செய் !
               உலகமெங்கும் தமிழர்கள் பல்வேறு இடங்களில் சென்று சாதனை புரிந்தால் அது சரித்திரமில்லை!
தமிழ் மொழியை ஆங்காங்கே பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . அதுவே , உண்மையான சரித்திரம் !
               அவர்களை அடிமையாக்கவிட்டாலும் , நம் மொழியின் அருமையையும் , ஆழமும் அறிய செய்ய வேண்டும் .
               அடிமை தன்மையின் வலி உணர்ந்த  தமிழனுக்கு மற்றவர்களை அடிமையாகும் எண்ணம் என்றும் இருக்காது. இருப்பினும் ,
தன் மொழியின் சிறப்பை இழக்க  தமிழனின் மணம் ஏற்காது !
               இவாறான ,தமிழின் பெருமையை உணராது பிறமொழி மோகம் கொண்டு திரிபவனே பொய் மானிடன் !
பொய் மானிடன் எம் மண்ணில் மாண்டாலும் பயனடையான் !

கருப்பு அடைமொழி

கருப்பு நிறைந்த அடைமொழியாக கொண்ட வார்த்தை
கருப்புக் கண்டம்          -      ஆப்பிரிக்கா
கருப்பு நாடு                     -      பிட்லாந்து
கருப்பு நோய்                  -      பிளேக்
கருப்புச்சட்டம்              -       ரவுலட் சட்டம்
கருப்பு விதவை            -       ஒருவகை சிலந்தி
கருப்பு அழகி                  -       கிளியோபாட்ரா

அப்துல்கலாம்

வாழ்க்கையில் வெற்றி பெற்றக் கதைகளைப் படிக்காதீர்கள்..
அவை செய்திகளை மட்டுமே கற்றுத்தரும்...
தோல்வி பெற்றக் கதைகளைப் படியுங்கள்.
அவைதான் வெற்றிக்கான வழிகளை கற்றுத்தரும்....

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

காலம்

தோழி கூட
எதிரியாகிவிடுவாள்

தண்ணீர்

தண்ணீர் இருப்பதோ கை அளவு
தேவை இருப்பதோ வான் அளவு
குடங்கள் இருப்பதோ நீண்ட அளவு
நீர் இருப்பதோ எள் அளவு
பயன்படுத்த வேண்டும் குறைந்த அளவு
சேமிக்க வேண்டும் அதிக அளவு...
         
13.10. 19அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

உறவு என்னும் ஏமாற்றம்



             

                  ஒருவர் நம்மை விட்டு விலகும் போது சில விஷயங்களில் விட்டு கொடுத்து அவர்களை தக்க வைத்து கொள்ள முயலுகிறோம்.  ஆனால் இதற்கு பிரிவு மட்டும் தான் முடிவு என்று தெரிந்த உடன் அவர்களை அவர்கள் போக்கில் விட்டு விட வேண்டும் ஒரு பொருளின் மீது அதிகம் அழுத்தம் செலுத்தும் போது தான் அது வெடிக்கும் அதை விட்டு விட்டால் அதன் வீரியம் குறைந்து விடும். நம் வாழ்க்கையில் ஆயிரம் பொய்யான உறவுகள் இருக்கும், தேவைக்கு மட்டும் பழகும் அதி பயங்கர சுயநலம் மிக்க கூட்டத்தில் நாம் மிகவும் சுயநலமாக இருக்க வேண்டும். அனுதாப பட்டால் நாம் தான் பாவ பட்டவர்கள் ஆகி விடுவோம். தாய் தந்தை மற்றும் சிலரை  தவிர எந்த உறவும் நிரந்தரம் இல்லை. சில நண்பர்கள் நம் காலம் முழுவதும் இருப்பார்கள். பத்து நபருடன் பேசி மகிழ்ந்தாள் தான் நட்பு என்று அர்த்தம் அல்ல. நம்மை புரிந்து கொள்ள ஒரு உயிர் இந்த உலகத்தில் இருந்தால் கூட போதுமானது.

சிட்டுக் குருவி


அப்துல்கலாம்

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல..
உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...!

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

தண்ணீரை சேமிப்போம்


ஆகலாம் அப்துல்கலாம்

இது உன் இளமை காலம்
இனிமை காலமாக இருக்கலாம்
இகழ்ச்சி அதை நீ இன்று ஏற்கலாம்
இழிவுகளை கொன்று புதைக்கலாம்
புகழ்ச்சி அதை மனதில் பதுக்கலாம்
வளர்ச்சி பெற நாளும் உழைக்கலாம்
தோல்வி பல நீ கண்டிருக்கலாம்
முயற்சி பல நீ செய்திருக்கலாம்
தன் உயிரை விட உறவை வளர்க்கலாம்
உயர்ந்த உச்சிகளும் உனக்கு உதிரிப்பூக்கள் ஆகலாம்
நல்லதோர் தலைவன் வேண்டி நாடே
இன்று காத்திருக்கலாம்
நிச்சயம் நீயும் நாளை ஆகலாம் அப்துல்கலாம்.

16.9.19 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

பெரியார்

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்.
மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.

பொன்மொழிகள்

ஒவ்வொரு துயருக்கும் பொறுமையே தீர்வு

புதன், 19 பிப்ரவரி, 2020

பெரும் பஞ்ச மூலம்

தழுதாழை,பாதிாி, பெருங்குமிழ்,
வாகை, வில்வம் எனும் ஐந்து
 மரங்களின் வோ்களைக் கொண்டு
செய்த கூட்டு மருந்து வகை.

படித்ததில் பிடித்தது

ஒரு அரசியல் வாதி ஒரு முதியவரிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார், அதற்கு அந்த முதியவர் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றார் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பார்த்தார் 10000 ரூபாய் க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை பிறகு அந்த முதியவரிடம் சென்று 10000 ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றார் அதற்கு அந்த முதியவர் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றார், ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க்க மாட்டேன் என்றார்...

இடைக்கால இலக்கண நூல்கள்

நன்னூல்,
யாப்பருங்கலம்,
யாப்பருங்கலக்காரிகை,
புறப்பொருள் வெண்பாமாலை,
நம்பியகப்பொருள்,
நேமிநாதம்,
தண்டியலங்காரம் 

சிந்தனை

 சிந்தித்துக் கொண்டே
இருப்பதனால் சிறந்து விளங்கிட
முடியாது.........சிந்தனையை
செயல்படுத்தினால் மட்டுமே
சிறப்படைய முடியும்....

அக்காள்

என் தாயிற்கு நிகரானவளே
நீ கண்களாக இருந்தால் நான் கருவிழியாவேன்
பகலாக இருந்தால் நான் கதிரவனாவேன்
இரவாக இருந்தால் நான் நிலவாவேன்
முட்களாக இருந்தாலும் உன்னை நான்
தாங்கிக்கொள்வேன்
என் இதயத்தில் வைத்து...

9.9.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

அம்மா

என்னை சுவாசிக்க
வைத்தவளுக்கு
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா....
அதில் அவள் பெற்ற
ஆனந்தத்தை என்றும்
நான் கொடுக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்.

29.7.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

இன்றைய சிறப்பு

எத்தனை பேருக்குத் தெரியும்....
காமராஜர் முதன் முதலில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியது பாரதி பயின்ற எட்டையபுரம் இராஜா மேல்நிலைப்பள்ளி என்று....

துடித்தெழு தமிழா 

                                          உயிரினமே நீ உயிர் இழந்து இருப்பதனை இன்னுமா அறியவில்லை. உலகில் உயிர்கலெல்லாம் உணர்ச்சியற்று கிடக்கின்றன.உறவுகள் கோடி இருப்பினும் உன்னதம் அறியா பிழைக்கின்றன .
               உடல் மண்ணுக்கில்லையாம் ! உயிர் உற்றோருக்கில்லையாம் !                                                உடன் பிறந்தோராயினும் வெவ்வேறு உருவமாம்.  உயிர் பிழைத்தால் போதும் உணர்வுகள் இல்லையாம் . உயிர்கள்கொள்ளையாம்,உள்ளமே இல்லையாம்
உணர்வுகள் தொல்லையாம்! உம்மின் உணர்ச்சிகளுக்கே எல்லையாம்।                              உருகிய பனிமலையே ஓடாத ஓடையானால் ! எரியும் எரிமலையே எரிந்து சம்பலானால், உச்சியில் ஊற்றுகளே  உக்கிரத்தில் வேர்த்து போனால். இந்த உணர்ச்சியிலா உயிரினம் ஈடேறுமா, இல்லை கடேறுமா . கவலைகள் இல்லையாம் நம் நாடு கலையிழந்தாலும் ! இங்கு அடிமைகள் கொள்ளையாம் நம் மண்ணில் விதை விளைந்தாலும் !
                       ஐவகை நிலங்களுக்கு தொப்புள் கொடி அறுத்து நம் தாய் நாடாம்!ஆனால், இன்று தொட்டிலில் அழும் குழந்தைக்கு தினைமாவு தீவனமாம்.தீர்த்தார் பசிபோகும் தீர்ந்தால் ருசிபோகும் .
                        தாய் பால்(வெள்ளை) மனம் மறந்ததென்ன.நம் பாண்டியர் குலநாட்டிலே ! ஆவின் துயர்த்தித்தான்(பசுவின் துன்பத்தினை போக்கினான் ) ,புறாவுக்கு ஈடறுத்தான் (புராவிற்கு நஷ்டஈடாக  தன் தசையை  கொடுத்தான் ) என்றல்லவா போற்றியது சங்க நூல்கள் .
                       தமிழர் , புலவர்களின்  ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட்டு , அந்நியர் அண்டை நாட்டவர்கள் அதனை பெற்று , ஐம்புலன்களை  அனைத்தையும் கற்று , அடிமைகளாய் நம்மை ஏற்று , அதிர்வில்லா அடைக்கலம் இட்டு .
                      நம் ஐம்பொறிகளை தீயில் சுட்டு, நடைபிணமாய் ஆக்கினரே அன்றாவது அறியவேண்டாமா ? அவர் சுட்ட புண் எரிச்சலை தாங்கிக்கொண்டோம் . நம் உணர்ச்சிகள் பொங்கி வழிவதனை நாம் எங்கே கண்டோம் .
                      சேரன்,சோழன் ,பாண்டியன் என்னும் மூவரை வைத்து முக்காலம் வென்று ! முற்றையும் அறிந்து நாம் என்னத்தை கையாண்டோம்.  நமது , எண்ணத்தையே நாம் கைதீண்டோம்.  இஸ்லாமியன் ஆயினும் என் தமையன்! கிருத்துவன் ஆயினும் என் மைத்துனன் என்றெல்லாம் ஊரறிய உமிழ் இறைத்தோம் !
                     இன்றோ , ஒரு படி நெல்லுக்காக உற்றானும் ஊரான் என்கிறோம் . பஞ்சம் பாடுகிறது நாம் அதில் தான் ஆடுகிறோம் . என்ன தான் நாம் நம் தாய் திருநாட்டில் வாழ்ந்தாலும் , தமிழ் மொழி  ஆயிந்தாலும், அறிகிறோமா நாம் ஆயிரத்தில் ஒன்றென ! மொழிகிறோமா என் தாய் திருநாடென! அன்று அவனாய் வாழ்ந்தான் ! இன்று இவனாய் வாழ்க்கிறான் ! நாளை எவனோ வாழ்வான் ! என்று தானே நாம் இன்னும்  ஏய்கிறோம்.
                   முக்காலத்தையும் வென்ற முந்தைய தமிழர்களே கேளுங்கள் ! முயற்சிகள் இன்றி முன்னேற்றம் கண்டதுண்டோ ? இகழ்ச்சிகள் இன்றி நாம் இன்னிமைகள் வென்றதுண்டோ ? இன்னா சொல்லையும்  இன்சொல்லாக ஏற்று ஈடுகொடுங்கள் ! இடைவிடாது ஈரம் விடுங்கள் ! " ஆற்றில் கடப்பதனால் பாறை கரைவதில்லை , ஆழம் இருப்பதனால் கடலும் வற்றவில்லை " கரையில் மிதக்கும் காகித கப்பலா ?
 கடலில் கிடக்கும் முத்தின் சிப்பிகளா ? முடிவெடுங்கள் ! - முடிவாய் எண்ண முயன்றால் கூட முட்டாள் என்ற சொற்பதம் அடைவாய் ,சரியாய் பாதையை தொடுத்தல் சொர்க பதம்  அடைவாய் .